வெளிப்படுத்தின விசேசம் 11-ம் அதிகாரத்தில் வரும் இரண்டு சாட்சிகளை பற்றி நாம் முன்பே இங்கு பலமுறை பேசியிருக்கிறோம். உபத்திரவகாலத்தின் ஆரம்ப கட்டமான முதல் மூன்றரை வருட காலங்களில் இவர்கள் இருவரும் தேவ ஊழியத்தை எருசலேமை மையமாக கொண்டு செய்வார்கள். அநேக அற்புத அடையாளங்களை செய்யும் இவர்கள் அந்திகிறிஸ்துவுக்கும் உலகத்துக்கும் சிம்மசொப்பனமாக திகழ்வார்கள். இறுதியில் அவனாலேயே இவர்கள் இருவரும் இரத்தசாட்சியாக கொல்லப்படுவார்கள். தெருவில் இவர்கள் உடல்கள் கிடக்க உலகம் அதைப் பார்த்து கொண்டாடும்.
இப்போது அந்த இரண்டு சாட்சிகளுக்காக வீடு வாங்கும் / கட்டும் பணியில் நம் ஊர் ஊழியக்காரர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்காக ஆகும் செலவு 1.3 மில்லியன் டாலர்கள் எனவும் அதில் ஏற்கனவே 900,000 டாலர்கள் திரட்டப்பட்டுவிட்டது என்ற மகிழ்சியான செய்தியையும் ஏஞ்சல் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீட்டிலிருந்து தான் அந்த இரண்டு இரத்த சாட்சிகளும் வெற்றிகரமாக இயங்குவார்களாம். வானலோக சேனைகள் இங்கே தான் முகாமிட்டு பரத்துக்கு ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பார்கள் என்கிறது அந்த செய்தி குறிப்பு.”This will be their Command Center to coordinate their worldwide prophetic ministry. This House will also function as a gateway to the heavenly realm, a supernatural portal not opened to mortals but used by heavenly beings who will be ascending and descending through it with scrolls from the Council of the Prophets in heaven.” இன்னும் 400,000 டாலர்கள் தேவையிருக்க நாமும் நம் பணங்களை இந்த வீடு வாங்க கொடுத்து அதன் மூலம் கடவுளின் சுதந்திரவாளியாக மாற இது ஒரு அபூர்வமான வாய்ப்பு என்கிறது ஏஞ்சல் டிவி.
இந்த இரண்டு இரத்த சாட்சிகளும் குழந்தைகளாக பிறந்து வளர்ந்து இயேசு நாதரைப் போலவே வேதத்தை கற்று ஞானத்திலும் புத்தியிலும் தேவ கிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகம் அதிகமாக விருத்தியாகி வளர்ந்து வந்தால் அவர்களே அவர்கள் தேவைகளை தேவனிடமிருந்து கேட்டு பெற்றுக்கொள்வார்களாக இருக்கலாம். அதன் மூலமாக வெளிப்படுத்தின விசேச தேவ வாக்கியங்கள் நிறைவேறும். ஒருவேளை வானத்திலிருந்து திடீரென இளைஞர்களாகவே இவர்கள் குதித்து வந்தால் இந்த வீடு கண்டிப்பாக தேவைப்படும். ஆனால் துரதிஷ்ட வசமாக இந்த வீடு பற்றிய செய்தி நமது பைபிளில் இல்லை.
ஒரு வேளை தள்ளுபடியாகமங்களில் இருக்கலாம் அல்லது இது ”அவர்கள் தேவனின்“ ஒரு திடீர் திட்டமாக இருக்கலாம்.
இயேசு கிறிஸ்துவானவர் பூமிக்கு வருமுன் வழியை ஆயத்தம் பண்ண வந்த தீர்க்கதரிசியான யோவான் ஸ்நாபகனும் இதே அட்டகாசமான பணியை செய்திருந்தால் மாட்டுக்கொட்டிலில் இயேசு பிறந்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. அதுமட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப் பிறகும் இயங்கும் ஒரே கிறிஸ்தவ டிவி சேனல் ஏஞ்சல் டிவியாக இருப்பதால் இவர்கள் இருவரின் உடல்கள் தெருவில் கிடக்கும் போது அதை உலகமெல்லாம் ஒளிபரப்ப வசதியாக ஏஞ்சல் டிவியானது எருசலேமில் சேட்டலைட் வசதிகளை கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகிறது. ”இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள் இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோம்: தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்”
அப்போஸ்தலர் 5:38,39
ஏஞ்சல் டிவியின் House Of The Prophets(Two Witnesses),Jerusalem திட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள
http://www.jesusministries.org/Newsletter%202012%20English%20(web).pdf
மத்தேயு 24:4 ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.
Tuesday, May 01, 2012
வேதாகம இரண்டு சாட்சிகளுக்காக மில்லியன் டாலர் வீடு ரெடி
Labels:
Bible Prophecy,
End Time News,
Israel,
Jerusalem,
Revelation,
Tamil Nadu
Subscribe to:
Post Comments (Atom)
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்
அய்யோ...!!! அய்யோ....!!!
ReplyDeleteமுடியல.....
ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.!!!!!!!!!!!!!!!!
ReplyDeleteஎனக்கிது விழங்கவில்லையே???
ReplyDeleteஇரண்டு சாட்சிகளை எப்படிக் கண்டு பிடிக்கலாம். வசனத்தை தலை கீழாய் படித்துக் கரைத்துக் குடித்திருந்த வேத பாரகர், பரிசேயர்களால் இயேசு கிறிஸ்து அவர்கள் பிறந்து வளர்ந்து ஊழியம் செய்ததை கண்டு பிடிக்க முடியவில்லை அல்லவா! நாம் மாத்திரம் எப்படி அவர்களை சரியாக கண்டு கொள்ள முடியும்? அவர்களையும் கள்ளத் தீர்க்கதரிசிகள் என்று நாம் நினைக்க வாய்ப்பு இருக்கிறது அல்லவா??
ReplyDeleteஒரு உண்மை திரியுமா? கர்த்தருடைய ரகசிய வருகையில் எடுத்துகொள்லப்பட ஆயத்தமாக இருப்பவங்க இதபத்தி எல்லாம் கவலை படமாட்டாங்க. Jey..//
ReplyDelete