Tuesday, February 19, 2008

கோபம்..புத்தி புகட்டிய நாய்

கோபம்..
புத்தி புகட்டிய நாய்


பிரசங்கிகளின் ராஜன் எனப் பேர் பெற்ற ஸ்பர்ஜன் ஐயருக்கு பூந்தோட்டம் அதிகப் பிரியம். அவருடைய தோட்டத்தின் ஒரு பாகத்தில் ரோஜாச்செடிகள் பூத்திருக்கின்றன. இன்னோர் பாகத்தில்-ரோஜாச் செடி பதியமிட்டிருக்கிற இடத்தில் அவருடைய நாய் படுத்துக்கொண்டு பதியக் குச்சிகளை வெளியே இழுத்துப் போட்டிருக்கிறதை பார்த்துவிட்டார்.

ஐயரவர்களுக்குத் தாங்க முடியாத கோபம் வந்து விட்டது. தோட்டத்தின் ஒரு மூலையில் கிடந்த தடிக்கம்பை எடுத்து எறிந்தார். கம்பு நாய்மீது படாமல் பக்கமாய் விழுந்திருக்கிறது. உடனே அந்த நாய் தடிக்கம்பை வாயில் கவ்வி, வாலை ஆட்டிக்கொண்டு ஸ்பர்ஜன் ஐயர் இருந்த இடத்துக்குப் போய், தலையைத் தூக்கி திரும்பவும் தடியை எடுத்து எறியுங்கள் என்று கெஞ்சிக் கேட்கும் பாவனையில் நின்றதாம்.

நாய் நிற்கிற பாங்கினைப் பார்த்து ஆச்சரியத்தில் மூழ்கிவிட்டார் ஐயர். தடியை தூக்கி தூர எறிந்தார். பகுத்தறிவற்ற பிராணி என் கோபத்தை மாற்றி எனக்கு புத்தியும் கற்பித்துவிட்டதே என்றுணர்ந்து நாயை அன்போடு வருடி சமையல் அறைக்குக் கொண்டு போய் நல்ல சாப்பாடு கொடுத்து அனுப்பினார்.

நீதிமொழிகள்:15:1
மெதுவான பிரதியுத்தரம் உக்கிரத்தை மாற்றும்; கடுஞ்சொற்களோ கோபத்தை எழுப்பும்.

எபேசியர்:6:4
பிதாக்களே, நீங்களும் உங்கள் பிள்ளைகளைக் கோபப்படுத்தாமல், கர்த்தருக்கேற்ற சிட்சையிலும் போதனையிலும் அவர்களை வளர்ப்பீர்களாக.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment