Nantri Palipeedam Kattuvom Father.Berchmans Song Lyrics.
நன்றிப்பலிபீடம் கட்டுவோம்
நல்ல தெய்வம் நன்மை செய்தார்
செய்த நன்மை ஆயிரங்கள்
சொல்லிச் சொல்லி பாடுவேன்
நன்றி தகப்பனே நன்மை செய்தீரே
1. ஜீவன் தந்து நீர் அன்புகூர்ந்தீர்
பாவம் நீக்கிட கழுவி விட்டீர்
உமகென்று வாழ பிரித்தெடுத்து
உமது ஊழியம் செய்ய வைத்தீர் (வெளி 1:16)
2. சிறந்த முறையிலே குரல் எழுப்பும் (எபி 12:24)
சிலுவை இரத்தம் நீர் சிந்தினீரே
இரத்தக் கோட்டைக்குள் வைத்துக் கொண்டு
எதிரி நுழையாமல் காத்துக்கொண்டீர் (யாத் 12:13)
3. இருளின் அதிகாரம் அகற்றிவிட்டீர்
இயேசு அரசுக்குள் சேர்த்துவிட்டார்
உமக்கு சொந்தமாய் வாங்கிக் கொண்டு
உரிமைச் சொத்தாக வைத்துக் கொண்டீர் (கொலோ 1:13)
4. பார்க்கும் கண்களை தந்தீரய்யா
பாடும் உதடுகள் தந்தீரய்யா
உழைக்கும் கரங்களை தந்தீரய்யா
ஓடும் கால்களைத் தந்தீரய்யா
5. இருக்க நல்ல வீடு தந்தீர்
வாழத் தேவையான வசதி தந்தீர்
கடுமையாக தினம் உழைக்க வைத்தீர்
கடனே இல்லாமல் வாழ வைத்தீர் (மத் 26:28)
6. புதிய உடன்பாட்டின் அடையாளமாய்
புனித இரத்தம் ஊற்றினீரே
சத்திய ஜீவ வார்த்தையாலே
மரித்த வாழ்வையே மாற்றினீரே (1 பேது 1:20)
0 comments:
Post a Comment