Wednesday, October 13, 2010

வேதாகம சுவாரஸ்யங்கள்


  • பழைய ஏற்பாட்டிலேயே மிகப் பழமையான புத்தகமாக சிலர் யோபுவையும் (கி.மு.1500), வேறு சிலரோ முதல் ஐந்து ஆகமங்களையும் (கி.மு 1446-1406) குறிப்பிடுகின்றனர்.
  • பழைய ஏற்பாட்டின் முதல் ஐந்து ஆகமங்களையும் எழுதியது மோசே. இவற்றை எபிரேய மொழியில் தோரா (Torah)என்பர். இது தான் யூதர்களின் புனிதப் புத்தகம்.
  • பழைய ஏற்பாட்டில் மிக சமீபத்தில் எழுதப்பட்ட புத்தகம் மல்கியா.இது எழுதப்பட்ட காலம் கி.மு 400.
  • புதிய ஏற்பாட்டின் மிகப் பழமையான புத்தகமாக கருதப்படுவது யாக்கோபு. இது கி.பி 45-ல் எழுதப்பட்டது.
  • புதிய ஏற்பாட்டின் லேட்டஸ்டாக எழுதப்பட்ட புத்தகம் வெளிப்படுத்தின விசேசம், இது கி.பி 95-ல் எழுதப்பட்டது.
  • எஸ்ரா:6 -க்கும் 7-க்கும் இடையே கன்பூசியசும் புத்தரும் மரித்துப்போனார்கள். (கிமு 516-458)
  • சங்கீத புத்தகத்தில் ஒரு ஹாட்ரிக் சாதனை உண்டு. வேதாகமத்தின் மிகச் சிறிய அதிகாரம் சங்கீதம் 117, நடுவான வசனம் சங்கீதம் 118-ல் உள்ளது. மிக நீளமான அதிகாரம் சங்கீதம் 119.
  • IIஇராஜாக்கள் 19 -ம் அதிகாரமும் ஏசாயா 37-ம் அதிகாரமும் ஜெராக்ஸ் எடுத்தது போல் ஒரே மாதிரியானவை. காப்பி பேஸ்ட் செய்யப்பட்டவை போலிருக்கும்.
  • I கொரிந்தியர் 13-ம் அதிகாரத்தை “அன்பின் அதிகாரம்” என்றால், எபிரெயர் 11-ம் அதிகாரத்தை “விசுவாசத்தின் அதிகாரம்” எனலாம்.
  • வேதாகமத்தில் பாட்டி என்கின்ற உறவுமுறை குறித்து ஒரே ஒருமுறைதான் குறிப்பிடப்பட்டுள்ளது.II தீமோத்தேயு 1:5.
  • வேதாகமத்தில் மிக அதிகமாக பேசப்படும் விலங்கு ஆடு. நாய்கள் பற்றி 14 முறையும் சிங்கத்தை குறித்து 55 முறையும் குறிப்பிடபட்டுள்ளது.வேதாகமத்தில் பூனை பற்றிய குறிப்பு ஒருமுறை கூட இல்லை.
  • வேதாகமத்தின் படி மிக அதிகமான நாட்கள் பூமியில் உயிரோடு வாழ்ந்தவர் மெத்தூசலா. இவன் நாளெல்லாம் தொளாயிரத்து அறுபத்தொன்பது வருஷம்.(ஆதி:5:27)
  • இருவர் வேதாகமத்தின் படி மரிக்கவேயில்லை.ஒருவர் ஏனோக்கு(ஆதி:5:22-24). இன்னொருவர் எலியா(IIஇராஜா:2:11). இவ்விருவரும் உயிரோடிருக்கும் போதே தேவனால் பரலோகத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்கள்.
  • வேதாகமத்தில் மிக பராக்கிரமசாலியான மனுஷன் சிம்சோன்.
  • மிக ஞானியாக திகழ்ந்தவர் சாலோமோன்.
  • மிகுந்த சாந்தகுணமுள்ளவனாயிருந்தவன் மோசே.(எண்:12:3)
  • மிகச் சிறந்த வீரனாக திகழ்ந்தவர் கிதியோன். தேவ உதவியோடு 135,000 மீதியானியர்களை வெட்டிப்போட்டவன்.
  • அதிக மனைவிகளையும், மறுமனையாட்டிகளையும் கொண்டிருந்தவர் சாலமோன் இராஜா.700 மனைவிகளையும் 300 மறுமனையாட்டிகளையும் கொண்டிருந்தார்.
  • வேதாகமத்தில் மிக உயரமான மனிதனாக வருபவன் கோலியாத்.ஒன்பதரை அடி உயரம்.
  • குள்ளமான மனிதனாக வர்ணிக்கப்பட்டவர் சகேயு.
  • எபிரேயன் என வேதாகமத்தில் முதன் முதலில் அழைக்கப்பட்டவன் ஆபிரகாம்.
  • எபிரேயர்கள் முதன் முதலாக யூதர்கள் என அழைக்கப்பட்டது II இராஜாக்கள்:16:6-ல்.
  • கிறிஸ்தவர்கள் அல்லது கிறிஸ்தவன் எனும் சொல் வேதாகமத்தில் மொத்தம் மூன்று இடங்களில் மட்டுமே வருகிறது. அப்:11:26,அப்:26:28 மற்றும் Iபேதுரு:4:16
  • வேதாகமத்தில் அந்திக்கிறிஸ்து எனும் வார்த்தை யோவான் சீஷனால் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. அவர் நான்கு முறை இந்த வார்த்தையை பயன்படுத்தியுள்ளார். மூன்று முறை Iயோவானிலும், ஒருமுறை IIயோவானிலும் வருகிறது. வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்தில் அந்திக்கிறிஸ்து எனும் வார்த்தை பயன்படுத்தப்படவேயில்லை
  • புதிய ஏற்பாட்டின் அதிகமான புத்தகங்களை எழுதியது அப்போஸ்தலனாகிய பவுல். இவர் எழுதிய புத்தகங்கள் மொத்தம் 14 .
  • யாரோ சொன்னார்கள் பைபிள் சொல்லின் விரிவாக்கம் B.I.B.L.E - Basic Instructions Before Leaving Earth

1 comment:

  1. மிக சுவாரஸ்யங்கள் உள்ளது.......thanks sir

    ReplyDelete