Friday, January 15, 2021

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 800 ஆண்டுகள் பழமையான எத்தியோப்பிய தேவாலயம். Lalibela,Ethiopia.

ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 800 ஆண்டுகள் பழமையான எத்தியோப்பிய தேவாலயம். Lalibela,Ethiopia.


Thursday, January 07, 2021

பட்டிமன்ற புகழ் லியோனி அவர்கள் பாடும் காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு.

1. தொல்லை கஷ்டங்கள் சூழ்ந்திடும்
துன்பம் துக்கம் வரும்
இன்பத்தில் துன்பம் நேர்ந்திடும்
இருளாய்த் தோன்றும் எங்கும்
சோதனை வரும் வேளையில்
சொற்கேட்கும் செவியிலே
பரத்திலிருந்து ஜெயம் வரும்
பரன் என்னைக் காக்க வல்லோர்

காக்கும் வல்ல மீட்பர் உண்டெனக்கு
காத்திடுவார் என்றுமே

2. ஐயம் இருந்ததோர் காலத்தில்
ஆவி குறைவால்தான்
மீட்பர் உதிர பெலத்தால்
சத்துருவை வென்றேன்
என் பயம் யாவும் நீங்கிற்றே
இயேசு கை தூக்கினார்
முற்றும் என் உள்ளம் மாறிற்றே
இயேசென்னைக் காக்கவல்லோர்

3.என்ன வந்தாலும் நம்புவேன்
என் நேச மீட்பரை
யார் கைவிட்டாலும் பின்செல்வேன்
எனது இயேசுவை
அகல ஆழ உயரமாய்
எவ்வளவன்பு கூர்ந்தார்
என்ன துன்பங்கள் வந்தாலும்
என்னைக் கைவிட மாட்டார்

இன்றைக்கும் இருக்கும் பைபிளில் குறிப்பிட்டுள்ள‌ தெரு.

பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு தெரு சிரியா தேச‌த்தில் டமாஸ்கஸ் நகரில் உள்ள நேர்தெரு. பைபிளில் அப்போஸ்தலர் 9:11 ல் "அப்பொழுது கர்த்தர்: நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப்போய், யூதாவின் வீட்டிலே தர்சுபட்டணத்தானாகிய சவுல் என்னும் பேருள்ள ஒருவனைத் தேடு; அவன் இப்பொழுது ஜெபம்பண்ணுகிறான்" என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தெருவானது இன்றைக்கும் டமாஸ்கசில் அப்படியே உள்ளது பைபிள் எத்தனை உண்மை என்பதற்கு சான்றாக உள்ளது.



Tuesday, January 05, 2021

இன்றைக்கும் பிளந்து நிற்கும் கன்மலை.

 இன்றைக்கும் பிளந்து நிற்கும் கன்மலை.

பைபிளிலே ஒரு சம்பவம் உண்டு. பைபிள் கால மோசே, பாறை ஒன்றை பிளந்து பாலைவனத்தில் ஜனங்களுக்காக தண்ணீரை வரவழைத்த சம்பவம். பைபிள் சொல்லுகிறது "ஓரேபிலே நான் உனக்கு முன்பாகக் கன்மலையின்மேல் நிற்பேன்; நீ அந்தக் கன்மலையை அடி; அப்பொழுது ஜனங்கள் குடிக்க அதிலிருந்து தண்ணீர் புறப்படும் என்றார்; அப்படியே மோசே இஸ்ரவேல் மூப்பரின் கண்களுக்கு முன்பாகச் செய்தான்" (யாத்திராகமம் 17:6) இந்த இடம் இப்போதும் சவுதி அரேபியாவில் Al Bayad எனும் இடத்தில் இருக்கிறது.


Monday, January 04, 2021

இன்றைக்கும் கருகியிருக்கும் சீனாய் மலை.

அரபிதேசத்திலுள்ளது சீனாய்மலை (கலாத்தியர் 4:25). மோசே காலத்தில் கர்த்தர் சீனாய்மலையிலுள்ள கொடுமுடியில் இறங்கினபோது,அது முழுவதும் புகைக்காடாய் இருந்தது; அந்தப் புகை சூளையின் புகையைப்போல எழும்பிற்று (யாத்திராகமம் 19:18) என்று பைபிள் குறிப்பிடுகின்றது. அது போலவே இன்றைக்கும் சவுதி அரேபியாவிலுள்ள ஜெபெல் எல் லாஸ் (Jebel El Lawz) எனும் மலையின் உச்சி கருத்து கருகிப்போய் இருப்பதை காணலாம். தற்போது இந்த இடம் சவுதிஅரேபியா அரசாங்கத்தால் வேலி அடைத்து பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.