Monday, February 13, 2012

தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ



கடந்த செவ்வாய்கிழமை (7 பிப்ரவரி 2012) பாகிஸ்தான் கராச்சி கடலோரப் பகுதியில் ஒதுங்கிய அந்த மாபெரும் திமிங்கலச் சுறாவைக் (Whale Shark) கண்டதும் பலருக்கும் பெருத்த அதிர்ச்சி. இத்தனை பெரிய கடல்வாழ் உயிரினங்கள் கடலில் வாழ்வது பலருக்கும் ஆச்சரியம். 40 அடி நீளத்தில் 6 அடி அகலத்தில் 7.7 டன் எடையில் இருந்த இந்த திமிங்கல சுறா ஒரு ஸ்கூல் பஸ்ஸின் அளவாக இருந்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன. பல கிரேன்களில் உதவியுடன் நான்கு மணிநேர போராட்டத்துக்குப் பின் கரைசேர்த்தனர். 2,200 டாலர் மதிப்பில் அது ஏலம் போனது. இந்த வகை மீன்களில் இது சிறியது எனவும் பெரிய அளவு 66 அடிவரைக்கும் நீளமாக இருக்கும் என சொல்கின்றார்கள். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

இதனை தனது குழந்தைகளுக்கு காட்டிக் கொடுக்க வந்த ஆங்கிலிக்கன் சபை போதகர் அஷரப் டேனியல் வேதபுத்தகத்தின் மீதான தனது நம்பிக்கை இன்னும் உறுதிப்படுவதாக தெரிவித்தார். அவர் கூறும் போது, ”யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்ததாக பைபிள் கூறுகிறது. எனது பிள்ளைகளும் தேவனின் வல்லமையை பார்க்கும் படியாக அவர்களை இங்கே கூட்டி வந்தேன்” என்றார். MSNBC செய்தி நிறுவனம் இதை லிவியாதான் (The leviathan) என தன் செய்திக்குறிப்பில் கூறியது யோபின் புத்தகத்தை நினைவு படுத்தியது. யோபு 41-ம் அதிகாரம் இப்படியாக தொடங்குகிறது. ”லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ? அதின் மூக்கை நார்க்கயிறுபோட்டுக் கட்டக்கூடுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ?”
வேதம் எத்தனை உண்மை. (வீடியோ செய்தி)

1 comment: