Thursday, November 30, 2006

நாத்திகன்

நாத்திகன் யார்? என்ற கேள்விக்கு பெரியார் ஒருவரின் பதில்: "சரீரக் கண்ணால் பார்க்கக்கூடாத ஒருவருடைய உதவி யாருக்கு இல்லையோ அவன் நாத்திகன்" என்பதாகும்.கடவுள் இல்லை என்கிற ஒருவனுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிற இறைவனின் பங்கு எவ்வாறு கிடைக்கும்?

ராபர்ட் இங்கர்சால் என்ற நாடறிந்த நாஸ்திகன் ஒருவன் வேதாகமத்தைக் குறைகூறி பல நூல்களை எழுதினான்.தான் எழுதிய நாத்திக புத்தகமொன்றை தெய்வ பக்தியுள்ள தன் அத்தைக்கு அனுப்பினான்.அந்நூலின் முதல் பக்கத்தில் அவன் கையால் எழுதி இருந்ததைக் கவனியுங்கள்:
"கிறிஸ்தவர்கள்எல்லோரும் என் அத்தை சாராளைப் போல் ஜீவித்தால் இப்புத்தகம் எழதப்பட்டிருக்க மாட்டாது."
இதை வாசிக்கிறவர்களின் கவனம் இங்கர்சாலின் கையெழுத்தில் செல்லட்டும்.

யாக்கோபு:1:22. அல்லாமலும், நீங்கள் உங்களை வஞ்சியாதபடிக்குத் திருவசனத்தைக் கேட்கிறவர்களாய் மாத்திரமல்ல, அதின்படி செய்கிறவர்களாயும் இருங்கள்.

James:1:22.But be ye doers of the word, and not hearers only, deceiving your own selves

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment