Tuesday, December 04, 2018

எகிப்து இராணுவம் அடியில் இருப்பது தெரிந்தும் செங்கடலை கடந்த மோசஸ்! ஆராய்ச்சியாளர்கள் உறுதி.!

எகிப்து இராணுவம் அடியில் இருப்பது தெரிந்தும் செங்கடலை கடந்த மோசஸ்! ஆராய்ச்சியாளர்கள் உறுதி.!

By Vivek SivanandamDecember 2, 2018
கிமு 14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மிகப்பெரிய எகிப்து இராணுவத்தின் எச்சங்களை, சூயஸ் வளைகுடாவில் தற்போதுள்ள நவீன நகரத்தின் கடற்கரையில் இருந்து சுமார் 1.5கிலோ மீட்டர் தொலைவில், நீரடி தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளதாக எகிப்து தொல்பொருள் அமைச்சகம் அறிவித்துள்ளது.

இக்குழுவானது கற்காலம் மற்றும் வெண்கல காலத்தில் செங்கடல் பகுதியின் வர்த்தகத்துடன் தொடர்புடைய பழங்கால கப்பல்கள் மற்றும் கலைப்பொருட்களை தேடி ஆராய்ச்சிகள் மேற்கொண்டபோது, கடலுக்கடியில் பல ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் மலைபோல குவிந்திருக்கும் மனித எலும்புகளை கண்டு அதிர்ச்சியடைந்தது.

கைரோ

கைரோ

கைரோ பல்கலைகழகத்தின் தொல்பொருள்ஆய்வு பிரிவை சேர்ந்த போராசிரியர் அப்துல் மொகமத் காதர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, 400க்கும் அதிகமான வெவ்வேறு எலும்புக்கூடுகள், நூற்றுக்கணக்கான ஆயுதங்கள் மற்றும் கவசங்கள், 2 ஊர்திகளின் பாகங்கள் போன்றவற்றை கண்டறிந்துள்ளனர்.
5000க்கும் அதிகமான எலும்புக்கூடுகள்

5000க்கும் அதிகமான எலும்புக்கூடுகள்

5000க்கும் அதிகமான எலும்புக்கூடுகள் இந்த பெரிய பரப்பு முழுவதும் சிதறிக்கிடப்பதாக கணக்கிட்டுள்ள இந்த குழு, இங்கு மிகப்பெரிய இராணுவம் இருந்திருக்கலாம் என கூறுகிறது.இக் குறிப்புகள் உணர்த்துவது யாதெனில், இவையெனைத்தும் பிரபல எக்ஸ்சோடஸ் அத்தியாத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம்.
பழங்கால இராணுவ வீரர்

பழங்கால இராணுவ வீரர்

இந்த பகுதியில் கப்பல்கள் ஏதும் தென்படாததால், அந்த பழங்கால இராணுவ வீரர் நிலப்பரப்பில் இறந்திருக்கலாம். இந்த எலும்புக்கூடுகள் இருக்கும் நிலை மற்றும் அவர்கள் அதிகமான மண் மற்றும் பாறைகளால் தடுத்து நிறுத்தப்பட்டிருப்பதை வைத்து பார்க்கும் போது, சுனாமி அல்லது நிலச்சரிவின் காரணமாக அவர்கள் இறந்திருக்கலாம்.
கோபேஸ்

கோபேஸ்

கோபேஸ் எனும் மிளிரும் கூரிய எகிப்திய போர்வாள் அவர்களின் முக்கிய ஆயுதமாக இருந்தது என்பதில் சந்தேகமில்லை.ஆடம்பரமாக அலங்கரிக்கப்பட்டிருந்த ரதத்தின் எச்சங்களும் அங்கு கண்டுபிடிக்கப்பட்டதால், அது அரசன் அல்லது பிரபுபின் வாகனமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
அறிஞர்கள்

அறிஞர்கள்

இங்குள்ள சடலங்களை வைத்து பார்க்கையில், ஒரு மிகப்பெரிய பழங்கால இராணுவம் இந்த இடத்தில் அழிந்துள்ளதாக தெரிகிறது.யுதர்கள் செங்கடலை கடக்கும் போது எகிப்து இராணுவத்தை அழித்துபோல பைபிளில் கூறப்பட்டுள்ள செங்கடலை கடக்கும் சம்பவத்தை இது உறுதிபடுத்துகிறது.

எகிப்தின் மாபெரும் இராணுவம் செங்கடலின் நீரால் அகேனதனின் ஆட்சியில் அழிக்கப்பட்டதை இது காண்பிக்கிறது. பிரபல பைபிள் கதையான 'செங்கடலை கடத்தல்' பெரும்பாலான அறிஞர்கள் மற்றும் வரலாற்றாளர்களால் இழிவுபடுத்தப்பட்டது. ஆனால் ஆச்சர்யமளிக்கும் வகையில் இந்த கண்டுபிடிப்பானது, அந்த கதை உண்மையான வரலாற்றின் அடிப்படையிலானது என்பதற்கான மறுக்கமுடியாத ஆதாரமாக உள்ளது.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment