Wednesday, November 03, 2010

நமது வேதாகமத்திலிருந்து சில விசேஷம், இது வித்தியாசங்கள்

  • 969 ஆண்டுகள் உயிர்வாழ்ந்த ஒரு அதிசய மனிதன் பற்றி ஆதி:5:27-ல் காணலாம்.
  • தேவகுமாரர் மனுஷகுமாரத்திகளை அதிக சௌந்தரியமுள்ளவர்களென்று கண்டு, தங்களுக்குப் பெண்களைத் தெரிந்துகொண்ட காலம் ஆதி:6:2 -ல் உள்ளது.
  • கற்களில் ஒன்றை தலையணையாக பயன்படுத்திய ஒரு நபர் இங்கே ஆதி:28:11
  • பிள்ளை பிறக்கும் முன்பே அதின் கையில் சிவப்புநூலைக் கட்டிய சம்பவம் ஆதி:38:28,29 -ல் உள்ளது.
  • ஒரு மனிதன் தன் கைகளை உயர்த்தி பிடித்ததினால் போரில் வெற்றி கொண்ட அதிசய சம்பவம் யாத்:17:11-ல்.
  • கழுதை ஒரு மனிதனிடம் பேசிய அதிசயம் எண்ணாகமம்:22:28.29-ல்.
  • 13 அடி நீளமும் 6 அடி அகலமும் உடைய இரும்புக்கட்டில் கொண்ட இராட்சத மன்னன் ஒருவன் உபாகமம்:3:11
  • விவாகம் செய்யும் முன் தலையை சிரைத்துக் கொள்ளவேண்டிய ஸ்திரி பற்றி உபாகமம்:21:11-13-ல்.
  • புருஷரின் உடைகளை ஸ்திரீகள் தரிக்கலாகாது, ஸ்திரீகளின் உடைகளைப் புருஷர் தரிக்கலாகாது உபாகமம்:22:5
  • சூரியன் அஸ்தமிக்கத் தீவிரிக்காமல், ஏறக்குறைய ஒரு பகல் முழுதும் நடுவானத்தில் நின்ற சம்பவம் யோசுவா:10:11
  • ஆணியை நெற்றியிலே அடித்து ஒரு மனிதனை கொன்று போட்ட ஸ்திரி நியாயாதிபதிகள்:4:17-21
  • தண்ணிரை நாய் நாவினாலே நக்குவது போல நக்கி குடித்த மனிதர்கள் பற்றி நியாயாதிபதிகள்:7:5
  • இடதுகை வாக்கான எழுநூறுபேர் கொண்ட ராணுவம் நியாயாதிபதிகள்:20:16
  • வருஷாந்தரம் சிரைத்துக்கொள்ளும் ஒருவனின் தலைமயிரின் நிறை ஏறக்குறைய மூன்று கிலோ. II சாமுவேல்:14:26
  • கைகளில் ஆறு, கால்களில் ஆறு என இருபத்து நான்கு விரல்களுள்ளவன்; II சாமுவேல்:21:20
  • எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் கொண்டவன் I இராஜாக்கள்:11:3
  • வானத்திலிருந்து அக்கினி இறங்கி வாய்க்காலிலிருந்த தண்ணீரை முழுவதும் நக்கிப்போட்ட அதிசயம் I இராஜாக்கள்:18 :38
  • இரதத்தை முந்தி ஓடிய ஒரு மனிதன் I இராஜாக்கள்:18 :45,46
  • இரும்புக் கோடரி தண்ணீரில் மிதந்த அதிசயம் II இராஜாக்கள்:6:6
  • மகனை ஆக்கித் தின்ற ஒரு ஸ்திரி II இராஜாக்கள்:6:29
  • ஸ்திரியின் மாமிசத்தை தின்ன நாய்கள் II இராஜாக்கள்:9:36
  • என்பத்தி எட்டு பிள்ளைகளை பெற்ற ஒரு மனிதன் II நாளாகமம்:11:21
  • பத்துப்பாகை பின்னோக்கிச் சென்ற சூரியன் ஏசாயா:38:8
  • மூன்றுவருஷம் வஸ்திரமில்லாமலும் வெறுங்காலுமாய் நடந்தவன் ஏசாயா:20:2,3
  • ஒரே இரவில் 185,000 பேர் சங்கரிக்கப்பட்டது ஏசாயா:37:36
  • விண்ணப்பம் செய்ததால் வாழ்நாளில் பதினைந்து வருஷம் கூடியது ஏசாயா:38:1-5
  • வெட்டுக்கிளியை ஆகாரமாகக் கொண்ட மனிதன் மத்தேயு:3:4

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment