Tuesday, June 29, 2010

அமெரிக்காவிற்குப் பின்

இதுகாலும் உலக சரித்திரத்தில் பல இராஜாக்களை உருவாக்கியவரும், பிரபலமான ராஜாக்கள் பலரை சிம்மாசனத்தை விட்டு தள்ளி இறக்கி விட்டவரும் நம் தேவன். தானியேல் 2:21 இப்படியாக சொல்கிறது. அவர் காலங்களையும் சமயங்களையும் மாற்றுகிறவர்; ராஜாக்களைத் தள்ளி, ராஜாக்களை ஏற்படுத்துகிறவர்; ஞானிகளுக்கு ஞானத்தையும், அறிவாளிகளுக்கு அறிவையும் கொடுக்கிறவர் என்று. சங்கீதம் 2 சொல்கிறது பூமியின் ராஜாக்கள் எழும்பிநின்று, அதிகாரிகள் ஏகமாய் ஆலோசனைபண்ணுவதை பார்த்து பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பாராம்; ஆண்டவர் அவர்களை இகழுவாராம்.

இதற்கு இன்றைக்கு பெரிதாய் எழும்பி நிற்கும் மகாவல்லரசுகளும் விதி விலக்கல்ல. வேத புத்தகத்தை புரட்டும் பலரும் ஏகமாய் கூறும் ஒரு கருத்து அமெரிக்க வல்லரசின் வீழ்ச்சி. அதன் நெறிகெட்ட, தறி கட்ட தனம் அங்கேதான் கொண்டு போய்விடுமோ என்னமோ? வேதாகம தீர்க்கதரிசனங்களில் எங்கேயுமே அமெரிக்கா பற்றி குறிப்பிடவில்லையேயென பலரும் சந்தேகம் தெரிவிக்க, அதன் இன்றைய அதிபருக்கும் அதே சந்தேகம் தான் போலும். அவர் கையில் வைத்திருப்பது Fareed Zakaria’s “The Post-American World.” என்னும் புத்தகம்.

http://papercuts.blogs.nytimes.com/2008/05/21/what-obama-is-reading/

Wednesday, April 21, 2010

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது பாடல்


Unga Kirubai Thaan Ennai Thangukintrathu Unka Kirubai Thaan Ennai Nadathukintrathu Lyrics

உங்க கிருபைதான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபைதான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

சோர்ந்துபோன நேரத்திலெல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

ஒன்றுமில்லா நேரத்திலெல்லாம்
எனக்கு உதவி செய்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

ஊழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்திவைத்த கிருபை இது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே -2

Thursday, March 18, 2010

முழங்கால்களை முடக்கிய ஹெய்தி

பிப்ரவரி மாதம் 12-ம் தியதி ஹெய்தி அதிபர் பிரவல் மூன்று நாள் உபவாச ஜெபத்துக்கு தன் நாட்டு ஜனங்களை அழைப்புவிடுத்திருந்தார். பத்துலட்சத்துக்கும் அதிகமான ஹெய்தி மக்கள்
இந்த உபவாசஜெபத்துக்கு திரண்டு வந்திருந்தார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு (ஜனவரி 12) நடைபெற்ற மாபெரும் ஹெய்தி பூகம்பத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 233,000.

பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும்.இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம்.
(மத்:24:7,8)
என் நாமம் தரிக்கப்பட்ட என் ஜனங்கள் தங்களைத் தாழ்த்தி, ஜெபம்பண்ணி, என் முகத்தைத் தேடி, தங்கள் பொல்லாத வழிகளைவிட்டுத் திரும்பினால், அப்பொழுது பரலோகத்திலிருக்கிற நான் கேட்டு, அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் தேசத்துக்கு க்ஷேமத்தைக் கொடுப்பேன்.
(II நாளாகமம் 7:14)
தேவன் ஹெய்தியை கண்ணோக்குவாராக. அவர்களுக்கு இரங்குவாராக.

Haiti - "A Call To Fasting & Prayer"
On February 12, 2010, President Préval of Haiti called his nation to 3 days of fasting and prayer in place of the regular Mardi Gras celebration. Several of the Nations Christian Leaders had 5 days to set up and arrange this event, Pastor Rene Joseph of Loving Hands Ministry was one of the head leaders and over 1 million Haitians attended this epic event.
May God bless Haiti!

Friday, March 05, 2010

பிரபல கேள்விகளும் பதில்களும்

பிரபலமான பதில் சொல்ல கடினமான கேள்விகள் பலவற்றிற்கு சகோ.ஜஸ்டின் பிரபாகரன் அவர்கள் அளிக்கும் பதில்கள்.

Famous God,christian,bible based questions are answered in Tamil by Bro Justin Prabakaran.

Download this video.
Famous questions are answered in Tamil by Bro Justin Prabakaran

Thursday, March 04, 2010

அன்பை விட்டாய்

அன்பை விட்டாய் அமெரிக்கா.
நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டு விட்டாயே.
நீ ஆதியில் கொண்டிருந்த அன்பை விட்டாய் என்று உன்பேரில் எனக்குக் குறை உண்டு.(வெளி:2:4)
தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? (IIகொரி:6:16)
ஆகையால் எனக்குப் பிரியமானவர்களே, விக்கிரகாராதனைக்கு விலகி ஓடுங்கள்.(Iகொரி:10:14)
நீ இன்ன நிலைமையிலிருந்து விழுந்தாயென்பதை நினைத்து, மனந்திரும்பி, ஆதியில் செய்த கிரியைகளைச் செய்வாயாக; இல்லாவிட்டால் நான் சீக்கிரமாய் உன்னிடத்தில் வந்து, நீ மனந்திரும்பாதபட்சத்தில், உன் விளக்குத்தண்டை அதனிடத்தினின்று நீக்கிவிடுவேன்.(வெளி:2:5)
பிள்ளைகளே, நீங்கள் விக்கிரகங்களுக்கு விலகி, உங்களைக் காத்துக்கொள்வீர்களாக. ஆமென்.(Iயோ:5:21)

Barack Obama celebrates Diwali 2009 at White House.
All the best Obama.