Sunday, November 19, 2006

அறிஞர்களும் வேதமும்

நான் ஒரு வேளை ஒரு சிறைச்சாலையில் அடைக்கப்படும் போது,என்னோடு ஒரே ஒரு புத்தகத்தை மாத்திரம் கொண்டு போகலாம் எனக் கூறினால், நான் பைபிளை (வேதாகமத்தை) மாத்திரமே தெரிந்தெடுப்பேன்-கோதே (Goethe)

வேதாகமம் ஒரு பழமையான புத்தகமோ, அல்லது புதுமையான புத்தகமோ அல்ல.அது நித்திய காலமாக உள்ள ஒரு அழிவற்ற நூலாகும்-மார்ட்டின் லுத்தர்

ஒரு சிறு பிள்ளையின் கேள்விகளுக்குப் பதிலளித்து விட்டு இவ்வுலக ஞானிகளின் அறிவைப் பரிகாசம் செய்யும் ஓர் புத்தகமே வேதாகமம்-பேராசிரியர் பீட்டெக்ஸ்

உலகப் புகழ்பெற்ற நூல்கள் பலவற்றை எழுதிய ஆங்கில எழத்தாளர் சர் வால்டர் ஸ்காட் தனது மரணப் ப்டுக்கையில் மரணத்தோடு போராடிக்கொண்டிருக்கும் பொழுது தனது மூத்த மகனிடம் ,"அந்தப் புத்தகத்தை எனக்குத் தா"என்றாராம்.மகன் அவரிடம்,"எந்தப் புத்தகத்தை அப்பா கேட்கிறீர்கள்?"என்று கேட்டார்.அப்பொழுது ஸ்காட் பதிலுரைத்தார்,"இவ்வுலகில் 'புத்தகம்' என அழைக்கப்படக்கூடிய ஒன்று உண்டானால் அது வேதாகமம் மாத்திரமே"!

நூறு முறை வேதாகமத்தை வாசித்து முடித்த பின் ஸ்பர்ஜன் கூறினார்,"நான் நூறாவது முறை வேதத்தை வாசித்த போது ,முதல்முறை வாசித்ததை விட அதை மிகவும் அழகுள்ளதாகக் கண்டேன்"

சங்கீதம்:19:10.
(கர்த்தருடைய வேதம்)பொன்னிலும், மிகுந்த பசும்பொன்னிலும் விரும்பப்படத்தக்கதும், தேனிலும் தேன்கூட்டிலிருந்து ஒழுகும் தெளிதேனிலும் மதுரமுள்ளதுமாய் இருக்கிறது.
More to be desired are they than gold, yea, than much fine gold: sweeter also than honey and the honeycomb.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment