தேவனுடைய பணிக்காக செலவிடப்பட்ட பணம் என்பது
நித்திய வாழ்வுக்காகக் கொடுக்கப்பட்ட முதலீடு ஆகும்.
நம்பினால் நம்புங்கள்
1860 ஆம் ஆண்டு வெளியான தமிழ் பைபிள் இது. கர்த்தர் என்கிற வார்த்தைக்கு பதிலாக பராபரன் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதை காணலாம். மனிதர்கள் இரட்சிக்கப்படுவதற்காகச் சருவலோக தயாபரரான கர்த்தர் அருளிச்செய்த சத்தியவேதமென்கிற பழைய ஏற்பாடு. இஃது மூலவாக்கியம் பெபுரிசியசையரால் (Fabricius) எபிரேயுபாஷையிலிருந்து தமிழிலே திருப்பப்பட்டது.
என் வேதத்தின் மகத்துவங்களை அவர்களுக்கு எழுதிக்கொடுத்தேன்; அவைகளை அந்நியகாரியமாக எண்ணினார்கள். ஓசியா 8:12
ஆரம்ப காலங்களில் சகல மிருகங்களும், பறவைகளும் மனிதர்களோடு ஒன்றியே இருந்துள்ளன. எந்த மிருகமும் பறவையும் மனிதர்களை கண்டு பயந்தோடியதில்லை. இதெல்லாம் ஆதியாகமத்தின் ஒரு வசனத்திலிருந்து எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது. அது எந்த வசனம் சொல்ல முடியுமா ? பதில் கீழே.