Wednesday, October 06, 2010

சிரிக்கவல்ல-சிந்திக்க சில உலக மொழிகள்

”ஓ, கடவுளே, இமாம் அல்-மக்தியின் வருகையை விரைவாக்கும். அவருக்கு நல்ல ஆரோக்கியத்தையும் வெற்றியையும் கொடும். எங்களை அவரை பின்பற்றுவோராக்கும், அவர் நீதியை சார்பவர்களையும் அப்படியே ஆக்கும்.”
-ஈரானிய அதிபர் மக்மூத் அகமதினஜாத் 23 செப்டம்பர் 2010 நியூயார்க் ஐநா சபையில் பேசியது.
"Oh, God, hasten the arrival of Imam Al- Mahdi and grant him good health and victory and make us his followers and those who attest to his rightfulness"
-Mahmud Ahmadinejad President of Iran before the 65th Session of the United Nations General Assembly New York 23 September 2010
http://www.president.ir/en/?ArtID=24129

“யூதப் படுகொலைகள் என்று ஒரு பொய்யான சம்பவத்தை உருவாக்கி அதை கடவுளுக்கும், மதங்களுக்கும் தீர்க்கதரிசிகளுக்கும் மேலாக கருதுகிறார்கள்”
-ஈரானிய அதிபர் மக்மூத் அகமதினஜாத்
"They have created a myth today that they call the massacre of Jews and they consider it a principle above God, religions and the prophets"
-Mahmud Ahmadinejad President of Iran
http://news.bbc.co.uk/2/hi/middle_east/4527142.stm

"யூதர்கள் நம்மைவிடவும் கடினமான வாழ்வா சாவா சூழ்நிலைகளை தாண்டி வந்திருக்கிறார்கள். யூதப் படுகொலைகளுக்கு சமமானது வேறொன்றும் இல்லை.
-பிடல் காஸ்ட்ரோ, முன்னாள் கியூபா அதிபர்.
”The Jews have lived an existence that is much harder than ours. Nothing compares to the Holocaust"
-Fidel Castro, former Cuban leader. Time September 20 2010 Page 22

“இஸ்ரேலியர் எங்களை மிரட்டினால் அவர்களை இரண்டே நாளில் ஒழித்து விடுவோம்.இதற்காகவே நாங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம்”
-முன்னாள் ரஷ்ய தூதுவர் ஆண்டொலி டாப்ரிமின்

“எங்களுடைய அடுத்த யுத்தம் ரஷ்யாவோடு இருக்கும்”
-முன்னாள் இஸ்ரேலிய ராணுவ அமைச்சர் மோசேடயான்

“We believe that the evil which was placed in the heart of the Arab world should be eradicated"
"அரபிய உலகின் மத்தியில் வைக்கப்பட்டிருக்கும் தீய சக்தியை நிர்மூலமாக்குவோம் என்று நம்புகிறோம்”
-முன்னாள் எகிப்திய ஜனாதிபதி நாசர் யோர்தானின் மன்னர் ஹூசேனுக்கு 13-3-1961-ல் எழுதியது.

“The Arab National aim is the elimination of Israel"
"அரபியருடைய தேசிய நோக்கம் இஸ்ரவேலை அழித்து தீர்த்துக் கட்டி விடுவது தான்”
-முன்னாள் எகிப்திய ஜனாதிபதி நாசர் இராக் ஜனாதிபதி ஆரப்போடு சேர்ந்து 25-5-1965-ல் வெளியிட்ட கூட்டறிக்கை.

