Monday, December 31, 2007

புதுவருடம் - தேவரீர் என்னோடேகூட இருக்கின்றீர்

புதுவருடம் - தேவரீர் என்னோடேகூட இருக்கின்றீர்

புதுவருடத்தின் நுழைவு வாயிலில் நின்றுகொண்டிருந்தவனை பார்த்து நான் கேட்டேன்.
"எவையெல்லாம் காத்திருக்கின்றனவென அறியாமலேயே இங்கு நுழைகின்றேனே நான்.
பாதுகாப்பாய் நடந்து செல்ல விளக்கு எதாவது கொடேன்" என்றேன்.

அதற்கு அவன் பதிலுரைத்தான்.
"தேவனின் கரத்தை பிடித்துக்கொண்டு தைரியமாய் இந்த இருட்டில் நுழை.
உனக்கு விளக்கு ஒன்றும் தேவைப்படாது.
தேவனின் துணையின்றி அறிந்த பாதையில் செல்வதைவிட
தேவனின் துணையுடன் நீ கண்டிராத பாதைகளில் செலல் உனக்கு மிக்க பாதுகாப்பே" என்றான்.

முன்னே சென்று உள்ளே நுழைந்து
தேவனின் கரத்தை கெட்டியாய் பிடித்துக்கொண்டேன்.
இரவும் பகலும் மேடுகளிலும் பள்ளங்களிலுமாய் அவர் என்னை நடத்திச் சென்றார்.
என் மனமே திடமாயிரு.
தேவன் நம்மோடிருக்கும் போது நாம் வரப்போகின்ற எல்லாவற்றையும்
அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.

எதிர் வரும் எல்லா சூழல்களிலும் எல்லா நேரங்களிலும் அதற்கான
தேவனின் நோக்கத்தை நாம் முழுதாய் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும்.
தேவரீர் என்னோடேகூட இருக்கின்றீர்.
அது ஒன்றே போதும்.

சங்கீதம் 23:4
நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.

0 comments:

தமிழில் தட்டச்சு செய்யஇங்கே சொடுக்கவும் தட்டச்சு செய்த பின் அதை Copy செய்து இங்கே Past செய்யவும்

Post a Comment