Monday, November 13, 2006

மெய்வாழ்வும் மகிழ்ச்சியும் செல்வத்திலா?

இல்லை!
ஜேய் கோல்டுஎன்ற மிகப்பெரிய பணக்காரர் சென்ற நூற்றாண்டில் வாழ்ந்தவர்.அவரிடம் 700 மில்லியன் டாலர்கள் (சுமார் 864 கோடி)மதிப்புள்ள சொத்து இருந்தது.அவர் தான் மரிக்கும் போது "மகிழ்ச்சியே இல்லாத பரிதாபமானவன் இவ்வுலகில் நானாகத்தான் இருக்கும்"என்று கூறினாராம்.இவ்வளவு செல்வத்திலும் அவரால் உண்மையான மகிழ்ச்சியை அடைய முடியவில்லை.

ஜார்ஜ் ஈஸ்ட்மென் அமெரிக்காவிலிருந்த மிகப் பெரிய போட்டோ தொழிலகத்தின் மிக நேர்மையான அதிகாரியான இருந்தார்.
இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் வாழ்ந்தவர்.தனது செல்வத்தில் 750 மில்லியன் டாலர்களை தர்மத்திற்கென்று கொடுத்தவர்.அதுகூட அவர் வாழ்வில் முழுமையான மகிழ்ச்சியைக் கொடுக்கவில்லை.தனது 60ஆம் வயதில் மனதில் திருப்தி அற்றவராக 1932ஆம் ஆண்டு மார்ச்சு 14ஆம் நாள் அவர் தானே தன் உயிரை மாய்த்துக் கொண்டார்.என்ன பரிதாபம்.

இதேபோல் ராபர்ட் யங் என்ற மிகப்பெரிய கோடீஸ்வரர் தான் பெரிய அதிகாரியாக வேண்டும் என பெரும் போராட்டத்தில் ஈடுபட்டு முடிவில் நியூயார்க் மாநகரின் ரயில்வே அதிகாரியானார்.மன மகிழ்ச்சியின்மையின் காரணமாக தான் போராடி பெற்ற செல்வம்,அதிகாரம் எல்லாவற்றையும் எறிந்து விட்டு தனது அரண்மனை போன்ற "ப்ளோரிடா"என்ற மாளிகையில் 1958ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் நாள் தற்கொலை செய்து கொண்டார்.தான் போராடி பெற்ற மிகப்பெரிய பதவியின் மூலம் கிடைத்த செல்வத்திலும் அவருக்கு உண்மையான மகிழ்ச்சி கிடைக்கவே இல்லை.பரிதாபம் அன்றோ!

இன்பத்திலா?

இல்லை! பைரன் பிரபு (ஜார்ஜ் கார்டன்)என்பவர் ஆங்கிலக் காதல் காவியங்களை எழுதும் சிறந்த கவிஞர்.அவர் உலக இன்பத்தைக் காவியங்களின் வாயிலாக அனுபவிப்பவர்.அவர் தனது வாழ்வின் கடைசி ஆண்டான 36ஆம் வயதில் பின்வருமாறு காவியம் ஒன்றை எழுதினார்:

"என்னுடைய வாழ்நாளெல்லாம் பழுத்த இலையில் உள்ளது
மலரின் மணமும்,கனியின் சுவையும்,அன்பும் போய் விட்டது
பூச்சியும் புழுவும் துக்கமுமே என் பங்கு!"

உண்மையான மகிழ்ச்சியில்லாத வாழ்வால் நிம்மதியற்ற நிலையில் இவ்வாறு எழுதினார்.

பதவியிலும்,புகழிலும் கிடைக்குமா?

இல்லை! பெஞ்சமின் டிஸ்ரேலி என்பவர் புகழ்பெற்ற பிரிட்டீஷ் அதிகாரி.பதவி,புகழ் இரண்டையும் பெற்றவர்.அவர் பின்வருமாறு எழுதுகிறார்:

"இளமைப் பருவம் தவறானது,
இடைப்பருவம் போராட்டம் மிக்கது,
முதுமைப்பருவம் வருத்தம் மிக்கது"

பெரும் புகழும் பதவியும் பெற்றவர் இவ்வாறுஎழுதும் போது நம் நிலைமைஎன்ன? சற்றே சிந்திப்பீர்!

பலத்திலா?அதிகாரத்திலா?

இல்லை! மகா அலெக்ஸாண்டர் வரலாற்று சிறப்பு மிக்கவர்.அவர் தனது பலத்தால் இந்த முழு உலகத்தையே வென்றவர்.இத்தகைய ஆச்சரியமான வெற்றியின் முடிவில் தனது கூடாரத்தில் கண்ணீருடன் கூறினது:
"இனி வெற்றி பெற வேறு உலகம் இல்லை!"

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சாலமோன் ஞானி பின்வருமாறு தீர்மானித்து எழுதிவைத்துள்ளதை மேற்க்கண்டவர்கள் உறுதிபடுத்தினர்

பிரசங்கி:2:17. ஆகையால் இந்த ஜீவனை வெறுத்தேன்; சூரியனுக்குக்கீழே செய்யப்படும் கிரியையெல்லாம் எனக்கு விசனமாயிருந்தது; எல்லாம் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.
Therefore I hated life; because the work that is wrought under the sun is grievous unto me: for all is vanity and vexation of spirit.

அப்படியானால் எங்குதான் அந்த முழுமையான மகிழ்ச்சியினைக் காணமுடியும்?
இயேசு கிறிஸ்துவில் மட்டுமே!

யோவான் 6:35. இயேசு அவர்களை நோக்கி: ஜீவ அப்பம் நானே, என்னிடத்தில் வருகிறவன் ஒருக்காலும் பசியடையான், என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் ஒருக்காலும் தாகமடையான்.
And Jesus said unto them, I am the bread of life: he that cometh to me shall never hunger; and he that believeth on me shall never thirst.

சங்கீதம் 107:8. தவனமுள்ள ஆத்துமாவைக் கர்த்தர் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்புகிறாரென்று,
Oh that men would praise the LORD for his goodness, and for his wonderful works to the children of men!

அப்போஸ்தலர் 16:31. கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசி, அப்பொழுது நீயும் உன் வீட்டாரும் இரட்சிக்கப்படுவீர்கள்.
Believe on the Lord Jesus Christ, and thou shalt be saved, and thy house.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment