Wednesday, September 05, 2007

சவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா

சவக்கடல் எனப்படும் Dead sea இஸ்ரேலின் ஒரு உப்புக்கடல் salt lake.உப்பால் நிறைந்தது.பிற கடல்களை விட ஒன்பது சதவீதம் உப்பு அதிகம்.இதனால் யார் வேண்டுமானாலும் இக்கடலில் மிதக்கலாம்,நடக்கலாம்.அவ்வளவு அடர்த்தியாய் உப்பு.

வேதாகம ஆபிரகாமின் காலத்தில் Sodom,Gomorrah பட்டணங்கள் அக்கிரம மிகுதியால் கடவுளின் பார்வையில் கோபத்துக்குள்ளாயின.
அந்நகரங்கள் முற்றிலும் நெருப்பால் அழிக்கப்பட்டன.கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின் மேலும்,வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.

அவ்விடம் இப்போது சவக்கடலாக மாறி கிடக்கிறதாக எனது நம்பிக்கை.இந்த வசனமும் அதை ஆமோதிப்பது போல் வருகிறது. ஆதியாகமம் 19:26 அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.

சவமாய் போன சோதோம்கொமாரா மக்களுக்கும் சவக்கடலுக்கும் ஒரு முடிச்சு. உப்புத்தூணாய்போன லோத்தின் மனைவிக்கும் உப்புக்கடலுக்கும் ஒரு முடிச்சு.

3 comments:

  1. halleluiah... praise the lord.

    (செப்பனியா 2:9)
    ஆகையால் மோவாப் சோதோமைப்போலும், அம்மோன் புத்திரரின்தேசம் கொமோராவைப்போலுமாகி, காஞ்சொறி படரும் இடமும், உப்புப்பள்ளமும் நித்திய பாழுமாயிருக்கும்;

    sam.d

    ReplyDelete
  2. its very interesting. And it is an new information for me.

    ReplyDelete
  3. praise the lord brother
    its very interesting, and it is an new information for me please

    ReplyDelete