Sunday, May 11, 2008

லியோ டால்ஸ்டாய்-"குற்றமும் தண்டனையும்"

"குற்றமும் தண்டனையும்"(War and Peace) என்பது ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy 1828-1910) எழுதியதொரு புகழ்மிக்க நாவல்.

அதில் றோஸ்கோலவ் என்னும் கொலைகாரனும் சோன்யா (Sonya Rostova) என்னும் விபச்சாரியும் உரையாடும் காட்சி.

தந்தை குடிவெறியால் நிறைந்திருக்க தனது இளைய சகோதரர்கள் பசியால் வாடும் சூழ்நிலையின் காரணமாகவே தான் விபச்சாரியாக மாறினதாக சோன்யா கூறுகிறாள்.

"நீ ஆண்டவரிடம் தினந்தோறும் ஜெபிப்பாயா?" என்று சோன்யாவைக் கேட்டபோது; "ஆண்டவரில்லாவிட்டால் நான் எப்படி இருக்க முடியும்?"என்று மெல்லிய குரலில் திருப்பிக்கேட்டாள்.

ஆண்டவர் உனக்கு ஜெபத்துக்கு பதிலாக என்ன தருகிறார் என்று கேட்டபோது "அதனை கேட்கவேண்டாம்-அவரே எனக்கு எல்லாவற்றையும் செய்கிறார்" என்றாள்.

றோஸ்கோலவ் சோன்யாவின் இளைய தங்கை போலென்காவிடம் "ஜெபம் பண்ணத் தெரியுமா?"என்று கேட்கிறான்.

உடனே அவள் தெரியும்- பல ஆண்டுகளாக எனக்குத் தெரியும். நான் தனியாக பிரார்த்தனை செய்வேன்.மரியாளே வாழ்க-எங்கள் அக்கா சோனியாவை ஆசீர்வதியும்-மன்னியும்-எங்கள் தந்தையை ஆசீர்வதியும் என்று ஜெபிப்போம் என்றாள்.

சோன்யாவும், போலென்காவும் ஆண்டவரிடம் எப்படி அன்புகூருகிறார்கள்? அவர்களுக்கு மதம் என்பது வலியைப்போக்கும் மருந்து போன்றதா? மதுவைப்போன்றதா?

கொலைகாரன் மாறினான்!

மதுவும் ,மருந்தும் மனித இதயங்களை அழிக்கிறது. சோன்யா ஆண்டவரிடம் கொண்டுள்ள அன்பு வலுவானது.எனவே அவளது வார்த்தைகள் கொலைகாரனான றோஸ்கோலவ் மனதை மாற்றிவிடுகிறது.

எனவே அவளது நம்பிக்கையின் பின்னணியாக ஒரு உண்மை இருக்கவேண்டும்!

சோன்யா றோஸ்கோலவிடம் ஒரு சிலுவையை தந்து பரிசுத்த வேதாகமத்திலிருந்து சில பகுதிகளை வாசித்துக் காட்டுகிறாள்.

இதனால் இதுவரை மறைந்து வாழ்ந்துகொண்டிருந்த கொலைகாரனான றோஸ்கோலவ் சைபீரியாவுக்கு சென்று போலீசாரிடம் சரணடைந்து புதுவாழ்வு ஆரம்பிக்கிறான்.

சோன்யா அரிவாள் சுத்தியலை அவனிடம் தந்து ஸ்டாலினின் "சொற்பொழிவு சுருக்கத்தையோ", "டாஸ்காபிட்டல்" என்னும் புத்தகத்தையோ அவனிடம் தந்திருந்தால் என்ன நடந்திருக்கும்?

சிலருக்கு மதம் என்பது வாழ்வின் அனேக சந்தோசங்களுள் ஒன்று-கலைகளில் ஒன்று.

ஆனால் சிலருக்கு எல்லாம் மதம் தான்.ஆண்டவரை அனைத்திலும் காண்கின்றனர்.ஆண்டவர் நேசிக்கத்தக்கவர்- நம்புவதற்கு தகுதியானவர். அவரது வழிகள் மறைமுகமாயினும் அது ஏற்கத்தக்கது என்று நம்புகின்றனர். இவர்கள் நாத்திகரது வாதங்களை புரிந்து கொள்கின்றனர். ஆனால் நாத்திகர்கள் இவர்களது வாதங்களை எப்படி புரிந்துகொள்ள போகின்றனர்?

-The answer to Moscow`s bible-ரிச்சர்ட் உம்பிராண்ட்

"கடவுள் இல்லாமல் எந்த எழுத்தாளனும் இருந்தது இல்லை. "கடவுள் உண்டா இல்லையா? வாழ்நாள் முழுவதும் என்னை வதைத்துக் கொண்டிருந்த பிரச்சினை இது. இதை வைத்துத்தான் முட்டாள் என்ற நாவலை எழுதினேன்" என்கிறார் தாஸ்தாவஸ்கி. அவருடைய பாத்திரங்கள் எல்லாமே இந்தப் பிரச்சினைக்குள்தான் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கின்றன. ஒருமுறை தாஸ்தாவஸ்கி எழுதினார்: "உண்மைக்கும் கிறிஸ்துவுக்கும் சம்பந்தமில்லை என்று யாராவது நிரூபித்து விட்டால் கூட நான் அந்த உண்மையின் பக்கம் செல்லாயேமல் கிறிஸ்துவின் பக்கமே நிற்பேன்." அவருடைய கரமஸோவ் சகோதரர்கள், முட்டாள், குற்றமும் தண்டனையும் என்று எல்லா நாவல்களிலும் இதே பிரச்சினைதான் முன்வைக்கப் பட்டிருக்கிறது. இவான் கரமஸோவ் சொல்லுவான் "நான் ஒத்துக் கொள்ளாதது கடவுளை அல்ல; இந்த உலகத்தையும், இங்கே உள்ள இத்தனை ஆயிரம் கடவுள்களையும் கடவுள்தான் படைத்தார் எனபதைத்தான் நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் என்கிறேன்." வேறொரு இடத்தில் ஸொஸிமா சொல்லுவான், "இந்த ரஷ்ய தேசத்தின் எல்லாத் தீமைகளையும் போக்கக் கூடிய வல்லமை படைத்த ஒன்றே ஒன்று கிறித்தவம்தான்" என்று. இப்படி தாஸ்தாவஸ்கி நம்பினார்.

நம்பிக்கைக்கும் நம்பிக்கையின்மைக்குமான போராட்டம் இது.

நம்பிக்கையின் பக்கம் கவிஞனும், நம்பிக்கையின்மையின் பக்கம் தத்துவவாதியும் நின்று கொண்டிருக்கிறான்."

-CN

Monday, April 21, 2008

காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்

பரிசுத்த வேதாகமத்தில் இப்படியாக ஒரு வாக்கியம் வரும். அதாவது உலகின் இறுதிகாலங்களில் தனது வலதுகையிலோ அல்லது நெற்றியிலோ ஒரு குறிப்பிட்ட முத்திரையில்லாதவன் வாங்கவும் விற்கவும் இயலாது என்பதாகும்.இன்றைக்கு உங்களிடம் கைநிறைய கரன்சிநோட்டுகள் இருக்கிறது.அதை யாரிடமும் கொடுத்து பொருள் வாங்கலாம், விற்கலாம். ஆனால் மேலைநாடுகளில் பெரும்பாலான வாங்கல்கள் விற்கல்கள் கிரெடிட்/டெபிட் கார்டுகள் மூலமாகவே நடக்கின்றன.அதாவது அங்கே கரன்சிநோட்டுகளுக்கு வேலையில்லை. அந்த கிரெடிட் கார்டையே ஒரு சிப் வடிவில் உங்கள் வலதுகையிலோ அல்லது நெற்றியிலோ செருகிவிட்டு விட்டால் அப்புறம் கைவீசிக்கொண்டு கடைவீதி போகலாமே. அது தான் நடக்கப்போகின்றது.

இது சாத்தியமா என்றால் இன்றைய விஞ்ஞானம் அது சாத்தியமே என்கிறது. அதற்கான பூர்வாங்க பணிகள் இப்போது நடந்துகொண்டிருக்கின்றன.நாம் ஏற்கனவே இங்கு கூறியுள்ளபடி Radio-frequency identification (RFID) எனப்படும் மைக்ரோசிப்கள் இதற்காக பயன்படுத்தப்படும்.

டாலரை வீழ்த்திவிட்டு வீறுகொண்டெழுந்து கொண்டிருக்கும் யூரோ கரன்சியை அதிவிரைவில் அதாவது 2010-க்குள் "Cashless"-ஆக்க EAPS (Euro Alliance of Payment Schemes) மற்றும் SEPA (Single Euro Payment Area) எனும் ஐரோப்பிய ஸ்தாபனங்கள் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளன. அதாவது கூடிய விரைவில் காகித யூரோ கரன்சிகள் முற்றிலுமாக பயன்படுத்தப்படமாட்டாது.அதற்கு பதில் கிரெடிட்கார்டு போன்ற ஒரு கார்டு தான் பயன்படுத்தப்படும். அது அந்திகிறிஸ்துவின் காலத்தில் வலதுகை முத்திரையாகவோ அல்லது நெற்றியில் முத்திரையாகவோ மாறி விடும்.அது இருந்தால் தான் வாங்கவோ விற்கவோ முடியும் என்றாகிவிடும்.

ஏற்கனவே நாம் சொல்லியிருக்கிறபடி படிப்படியாக யூரோ நாணயம் ஒழிந்து உலக அளவில் ஒரே நாணயம் வந்துவிடும். அப்போது உலக அளவில் எல்லோருமே வாங்கவும் விற்கவும் இதுமாதிரி வலதுகை அல்லது நெற்றி முத்திரை அணிந்திருக்கவேண்டிவரும்.

மாரநாதா.

வெளி:13:16,17,18
அது சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள், இவர்கள் யாவரும் தங்கள் தங்கள் வலதுகைகளிலாவது நெற்றிகளிலாவது ஒரு முத்திரையைப் பெறும்படிக்கும், அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது. இதிலே ஞானம் விளங்கும்; அந்த மிருகத்தின் இலக்கத்தைப் புத்தியுடையவன் கணக்குப்பார்க்கக்கடவன்; அது மனுஷருடைய
இலக்கமாயிருக்கிறது; அதினுடைய இலக்கம் அறுநூற்றறுபத்தாறு.

Thursday, March 27, 2008

சண்டையிட்ட சூரியனும் சந்திரனும்

ஒரு முறை சூரியனும் சந்திரனும் சண்டையிட்டுக் கொண்டன. மரத்தின் இலைகள் பச்சை நிறமானவை என சூரியன் சொல்ல, இலைகள் வெள்ளி நிறமானவை என சூரியன் சாதித்தது.

பூமியின் மனிதர்கள் தூங்குகிறார்கள் என்று சந்திரன் சொல்ல,எல்லாரும் மிகவும் சுறுசுறுப்பாய் இருப்பதாக சூரியன் சாதித்தது.

பூமி அமைதியாக இருப்பதாக சந்திரன் சொல்ல,"ஒரே இரைச்சலாக இருக்கிறது" என்று சண்டைக்கே வந்து விட்டது சூரியன்.

சூரியனும் சந்திரனும் சண்டையிட்டுக் கொண்டிருந்ததை காற்று கவனித்துக்கொண்டிருந்தது.

காற்று சொல்லியது "உங்கள் சண்டை பயனற்றது.நான் சூரியன் பிரகாசிக்கும் போதும்,சந்திரன் பிரகாசிக்கும் போதும் இருக்கிறவன். பகலில் சூரியன் பிரகாசிக்கும் போது சகலமும் அது சொன்னபடியே இருக்கிறது.இரவில் சந்திரன் பிரகாசிக்கும்போது அனைத்தும் அது சொன்ன படியே இருக்கிறது.

ஆனால்,இரவில் உலகம் எப்படி இருக்கும் என்பது சூரியனுக்குத் தெரியாது.பகலில் உலகம் எப்படி இருக்கும் என்பது சந்திரனுக்குத் தெரியாது.ஆகவே உங்கள் இருவருக்குமே முழுமையான உண்மை தெரியாது" என்றது காற்று.

நாத்திகர்கள் உலகின் சடப்பொருள் தன்னையைக் கண்ணுற்று அவைகள் தான் உண்மை என்று வாதிடுகின்றனர்.

புத்த மதத்தவர் "மனம்" ஒன்று தான் உண்மையானது, மற்ற அனைத்துமே மாயையின் தோற்றங்கள் என்று கூறுகின்றனர்.

ஆண்டவரின் ஆவியைப் பெற்றவர்கள் மட்டுமே முழுமையான உண்மையை உணரக் கூடியவர்கள்.அவர்கள் உலோகாயுத கொள்கைக்கோ,சிந்தனையாளர்களின் கொள்கைக்கோ கட்டுப்படமாட்டார்கள்.

