Wednesday, September 19, 2007

கிறிஸ்து பற்றி தாசித்துஸ்

கிறிஸ்து பற்றி முதலாம் நூற்றாண்டு ரோம வரலாற்று மேதை தாசித்துஸ் (Cornelius Tacitus) இவ்வாறு கூறுகிறார்.

"கீழ்த் திசை மேம்பாடு அடையப்போகிறது.உலக முழுவதையும் ஆளுகை செய்கிறவர் யூதெயாவினின்றும் புறப்படுவார்"
-தாசித்துஸ் ரோமை சரித்திராசிரியர்

மத்தேயு 2:2. யூதருக்கு ராஜாவாகப் பிறந்திருக்கிறவர் எங்கே? கிழக்கிலே அவருடைய நட்சத்திரத்தைக் கண்டு, அவரைப் பணிந்து கொள்ள வந்தோம் என்றார்கள்.

Tacitus (historian of the Roman Empire) tells that

"there was a firm persuasion … that at this very time the East was to grow powerful, and rulers coming from Judea were to acquire universal empire"

(Tacitus: Histories, 5:13).

Matthew 2:2 Saying, Where is he that is born King of the Jews? for we have seen his star in the east, and are come to worship him.

Source

Tuesday, September 18, 2007

கிறிஸ்துவும் கேஷப சந்திர சென்னும்

வங்காளத்தை சேர்ந்த, பிரம்ம சமாஜ தலைவர்களில் ஒருவர் கேஷப சந்திர சென். Keshub Chunder Sen (1838-1884)
அவர் 1879-ஆம் ஆண்டு மே மாதம் இவ்வாறாய் கூறினார்.

"இந்தியா என்னும் சோபிதமான விலைமதித்தற்கரிய கிரீடத்தைச் சூடப் பாத்திரமானவர் இயேசு கிறிஸ்து ஒருவரே.இயேசு கிறிஸ்து ஒருவரே என்று அழுத்திச் சொல்கிறேன்.இந்தியாவாகிய மணிமகுடம் ஒருநாள் அவருடையதாகிவிடும்"

Kesab Chandra Sen had said in May, 1879,"None but Jesus, none but Jesus, none but Jesus ever deserved this precious diadem, India; and Jesus shall have it."

சங்கீதம் 60:7 கீலேயாத் என்னுடையது, மனாசேயும் என்னுடையது

எசேக்கியேல் 18:4 இதோ, எல்லா ஆத்துமாக்களும் என்னுடையவைகள்; தகப்பனின் ஆத்துமா எப்படியோ, அப்படியே மகனின் ஆத்துமாவும் என்னுடையது

Psalm 60:7 Gilead is mine, and Manasseh is mine;

Ezekiel 18:4 Behold, all souls are mine; as the soul of the father, so also the soul of the son is mine:

Source

Sunday, September 16, 2007

கிறிஸ்துவும் டாக்டர் ராதா கிருஷ்ணனும்

சுதந்திர இந்தியாவின் இரண்டாவது ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள்(Dr. Sarvepalli Radhakrishnan (1888-1975)) ஒரு மிகப்பெரிய மேதை.அவர் பிறந்த தினம் ஆசிரியர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது.அவர் இவ்வாறு சொன்னதாக கூறப்படுகிறது. "If you want to be a real man,you follow Jesus Of Nazareth"

(டிசம்பர் 1993 "வருகையின் தூதன்" பத்திரிகை)

யோவான் 8:12 மறுபடியும் இயேசு ஜனங்களை நோக்கி: நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான் என்றார்.

John 8:12 Then spake Jesus again unto them, saying, I am the light of the world: he that followeth me shall not walk in darkness, but shall have the light of life.

Friday, September 14, 2007

கிறிஸ்துவும் நாராயண் வாமன் திலகரும்

இந்து குலத்தில் பிறந்து பின் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்ட நாராயண் வாமன் திலகர் (Narayan Vaman Tilak) மாகாராஷ்டிராவில் (1862-1919) வாழ்ந்த ஒரு மாபெரும் மராட்டிய மகாகவியாவார்.அநேக புகழ்பெற்ற கிறிஸ்தவ கீர்த்தணைகளையும்,பஜனை பாடல்களையும் எழுதியுள்ளார்.
அவர் இவ்வாறு கூறினார்.

"உம்மைப்போல கிறிஸ்துவே நானும் ஏழையாய் இருக்கத் தேடுவேன்.உம்மைபோல நானும் சிலுவையில் அறையப்பட ஆயத்தமாய் வாழ்வேன்.உம்மைப்போல நடந்து உம் சாயலை அடைய என்றும் முயலுவேன்"

யோவான்:15:4. என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

John:15:4
Abide in me, and I in you. As the branch cannot bear fruit of itself, except it abide in the vine; no more can ye, except ye abide in me.

Wednesday, September 05, 2007

சவக்கடலாக மாறிய சோதோம் கொமாரா

சவக்கடல் எனப்படும் Dead sea இஸ்ரேலின் ஒரு உப்புக்கடல் salt lake.உப்பால் நிறைந்தது.பிற கடல்களை விட ஒன்பது சதவீதம் உப்பு அதிகம்.இதனால் யார் வேண்டுமானாலும் இக்கடலில் மிதக்கலாம்,நடக்கலாம்.அவ்வளவு அடர்த்தியாய் உப்பு.

வேதாகம ஆபிரகாமின் காலத்தில் Sodom,Gomorrah பட்டணங்கள் அக்கிரம மிகுதியால் கடவுளின் பார்வையில் கோபத்துக்குள்ளாயின.
அந்நகரங்கள் முற்றிலும் நெருப்பால் அழிக்கப்பட்டன.கர்த்தர் சோதோமின் மேலும் கொமோராவின் மேலும்,வானத்திலிருந்து கந்தகத்தையும் அக்கினியையும் வருஷிக்கப்பண்ணி, அந்தப் பட்டணங்களையும், அந்தச் சம பூமியனைத்தையும், அந்தப் பட்டணங்களின் எல்லாக் குடிகளையும், பூமியின் பயிரையும் அழித்துப்போட்டார்.

அவ்விடம் இப்போது சவக்கடலாக மாறி கிடக்கிறதாக எனது நம்பிக்கை.இந்த வசனமும் அதை ஆமோதிப்பது போல் வருகிறது. ஆதியாகமம் 19:26 அவன் மனைவியோ பின்னிட்டுப் பார்த்து, உப்புத்தூண் ஆனாள்.

சவமாய் போன சோதோம்கொமாரா மக்களுக்கும் சவக்கடலுக்கும் ஒரு முடிச்சு. உப்புத்தூணாய்போன லோத்தின் மனைவிக்கும் உப்புக்கடலுக்கும் ஒரு முடிச்சு.