Saturday, February 09, 2008

ஒருவனாகிலும்

கிறிஸ்துவுக்காய் செலவு செய்வதில் நம்மில் அநேகருக்கு அதிகமாய் ஆர்வம் இருப்பதில்லை. உலக பிரகாரமான புராஜெக்ட்களுக்கு உலகம் எவ்வளவாய் செலவு செய்கின்றார்களென்று பாருங்கள். கோடிக்கணக்கான பணங்கள் செலவு செய்து திரைப்படங்களை எடுக்கிறார்கள். லட்சக்ககணக்காண ரூபாய்கள் செலவு செய்து தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், விடுதிகள், வீடுகள் என லாபநோக்கில் அமைக்கின்றார்கள். நாமும் கூட அவ்வாறே. தனியொருவர் நன்மைக்காக கணக்கு வழக்கின்றி செலவளிக்க முற்ப்படும் நம்மால் கடவுள் பணிக்கு அதிகம் கொடுக்க முன்வருவதில்லை. தன் கடைசி நயா பைசா வரைக்கும் செலவுசெய்து நூறாண்டுகளுக்கு முன் மக்கள் சேவையே இறை சேவையென கருதி அந்தகால கிறிஸ்தவ மிஷனரிமார்கள் மருத்துவமனைகளையும், பள்ளிக்கூடங்களையும் எழுப்பிச் சென்றார்கள்.

"இந்தத் தைலத்தை (பணத்தை) இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்? இதை முந்நூறு பணத்திற்கு அதிகமான கிரயத்துக்கு விற்று தரித்திரருக்குக் கொடுக்கலாமே" என்று அவர்கள் சிந்திக்கவில்லை.(மாற்கு:14:5) அதன் பலனை இன்றைக்கு உலகறியும். பல கல்விமான்களை, கணிணி மேதைகளை, பிரபல மருத்துவர்களை அவை உருவாக்கின. கிறிஸ்துவின் நாமம் அவர்கள் மூலம் மகிமைப்பட வேண்டும்.

1992,1993-ல் "பைபிள்"எனும் தொலைக்காட்சி தொடர் தூர்தர்ஷன் சானலில் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது.அதில் கிறிஸ்தவ வேதாகம கதைகள் உலகம் சிருஷ்டிக்கப்பட்ட நாள் முதல் நடைபெற்ற சம்பவங்கள் அழகாய் படமாக்கப்பட்டு ஒளிபரப்பப் பட்டன. பலருக்கும், ஏன கிறிஸ்தவர்கள் சிலருக்கு கூட அது பிடிக்கவில்லை. முடிவில் அது ஒளிபரப்பாவது நிறுத்தப்பட்டது.ஏதேதோ காரணங்களால் அப்படியாகிப் போனது.யாரும் அதை தொடர்ந்து ஒளிபரப்பாக ஆக வேண்டிய முயற்சியை செய்யவில்லை.

இப்படியாக பைபிள் டிவி தொடர் 'கட்'டானதை தொடர்ந்து வெளியான கட்டுரை ஒன்றில் "தி வீக்" பத்திரிகை இந்த வசனம் எழுதி அதை தொடங்கியது. அது என்ன? "நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை." (சங்கீதம்:14:3) என்ற வசனம் தான். (The Week 25:6:1993)

There is no one who does good, not even one. (Psalm 14:3)

3 comments:

  1. உண்மையில் நடந்துகொண்டிருக்கும் சம்பவமே நன்றி தங்களுடைய இ மெயில் ஐடியை தருவீர்களா

    ( christhunesan@gmail.com )

    ReplyDelete
  2. ஓ கண்டிப்பாக
    thewayofsalvation@yahoo.com

    தங்களின் வருகைக்கு மிகவும் நன்றி.

    ReplyDelete
  3. இந்த டிவி நிகழ்ழ்ச்சி தடை செய்ய முஸ்லீம்கள் அதிகமான காரணம் என்று அப்பொழுது அநேகர் பேசிக்கொண்டார்களேன் என்ரால் பைபிளில் ஆகார் அடிமை பெண் என்றும் பலியிடக்கொண்டு போகப்பட்டவர் ஈசாக்குதான் என்பதையும் பைபிள் ஆணித்தரமாக சொல்லியுள்ளதால் படம் எடுப்பவர்கள் அதை கண்டிப்பாக எடுப்பார்கள்,அப்படி எடுத்தால்,அதுவு அரசாங்க சேனலில் அது வெளிவந்தால் தங்கள் வேதம் பொய் என்று ஆகிவிடும் என்பதானால் என்று காரணம் சொன்னார்கள்.அது எந்த அளவு உண்மை என்பது எனக்கு தெரியாது.

    ReplyDelete