Monday, August 16, 2010

காலத்தை அறிவாயோ? - சகோ.அகஸ்டின் ஜெபக்குமார் செய்தி


Gems media presents Kaalathai Arivayo?
Bro.D.Augustin Jebakumar.
காலத்தை அறிவாயோ? வீடியோ தேவசெய்தி
சகோ.D.அகஸ்டின் ஜெபக்குமார்
ஜெம்ஸ் ஊழியங்கள்
பீகார்

Saturday, August 14, 2010

நியூட்டன் கணித்த கிபி:2060

”கோள்களில் நிகழும் நகர்வுகளுக்கெல்லாம் ஈர்ப்புவிசையே காரணம், ஆனால் அந்த கோள்களையே நகரவைப்பது அந்த விசையல்ல. இறைவனே சகலத்தையும் ஆளுகிறவர்,அவரே எல்லாம் அறிந்தவர், அவருக்கே எல்லாம் தெரியும்”-சர் ஐசக் நியுட்டன்
ஆல்பர்ட் ஐன்ஸ்டீனுக்கு அடுத்த படியாக நவீன உலகின் மிகப் பெரிய அறிவியல் மேதையாக கருதப்படுபவர் இங்கிலாந்தைச் சேர்ந்த சர் ஐசக் நியுட்டன் (1643-1727). புவி ஈர்ப்பு விசையை கண்டறிந்ததன் மூலம் அவர் உலகப் புகழ் பெற்ற விஞ்ஞானியானார். ஆனால் இதே ஐசக் நியூட்டன் வேதாகமப் பிரியராகவும் அதிலும் குறிப்பாக தானியேலின் புத்தகத்திலும் வெளிப்படுத்தின விசேசம் புத்தகத்திலும் அவர் கொண்டிருந்த ஆர்வம் நாம் பலரும் அறியாதது. ஏன் உலகுக்கே சில ஆண்டுகளுக்கு முன்புதான் தெரிய வந்தது.

விஞ்ஞானியாய் இருந்த காலத்திலேயே அவர் பல வருடங்கள் வேத ஆராய்ச்சியில் செலவிட்டுள்ளார். வேதாகம தீர்க்க தரிசனங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறி வருவதை உணர்ந்த அவர், வேதபுத்தகமானது உலக வரலாற்றை முன்கூட்டியே தன்னில் எழுதிவைத்திருக்கின்றது என முழுவதுமாக நம்பினார். இதனால் பைபிள் புத்தகத்தின் படி நடக்கக்போகும் சம்பவங்களையும் அது நடைபெறப்போகும் காலங்களையும் வெகுவாக ஆராய்ந்து எழுதினார். யூதர்கள் தங்கள் சொந்த நாட்டுக்கு திரும்பிவருதல், மூன்றாவது எருசலேம் தேவாலயம் கட்டப்படுதல், அந்திக்கிறிஸ்துவின் வருகை, அர்மகெதோன் யுத்தம் போன்றவற்றை பற்றியும் அவை நடைபெறப்போகும் காலங்களை பற்றியும் தனக்கு தெரிந்த அளவில் அலசி ஆய்ந்து எழுதியிருக்கிறார். அவர் வாழ்ந்த காலங்களில் ஒருவேளை தனது பிற விஞ்ஞான கண்டுபிடிப்புகளுக்கு வரவேற்பு இல்லாமல் போய் விடும் என்று பயந்தும், அக்கால சபைத் தலைவர்களுக்கு பயந்தும் அந்த ஆய்வுகளை அவர், அவர்காலத்திலேயே வெளியிடவில்லை.

அந்த கையெழுத்து கோப்புகள் யாருக்கும் தெரியாமல் கடந்த இரு நூற்றாண்டுகளாக ஒரு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. சமீப ஆண்டுகளில் அவைகள் ஏலத்துக்கு வர அவர் எழுதிய வேதாகம தீர்க்கதரிசன குறிப்புகளும் வெளிஉலகுக்கு தெரியவந்தன. சர் ஐசக் நியூட்டனின் இந்த குறிப்புகள் மூலம் அவர் கிபி:2060-ல் உலகம் ஒரு முடிவுக்கு வரும் என நம்பியதாக தெரிகிறது. உலகத்தை படைத்த இறைவனே அதை அழிக்கவும் வருவதாக அவர் நம்பினார். அவர் கணக்கிட்ட காலக்கணக்கின் படியே 1940களில் இஸ்ரேல் தேசம் உருவானது இங்கு குறிப்பிடத்தக்கது. இஸ்ரேலியர் ஒருவரே நியூட்டனின் கையெழுத்துக் கோப்புகளை ஏலம் எடுத்ததால் இன்றைக்கு அவை நியூட்டன் எதிர் காலத்தில் உருவாகும் என நம்பின இஸ்ரேல் தேசத்திலேயெ இருப்பது ஒரு ஆச்சரிய பொருத்தம்.

மாற்கு 13:32 அந்த நாளையும் அந்த நாழிகையையும் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான், பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள், குமாரனும் அறியார்.

Wednesday, August 11, 2010

ஆயத்தமாவோம் - தந்தை S.J.பெர்க்மான்ஸ் செய்தி


Rejoice Gospel communications release ஜெபத்தோட்டம் டிரஸ்ட் வழங்கும் அருட்தந்தை S.J.பெர்க்மான்ஸ் “ஆயத்தமாவோம்” செய்தி கோவை அற்புத விடுதலைப் பெருவிழாவில் வழங்கியது.

Saturday, August 07, 2010

உங்க முகத்தை பார்க்கணுமே யேசையா பாடல்


Unga Mugathai Paarkanume Yesaiah Tamil Christian song.
Download as MP3

Sunday, July 11, 2010

தேவனே, நான் உமதண்டையில் பாடல்


Thevaney Naan Umathandaiyil Innum Nerungki Seervathey En Aaval Poomiyil Lyrics

தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
சேர்வதே என் ஆவல் பூமியில்.

மாவலிய கோரமாக வன் சிலுவை மீதினில் நான்
கோவே, தொங்க நேரிடினும்
ஆவலாய் உம்மண்டை சேர்வேன்

1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
இராவில் இருள் வந்து மூடிட
தூக்கத்தால் நான் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
நோக்கியும்மை கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா!

2. பரத்துக்கேறும் படிகள் போலவே – என் பாதை தோன்றப்
பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
கிருபையாக நீர் எனக்குத் தருவதெல்லாம் உமதண்டை
அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும்

3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன்

4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
ஆகாயத்தில் ஏறிப் போயினும்
வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன்