Saturday, November 17, 2007

மார்க்ஸூம் மாற்கும்

பொது உடைமைத் தத்துவத்தைத் தோற்றுவித்தவர் காரல் மார்க்ஸ்,(Karl Heinrich Marx அவரை மார்க்ஸ் என்று அவரது தோழர்கள் அன்பாய் அழைப்பார்கள்.அவருடைய காலம் கி.பி.1818-1883.

"ஏழை-பணக்காரன் என்ற வேறுபாடு கூடாது;சமூகச் சொத்துக்கள் சகலருக்கும் பொது"என்ற பொது உடைமைத் தத்துவத்தை உள்ளடக்கிப் பல நூல்கள் எழுதியுள்ளார்.

மார்க்ஸ் எழுதிய நூலைப்படித்து சோல்ஜர் ஒருவன் ஒரு குருவானவரிடம் வந்து "கள், சாராயம் ,கஞ்சா, அபின் போன்று போதை தரும் மதம் மக்களைக் கெடுக்கிறது.எனவே மதத்தைக் குழிதோண்டி புதைக்க வேண்டும்"என்றான்.

"முரட்டு வார்த்தைகளை உபயோகிக்கிறாயே,நீ நாத்திகனோ?"என்று கேட்டார் பாதிரியார்.

"மதம் என்ற குப்பையைப் புதைக்கவேண்டும் அல்லது சுட்டெரிக்கவேண்டும்"என்றான் பதிலுக்கு.

பாதிரியார் நிதானமாகப் பேசினார்:

"மார்க்ஸ் எழுதிய நூலையும் வாசித்திருக்கிறாய்,இதோ இந்த மாற்கு சுவிசேஷத்தையும் படித்துப் பாரேன்"என்று சொல்லி மாற்கு என்னும் நற்செய்தி நூலைக் கொடுத்தனுப்பிவிட்டார்.

ஒரு வாரம் கழித்து அந்த போர் வீரன் சொன்னான்."சுட்ட செங்கல் தண்ணீரை ஜிவ் என்று இழுப்பதுபோல மாற்கு சுவிசேஷகனின் வார்த்தைகள் என் உள்ளத்தை இழுத்து என்னை மாற்றிவிட்டது"என்றான்

அவன் கையில் மாற்கு சுவிஷேசம் மட்டும் உள்ளது. நம் கையில் அதைப்போல பெரிதும் சிறிதுமான 66 புத்தகங்கள் கொண்ட திருமறை இருக்கிறதே.அது நம்மை மாற்றி இருக்கிறதா?

சங்கீதம்:41:11
என் சத்துரு என்மேல் ஜெயங்கொள்ளாததினால், நீர் என்மேல் பிரியமாயிருக்கிறீரென்று அறிவேன்.

யாக்கோபு:5:20
தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்.

இங்கர்சாலும் கிறிஸ்தவமும்

கிரியையில்லாத கிறிஸ்தவம்...

நாத்திகன்

நாத்திகன் யார்? என்ற கேள்விக்கு பெரியார் ஒருவரின் பதில்:
"சரீரக்கண்ணால் பார்க்கக்கூடாத ஒருவருடைய உதவி யாருக்கு இல்லையோ அவன் நாத்திகன்"என்பதாகும்.கடவுள் இல்லை என்கிற ஒருவனுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிற இறைவனின் பங்கு எவ்வாறு கிடைக்கும்?

ராபர்ட் இங்கர்சால் (Robert G. Ingersoll)(காலம்:1833–1899) என்ற நாடறிந்த நாஸ்திகன் ஒருவன் வேதாகமத்தைக் குறைகூறி பல நூல்களை எழுதினான். தான் எழுதிய நாத்திகப் புத்தகமொன்றை தெய்வபக்தியுள்ள தன் அத்தைக்கு அனுப்பினான்.அந்நூலின் முதல் பக்கத்தில் அவன் கையால் எழுதி இருந்ததைக் கவனியுங்கள்:

"கிறிஸ்தவர்கள் எல்லோரும் என் அத்தை சாராளைப்போல் ஜீவித்தால் இப்புத்தகம் எழுதப்பட்டிருக்கமாட்டாது"

இதை வாசிக்கிறவர்களின் கவனம் இங்கர்சாலின் கையெழுத்தில் செல்லட்டும்.

மத்தேயு 7:16 அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்; முட்செடிகளில் திராட்சப்பழங்களையும், முட்பூண்டுகளில் அத்திப்பழங்களையும் பறிக்கிறார்களா?

Thursday, November 15, 2007

வேதாகமத்தில் வரும் மயில்கள்

I இராஜாக்கள்:10:22.
(சாலோமான்) ராஜாவுக்குச் சமுத்திரத்திலே ஈராமின் கப்பல்களோடேகூடத் தர்ஷீசின் கப்பல்களும் இருந்தது; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத்தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

II நாளாகமம்:9:21.
(சாலோமான்) ராஜாவின் கப்பல்கள் ஈராமின் வேலைக்காரருடன் தர்ஷீசுக்குப் போய்வரும்; தர்ஷீசின் கப்பல்கள் மூன்று வருஷத்துக்கு ஒருதரம் பொன்னையும், வெள்ளியையும், யானைத் தந்தங்களையும், குரங்குகளையும், மயில்களையும் கொண்டுவரும்.

இந்திய தேசிய பறவையான மயில் பற்றிய குறிப்புகள் புனித வேதாகமத்தில் காணக்கிடைக்கின்றன. அவை சில ஆச்சர்யமான உண்மைகளை வெளிகொணர்கின்றன. மேற்கண்ட பைபிள் வாக்கியங்கள் கிமு 990 வாக்கில் இஸ்ரேலின் ராஜாவாயிருந்த சாலோமோனின் காலத்தில் நடந்தவை. இங்கு தர்ஷீஸ் என குறிப்பிடப்படுவது கேரள மலபார் துறையாகவோ அல்லது இலங்கையின் இன்றைய ஈழப் பகுதியாகவோ இருக்கலாம் என கணிக்கிறார்கள். இது அந்தகால இஸ்ரேலர்களுக்கு தமிழர்களோடு இருந்த கப்பல்கள் வழி வியாபாரத்தொடர்பை குறிப்பதாக கருதலாம். ஏனெனில் எபிரேய மொழியில் மயிலை "Tuki" என்கிறார்கள். அது தமிழ் வார்த்தை "தோகை" யிலிருந்து வந்ததாகும். தமிழ் இலக்கியங்களான மலைபடுகடாமும் குறிஞ்சிபாட்டும் மயில்களை தோகை எனும் வார்த்தையாலே குறிப்பிடுகின்றன என்பது இங்கு குறிப்பிடதக்கது.

1492-ல் கிறிஸ்டோபர் கொலம்பஸோடு பயணம் போன லுயிஸ் டெ டாரெஸ் (Luis de Torres) எனும் யூதர் மேல்நாடுகளில் கால்வைக்கும் போது அங்கு வான்கோழிகளை கண்டு அவற்றை மயிலென நம்பி "Tuki" என அழைத்தாராம். அது பிற்பாடு Turkey என ஆனது. இன்றைக்கும் அமெரிக்காவில் இந்த டர்கி வான்கோழி நன்றிதெரிவித்தல் (Thanksgiving) நாளின் ஸ்பெஷல் மீல்.

Wednesday, November 14, 2007

Tamil Bible download in PDF format -New Testment

Using your mouse right click this link and click "Save Target as" to download Tamil Bible in PDF format -New Testment
Click here to download

Tamil Bible download in PDF format -Old Testment

Click here to download Tamil Bible in PDF format -Old Testment