நீதிமொழிகள் 3:7
நீ உன்னை ஞானியென்று எண்ணாதே; கர்த்தருக்குப் பயந்து, தீமையை விட்டு விலகு.

Wednesday, March 26, 2008

இரட்சிப்பு...இலவசம்

பேர்பெற்ற மிஷனரியாகிய ஆதாம் ஸ்மித் சுவிசேஷப்படை முயற்சிக் கூட்டமொன்றில் பிரசங்கம் செய்துமுடித்தபின் "இப்பொழுது அந்நிய நாடுகளில் நடந்தேறும் மிஷனரி ஊழியத்திற்காக காணிக்கை எடுக்கப்படும்" என்றார்.

முன் வரிசையில் உட்கார்ந்திருந்த ஒரு அம்மாள் எழுந்து நின்று,"ஐயா,இரட்சிப்பு இலவசம் என்று இவ்வளவு நேரமும் பிரசங்கம் கேட்டோம்.அப்படியானால் காணிக்கை எதற்காக எடுக்கவேண்டும்?" என்றாள்.

இருவருக்கும் பின்வருமாறு சம்பாஷணை நடந்தது:-

"அம்மா,நீங்கள் தண்ணீர் கிரையம் கொடுத்து வாங்குகிறீர்களா?"

"இல்லை,இலவசம்"

"இலவசமாக தண்ணீர் உங்கள் வீட்டண்டை வர,இரண்டு மைல் தூரத்தில் பம்பில் ஸ்டேஷன் கட்டி யந்திரங்கள் வைத்து,பூமியில் குழாய்கள் பதித்து,தண்ணீரை உங்கள் வீட்டுக்கு முன் கொண்டு வந்து இலவசமாய்க் கொடுக்கிறார்கள்.எவ்வளவு பணம் செலவாகி இருக்கும்."

"ஐயா நான் புத்தியீனமாய்க் கேட்டுவிட்டேன்.தயவு செய்து மன்னியுங்கள்."

இரட்சிப்பு இலவசம் தான்.அதை அறிவிக்க ஆட்கள் வேண்டாமா? கர்த்தருடைய நாம மகிமைக்கென்றுதான் காணிக்கை.

"என் இரட்சிப்புத் தாமதிப்பதில்லை"
-ஏசாயா:46:13

"கிறிஸ்துவினுடைய நாமம் சொல்லப்பட்டிராத இடங்களில் சுவிசேஷத்தை அறிவிக்கும் படி நாடுகிறேன்"
-ரோமர்:15:21

Wednesday, February 27, 2008

சிரிக்கவல்ல-சிந்திக்க சில தமிழக மொழிகள்

சிரிக்க அல்ல,சிந்திக்க சில மொழிகள் தமிழகத்திலிருந்து

"இயேசுவினிடம் கேட்டால்தான் கிடைக்கும். புரட்சித்தலைவியிடம் கேட்காமலே கிடைக்கும்"
-முன்னாள் தமிழக அமைச்சர் ஜனார்த்தனன்.

"ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்று நான் கூறமாட்டேன்.ஆத்மாவில் எனக்கு நம்பிக்கை கிடையாது"
-தமிழக முதல்வர் கருணாநிதி 28-11-1993 தினகரன்

"ஆண்டவன் இருப்பது உண்மையாக இருந்தால், எனக்கு நீண்ட ஆயுளை தரட்டும். எனக்காக அல்ல; மக்களுக்கு சேவை செய்வதற்காக, அதற்காக மற்றவர்களை போல் நான் கோவில் கோவிலாக சென்று பூஜை செய்து ஆயுளை நீட்டிக்க விரும்ப மாட்டேன். தியாகங்கள் மூலம், மக்கள் பணி செய்து வருகிறோம்."
-தர்மபுரியில் முதல்வர் கருணாநிதி 27/2/2008 தினமலர்

"தெய்வம் உண்மையென்று தானறிதல் வேண்டும்"
-"பாப்பா"க்கான அறிவுரையில் பாரதியார்

"பெண்களின் துணிகளை எடுத்து ஒளித்து வைத்த கிருஷ்ணன் கடவுளா? உலக பாவங்களுக்காக பலியான கிறிஸ்து கடவுளா?"
-சென்னை மெரினா பீச்சில் அறிஞர் அண்ணா

"மெஜாரிட்டி தமிழர்கள் வாழும் இடம் வந்த மைனாரிட்டி ஆங்கிலேயர்கள் தான் தமிழ் கற்றிருக்க வேண்டும்.ஆனால் நடந்தது வேறு.இது ஓர் அதிசயம்"
-நாகர்கோவிலில் தமிழக அமைச்சர் துரைமுருகன்

"இந்தியாவின் தலைநகரம் மாஸ்கோ"
-தமிழ் துக்ளக் ஏடு ஆசிரியர் சோ

"அரபு நாடுகளுக்குச் சென்றால் நமது சமய புத்தகங்களைக் கூட எடுத்துச் செல்ல அனுமதி கிடையாது.பெரும்பான்மை இந்துக்களைக் கொண்ட நமது நாட்டில் நமது மதத்திற்குப் பாதுகாப்பில்லாதது கண்டுவருந்துகிறேன்.இந்த அவல நிலைக்கு மாற்றம் காண வேண்டும்"
-கோவை நா.மகாலிங்கம்

"LTTE தலைவர் பிரபாகரனை இலங்கை அரசால் பிடிக்க முடியாவிடில் இஸ்ரேலிய உளவு அமைப்பான மொஸாத் உதவியை மத்திய அரசு நாடலாம்"
-முன்னாள் அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி ஜூனியர் போஸ்டில் 13/3/1992

"புதுவை கிறிஸ்தவர்கள் மாநிலமாக மாறுகிறது. அதை தடுக்க கிளர்ச்சி நடத்துகிறோம்"
-RSS தலைவர் இராமகோபாலன் 13/3/1994 தினகரன்

"இந்து சமுதாயம் பலமுனை தாக்குதலுக்கு உட்பட்டுள்ளது.நமது நாட்டில் இந்து எழுச்சி ஏற்ப்பட்டுள்ளது.நடக்கவிருக்கும் 5 மாநில தேர்தலில் பாரதீய ஜனதா ஆட்சியை பிடிக்கும்.இதன் மூலம் இந்தியாவில் இந்து சாம்ராஜ்யம் உருவாகும்"
-தமிழக இந்து முண்ணணி அமைப்பாளர் ராம கோபாலன் 2/11/1995 தினமலர்

"பிரிட்டீஷ்காரர்கள் இந்திய சரித்திரத்தை கி.பி, கி.மு என பிரித்துள்ளார்கள். ஆனால் அது எவ்வளவு சரியோ தவறோ தெரியவில்லை.இந்தியாவில் எத்தனையோ பெரியோர்கள் தோன்றியுள்ளனர். அவர்களை வைத்து சரித்திரம் மாற்றி எழுதுவது நல்லது"
-ஜெயேந்திர சுவாமிகள் சங்கராச்சாரியார் 20-11-1993 மாலைமலர் தேன்மலர்

"விலங்குகள் கோவிலுக்குள்ளே செல்லலாம்.மனிதர்கள் மட்டும் கூடாது.அதனால் மனிதர்களை மனிதர்களாக மதிக்கற மதத்துக்கு செல்கிறோம் என்கிறார்கள். அதில் என்ன தவறு? அது அவர்கள் விருப்பம்.யாருக்கு எந்த மதம் விருப்பமோ அதை அவர்கள் பின்பற்றலாம். அனைத்துக்கும் அனுமதி கொடுப்பதே மதசார்பற்ற தன்மை. மத சார்புள்ள இஸ்ரேலில் கூட ஜெருசலேம் மசூதியை இடிக்க விடாது ராணுவம் 3 முறை விரட்டியடித்தது"
-வை.கோ 9-1-1994 தினகரன்

"நீங்கள் இன்று என்னை கொன்று போட்டாலும் நான் மோட்சத்துக்கு தான் போவேன்"
-இந்து முண்ணணி அலுவலகம் குண்டு வைத்து தகர்கப்பட்டதில் கைதான இமாம் அலி(27)

சங்கீதம்:2:1,4
ஜாதிகள் கொந்தளித்து, ஜனங்கள் விருதாக்காரியத்தைச் சிந்திப்பானேன்?
பரலோகத்தில் வீற்றிருக்கிறவர் நகைப்பார்; ஆண்டவர் அவர்களை இகழுவார்.

Psalm 2:1,4
Why do the nations conspire
and the peoples plot in vain?
The One enthroned in heaven laughs;
the Lord scoffs at them.