”We are resolved, determined and united to achieve our clear aim of wiping Israel off the map.This is the day to wash away the stain.God willing we shall meet in TelAviv and Haifa"
"நாம் கூட்டாகவும் ,உறுதியாகவும் நமது தெளிவான நோக்கமாகிய இஸ்ரேல் நாட்டை உலகப்படத்திலிருந்து அழித்துப் போடத் தீர்மானித்து விட்டோம், இந்தக் கறையை கழுவிப்போட இது தான் தருணம். கடவுளுக்கு சித்தமானால் நாம் இஸ்ரவேலிலுள்ள டெல் அவீவிலும் யோப்பாவிலும் சந்திப்போம்”.
-முன்னாள் இராக் ஜனாதிபதி ஆரப் பாக்தாத் ரேடியோவில் 1-6-1967-ல் தம் கூட்டு நாடுகளுக்கு விடுத்த செய்தி.

“பாகிஸ்தானை தீவிரவாத நாடாக அறிவிக்க இஸ்ரவேல் தயார்”
-முன்னாள் இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர் சைமன் பெரஸ் 18:5:1993-ல் அறிவித்தது.

“This will be a war of extermination and a momentous massacre which will be spoken of like the Mongolian massacre and crusades"
"இந்தப் போர் சிலுவைப்போர் அல்லது மங்கோலியப் படுகொலையைப் போல் சடுதியில் சங்காரம் செய்து யூதரைக் கூண்டோடு அழிக்கும் யுத்தமாக இருக்கும்”
-15-5-1948-ல் அரபு கூட்டு நாடுகளின் பொது காரியதரிசி ஆஜம் பாஷா, இஸ்ரேலிய சுதந்திர போரில்.

”இஸ்ரேல் தாக்குதலை சம்மாளிக்க அரபுநாடுகள் உதவ வேண்டும்”
-லெபனான் ராணுவ அமைச்சர் முகமது சல்மான் 28-7-1993 அறிவித்தது.

”விண்வரை போனோம்.அங்கு ஒரே இருட்டாகவுள்ளது. கடவுளை தேடினோம். அங்கு காணவேயில்லை.”
-முன்னாள் ரஷ்ய அதிபர் குருசேவ் 1959

“இந்த யுத்தம், ( 1990 வளைகுடா போர்) யுத்தங்களுக்கெல்லாம் தாய் யுத்தம்”
-சதாம் உசேன் கூறியதாக தினமணியில்

“இஸ்ரேலுக்கு இது மாபெரும் நஷ்டம் தான். ஆனாலும் முயற்சியினால் முன்னேறுவோம்”
-ஈசாக் ராபின் 13-9-1993 PLO ஒப்பந்தத்தை தொடர்ந்து தினமலரில்

“இது பாலும் தேனும் ஓடும் நாட்டிற்கான தொடக்கமே”
-செப்டம்பர் 1993 ஒப்பந்தத்தின் போது பெரஸ் சொன்னதாக Hindu-ல்

“He said Arabs and Jews were cousins. Both descended from Abraham. He could not be a Muslim unless he regarded David as a prophet"
-Yassar Arafat 15-9-1993 Hindu
“அராபியர்களும் யூதர்களும் தூரத்து சகோதரர்கள். இரு குலத்தோரும் ஆபிரகாம் வழி வந்தவர்கள். தாவீது ஒரு தீர்க்கதரிசி என்று ஒவ்வொரு முஸ்லீமும் ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும்”
- செப்டம்பர் 1993 ஒப்பந்தத்தின் போது யாசர் அராபத் சொன்னதாக Hindu-ல்

"தனி நாடு மற்றும் எருசலேமை பற்றிய பேச்சுக்கே இடமில்லை”
-கிளிங்டன், ராபின் PLO ஓப்பந்தத்தில்

“எசே:37:1-23, ஏசா:43:5-7 இன்று இந்த வேதவாக்கியங்கள் நிறைவேறுகின்றன”
-டேவிட் பென் கூரியன் இஸ்ரேல் முதல் பிரதமர் 1948 மே 15 இஸ்ரவேல் நாட்டை பிரகடனபடுத்திய போது.

கிமு 1000-ல் முன்னுரைத்தது:
சங்கீதம்:83:4
அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment