Showing posts with label Bible Prophecy. Show all posts
Showing posts with label Bible Prophecy. Show all posts

Sunday, April 16, 2023

நடக்கப்போகும் சம்பவங்களை முன்னறிவிப்பது பைபிள்.


புதியவைகளையும் நானே அறிவிக்கிறேன்; அவைகள் தோன்றாததற்கு முன்னே, அவைகளை உங்களுக்குச் சொல்லுகிறேன். ஏசாயா 42:9

அந்தத்திலுள்ளவைகளை ஆதிமுதற்கொண்டும், இன்னும் செய்யப்படாதவைகளைப் பூர்வகாலமுதற்கொண்டும் அறிவிக்கிறேன். ஏசாயா 46:10

அது நடப்பதற்கு முன்னமே அதை உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 13:19

சீக்கிரத்தில் சம்பவிக்கவேண்டியவைகளைத் தம்முடைய ஊழியக்காரருக்குக் காண்பிக்கும்பொருட்டு. வெளி 1:1

இவைகளுக்குப்பின்பு சம்பவிக்கவேண்டியவைகளை உனக்குக் காண்பிப்பேன். வெளி 4:1 

Saturday, November 19, 2022

உடன்படிக்கைப் பெட்டி கண்டுபிடிக்கப்படுமா?

உடன்படிக்கைப் பெட்டி கண்டுபிடிக்கப்படுமா? எரேமியா 3:16 நீங்கள் தேசத்திலே பெருகிப் பலுகுகிற அந்நாட்களிலே, அவர்கள் கர்த்தருடைய உடன்படிக்கைப் பெட்டியென்று இனிச் சொல்வதில்லை; அது அவர்கள் மனதில் எழும்புவதும் இல்லை; அது அவர்கள் நினைவில் வருவதும் இல்லை; அதைக்குறித்து விசாரிப்பதும் இல்லை; அது இனிச் செப்பனிடப்படுவதும் இல்லை என்று கர்த்தர் சொல்லுகிறார்.

உடன்படிக்கைப் பெட்டி அது இப்போது எங்கிருக்கிறது?வெளி 11:19 அப்பொழுது பரலோகத்தில் தேவனுடைய ஆலயம் திறக்கப்பட்டது, அவருடைய ஆலயத்திலே அவருடைய உடன்படிக்கையின் பெட்டி காணப்பட்டது. 



Thursday, June 10, 2021

ஆகாய மார்க்கமாக வந்த‌ யூதர்கள்.

 ஆகாய மார்க்கமாக யூதர்கள் இஸ்ரேல் நாட்டிற்கு பல நாடுகளிலிருந்தும் கூட்டிச் சேர்க்கப்படுவார்களென்று

ஆண்டவர் முன்னுரைத்திருக்கிறார்.
முன்னுரைப்பு:
ஏசாயா 60:8 (கிமு 698)
"மேகத்தைப்போலவும், தங்கள் பலகணித்துவாரங்களுக்குத் தீவிரிக்கிற புறாக்களைப்போலவும் பறந்துவருகிற இவர்கள் யார்?"


ரஷ்யாவிலிருந்து இஸ்ரேல் வந்த ‘யூதர்’களின் கதை

 இஸ்ரேல் ஜனங்கள் திரும்பவும் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட நாட்டிலே வட தேசங்களாகிய‌ ரஷ்யாவிலிருந்து குடியேற்றப்படுவார்கள் என்ற‌ பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறியது.

முன்னுரைப்பு:
எரேமியா 3:18 (கிமு 629)
அந்நாட்களிலே யூதா வம்சத்தார் இஸ்ரவேல் வம்சத்தாரோடே சேர்ந்து, அவர்கள் ஏகமாய் வடதேசத்திலிருந்து புறப்பட்டு, நான் தங்கள் பிதாக்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த தேசத்திற்கு வருவார்கள்.


Friday, June 04, 2021

நிலங்கள் வாங்கப்பட்டு இஸ்ரேல் தேசம் உருவாகும் என்ற பைபிள்.

இஸ்ரேல் நாட்டில் நிலம் வாங்கப்படும் என்பதைப்பற்றிய தீர்க்கதரிசன நிறைவேறுதல். எரேமியா 32 :43,44 (கிமு 590)

மனுஷனும் மிருகமுமில்லாதபடிக்குப் பாழாய்ப்போயிற்று என்றும், கல்தேயரின் கையிலே ஒப்புக் கொடுக்கப்பட்டுப் போயிற்று என்றும், நீங்கள் சொல்லுகிற இந்த தேசத்திலே நிலங்கள் 📜கொள்ளப்படும். பென்யமீன் தேசத்திலும், எருசலேமின் சுற்றுப்புறங்களிலும், யூதாவின் பட்டணங்களிலும், மலைக்காடான பட்டணங்களிலும், பள்ளத்தாக்கான பட்டணங்களிலும், தென் திசைப் பட்டணங்களிலும், நிலங்கள் ⛳️விலைக்கிரயமாகக் கொள்ளப்படுகிற பத்திரங்களில் ✍️ கையெழுத்துப் போடுகிறதும் முத்திரையிடுகிறதும் அதற்குச் சாட்சிவைக்கிறதும் உண்டாயிருக்கும்; அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.


இஸ்ரேல் மனுஷ சஞ்சாரமில்லாமல் பாழாய் கிடக்கும் என்ற பைபிள்.

 இஸ்ரேல் மனுஷ சஞ்சாரமில்லாமல் பாழாய் கிடக்கும், யூதர்கள் உலகெங்கும் சிதறடிக்கப்படுவார்கள் என பைபிள் முன்னுரைத்த படி நடந்தது. லேவியராகமம் 26:31-33 (கிமு 1491)

நான் உங்கள் பட்டணங்களை வெறுமையும், உங்கள் பரிசுத்த ஸ்தலங்களைப் பாழுமாக்கி, உங்கள் சுகந்த வாசனையை முகராதிருப்பேன். நான் தேசத்தைப் பாழாக்குவேன்; அதிலே குடியிருக்கிற உங்கள் சத்துருக்கள் பிரமிப்பார்கள்.
ஜாதிகளுக்குள்ளே உங்களைச் சிதற அடித்து, உங்கள் பின்னாகப் பட்டயத்தை உருவுவேன்; உங்கள் தேசம் பாழும், உங்கள் பட்டணங்கள் வனாந்தரமுமாகும்.




எத்தியோப்பிய யூதர் இஸ்ரேல் திரும்புதல் பைபிள் நிறைவேறல்.

எத்தியோப்பியாவிலிருந்து யூதர்கள் இஸ்ரேல் திரும்புவார்கள் என்ற பைபிள் தீர்க்கதரிசனம் நிறைவேறுதல்.ஏசாயா 11:11,12 (கிமு 713)

அக்காலத்திலே, ஆண்டவர் அசீரியாவிலும், எகிப்திலும், பத்ரோசிலும், எத்தியோப்பியாவிலும், பெர்சியாவிலும், சிநேயாரிலும், ஆமாத்திலும், சமுத்திரத் தீவுகளிலும், தம்முடைய ஜனத்தில் மீதியானவர்களை மீட்டுக்கொள்ளத் திரும்ப இரண்டாம்விசை தமது கரத்தை நீட்டி, ஜாதிகளுக்கு ஒரு கொடியை ஏற்றி, இஸ்ரவேலில் துரத்துண்டவர்களைச் சேர்த்து, யூதாவில் சிதறடிக்கப்பட்டவர்களை பூமியின் நான்கு திசைகளிலுமிருந்து கூட்டுவார்.



இந்தியாவிலிருந்து இஸ்ரேல் நாட்டுக்கு திரும்பும் மனாசேயின் வம்சத்தார்கள்.

இந்தியாவிலிருந்து இஸ்ரேல் நாட்டுக்கு திரும்பும் பைபிள் கால மனாசேயின் வம்சத்தார்கள். இவர்கள் 2700 ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேலிலிருந்து சிதறடிக்கப்பட்டு இந்தியா வந்தவர்கள். மீண்டும் இப்போது பைபிள் வாக்கு படி இஸ்ரேல் செல்கிறார்கள். பைபிள் சொல்லுகிறது "இதோ, நான் அவர்களை அவர்களைப் பூமியின் எல்லைகளிலிருந்து கூட்டிவருவேன். இஸ்ரவேலைச் சிதறடித்தவர் அதைச் சேர்த்துக்கொண்டு, ஒரு மேய்ப்பன் தன் மந்தையைக் காக்கும்வண்ணமாக அதைக் காப்பார்". எரேமியா 31:8,10



வெளியேறும் கடைசி யூதர்.

 பைபிளில் முன்குறிப்பிட்டது போல, ஒரு நாட்டின் கடைசி யூதரும் அந்த நாட்டிலிருந்து வெளியேறி இஸ்ரேல் செல்லுகிறார். பைபிள் சொல்லுகிறது "என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்.இதோ, ஜல்லடையினால் சலித்தரிக்கிறதுபோல் இஸ்ரவேல் வம்சத்தாரை எல்லா ஜாதிகளுக்குள்ளும் சலித்தரிக்கும்படிக்கு நான் கட்டளையிடுவேன்; ஆனாலும் ஒரு கோதுமைமணியும் தரையிலே விழுவதில்லை" ஆமோஸ் 9:9,14 (கிமு 787).



Friday, January 04, 2019

'விவசாயம்னா இப்படி செய்யணும்!' உலகிற்கே வழிகாட்டும் இஸ்ரேல்.

'விவசாயம்னா இப்படி செய்யணும்!' உலகிற்கே வழிகாட்டும் இஸ்ரேல்

January 1, 2019

பாலை, உப்பு நீர், சீரற்ற பருவம் என அனைத்து சாபக்கேடுகளையும் தன்னகத்தே கொண்டது, இஸ்ரேல். இவற்றை வைத்துக் கொண்டும் வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறது.

'விவசாயம்னா இப்படி செய்யணும்!' உலகிற்கே வழிகாட்டும் இஸ்ரேல்
விவசாயத்தில் புதுப்புது யுக்திகளைப் புகுத்தி சாதித்து வரும் நாடு இஸ்ரேல். அந்த நாட்டின் நிலப்பகுதி விவசாயம் செய்ய ஏற்ற நிலம் கிடையாது. பாலை நிலம் கொண்டது. ஆனால், தான் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பங்களைப் புகுத்தி விவசாயம் செய்து உலக நாடுகளை வியக்க வைத்துக் கொண்டிருக்கிறது, இஸ்ரேல். உலகிலேயே இந்த நாட்டில்தான் அதிக அளவிலான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இஸ்ரேலில் மழையின் அளவு மிகக் குறைவு. வெயில் அதிக அளவு சுட்டெரிக்கும். நாட்டின் வடக்குப் பகுதியில் மழை சிறிதளவில் பெய்தாலும், தெற்குப் பகுதி எப்போதும் காய்ந்த பூமிதான். ஜோர்டான் நதியின் நீரை 'கலிலோ' என்னும் ஏரியில் சேமித்தனர். இந்த ஏரி பூமியின் மட்டத்திலிருந்து 700 அடிக்கும் கீழே இருக்கிறது. இந்த நீரை 800 அடிக்கு மேலே பம்ப் மூலம் எடுத்து இஸ்ரேலின் மத்திய மற்றும் தெற்குப் பகுதியில் விவசாயம் பார்க்கிறார்கள். நாட்டில் கொஞ்சம் பெய்யும் மழையைக்கூட வீணாக்காமல் சேமித்து சொட்டுநீர் பாசனம் போன்ற தொழில்நுட்பங்கள் மூலம் பயிர்களை வளர்க்கிறார்கள். கழிவு நீரை முழுமையாகச் சுத்திகரித்து விவசாயத்திற்கு ஏற்ப பயன்படுத்தி வருகிறார்கள். 
இஸ்ரேல்
இஸ்ரேல் விவசாயத்தில் உபயோகப்படுத்தப்படும் தண்ணீரில் 75 சதவிகிதம் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்தான் என்கிறது புள்ளிவிவரம். நீரைக் குறைந்த அளவில் உபயோகித்துப் பல யுக்திகளைக் கையாண்டு விவசாயத்திற்கு முன்னுதாரணமாகத் திகழ்கிறது, இஸ்ரேல். தாவரத்திற்கு எவ்வளவு தண்ணீர் தேவையோ அந்த அளவிற்கு மட்டுமே கொடுக்கிறார்கள். அதிக அளவில் தண்ணீரைப் பாய்ச்சி நீரை வீணாக்குவது இல்லை. அதேபோல பயிர்களின்மீது மல்ஷிங் சீட் எனப்படும் பிளாஸ்டிக் உறையைப் போர்த்தி, தேவையான அளவு மட்டுமே சூரிய வெப்பத்தைப் படும்படி செய்கிறார்கள். அதிகமான வெயில் பட்டால் தாவரத்தின் நீர்ச் சத்து ஆவியாகிவிடும் என்பதால்தான் இந்தப் பாதுகாப்பு முறை. 
கடல் நீரைக் குடிநீராக்கி குடிப்பதோடு மட்டுமல்லாமல், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகிறார்கள். ஒரு நிலத்தில் ஒரே பயிரை மீண்டும் பயிரிடுவதில்லை. பயிர்சுழற்சி முறையில் பல தாவரங்களைப் பயிரிடுகிறார்கள். 1948-ம் ஆண்டு 74 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்த இஸ்ரேல், தற்போது 4 லட்சத்து 60 ஆயிரம் ஏக்கரில் விவசாயம் செய்து வருகிறது. நம் நாட்டில் விவசாயம் செய்வதுபோலவே அங்கும் நிலத்தைத் தனியாக பிரித்து விவசாயம் செய்து வருகிறார்கள். அதேபோல அரசுக்குச் சொந்தமான இடத்தில் குழுக்களாக விவசாயம் செய்து பங்கு போட்டுக் கொள்ளும் வழக்கமும் இஸ்ரேலில் உள்ளது. கோதுமை, சோளம், காய்கறிகள், பழங்கள் என அதிக அளவில் விளைவித்து சாதித்துக் கொண்டிருக்கிறது. தக்காளி, வெள்ளரி, சுரைக்காய், வாழை, பேரிச்சை, ஆப்பிள், செர்ரி, பேரிக்காய் உள்ளிட்டவை அதிக அளவில் விளைகிறது. எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களை ஏற்றுமதி செய்வதில் முதலிடம் இஸ்ரேலுக்குத்தான். அதேபோல ஒயின் உற்பத்தி, பருத்தி உற்பத்தி எனப் பலவற்றில் முன்னணியில் இருக்கிறது. லில்லி மலர்களைப் பல்லாயிரக்கணக்கான ஏக்கரில் பயிரிட்டு உலக சாதனை படைத்திருக்கிறது இஸ்ரேல்.
இஸ்ரேல்
அதிக அளவில் மாடுகளை வைத்து பால் உற்பத்தியிலும் முன்னணி இஸ்ரேல்தான். மரங்களால் கிடைக்கும் அத்தனை பயன்களையும் முறையாக பயன்படுத்திக் கொள்ளும் உலகின் ஒரே நாடு இஸ்ரேல். புதிய தொழில்நுட்ப நீர்ப் பாசனம், வறண்டப் பாலைவனத்தில் பயிர் செய்யும் முறை, நல்ல விளைச்சலைத் தரும் புதுப்புது தாவரங்கள் என அவ்வப்போது ஆச்சர்யத்தைக் கொடுத்து வருகிறது, இஸ்ரேல். மற்ற நாடுகள் இஸ்ரேலின் தொழில்நுட்பங்களையும், கருவிகளையும் அதிகமான அளவில் பயன்படுத்தி வருகின்றன. அதேபோல இயற்கை விவசாயத்தையும் மீட்டெடுக்கும் பணியில் முழுமூச்சாக இறங்கியிருக்கிறது, இஸ்ரேல். வறண்ட நிலப்பகுதி கொண்ட இஸ்ரேல்... விவசாய தொழில்நுட்ப வளர்ச்சியின் முதன்மையான நாடாகத் திகழ்கிறது.  அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளுக்கு அதிகமான பழ ஏற்றுமதி செய்யும் நாடும் இஸ்ரேல்தான். இதற்குக் காரணம், விவசாயிகளின் கூட்டுப் பண்ணைத் திட்டமும், இயற்கை விவசாயம்தான்.  
வெப்பம் நிறைந்த பாலை, குடிக்க உதவாத உப்பு நீர், சீரற்ற பருவநிலை என அனைத்து சாபக்கேடுகளையும் தன்னகத்தே கொண்டது இஸ்ரேல். இவற்றை வைத்துக் கொண்டே வெற்றிகரமாக விவசாயம் செய்து வருகிறது. இதனால் இந்தியா இஸ்ரேலிய வேளாண் தொழில்நுட்பங்களை பெறும் முயற்சியில் இறங்கியிருக்கிறது. இது நிச்சயம் இந்திய விவசாயத்தில் மாற்றம் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலில் வளமான மண் இல்லை, தண்ணீர் இல்லை, வேளாண்மை செய்ய ஆட்கள் இல்லை, சீரான பருவநிலை இல்லை. ஆனால், இந்தியாவைப் போல, 10 மடங்கு அதிகமாக விவசாய பொருட்களை விளைவிக்கிறது. இந்த வளர்ச்சிதான், இன்று நவீன விவசாய முறைக்கு உதாரணமாக உலகமே சுட்டிக்காட்டுகிறது.
விவசாயம்
நவீனத் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்திக் காய்கறி மற்றும் பழங்கள் சாகுபடியில் உயர் மகசூல் எடுத்து வருகிறது இஸ்ரேல். அங்குப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்களை இந்திய விவசாயிகளும் பயன்படுத்தும் வகையில், இந்திய அரசு இஸ்ரேல் நாட்டோடு இணைந்து இந்தியாவில் ஏழு பயிற்சி மையங்களை அமைத்துள்ளது. அவற்றில் மூன்று பயிற்சி மையங்கள் தமிழகத்தில் உள்ளன. மலர் சாகுபடிக்காக ஓசூரிலும், மா சாகுபடிக்காகக் கிருஷ்ணகிரியிலும், காய்கறிச் சாகுபடிக்காகத் திண்டுக்கல்லிலும் பயிற்சி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

Thursday, April 19, 2018

அணுஆயுதத்தை முன்னுரைத்த வேதாகமம்


Wednesday, April 18, 2018

கடைசிகால தற்பிரியர் - தொழில்நுட்பம்


Thursday, April 12, 2018

கர்த்தருடைய வசனம் கேட்கக் கிடையாத பஞ்சகாலம் வருகிறது.


Wednesday, April 11, 2018

ஆயுதங்களை எடுத்து எரிப்பார்கள்; ஏழுவருஷம் அவைகளை எடுத்து எரிப்பார்கள்.எசேக்கியேல் 39:9


அன்பு தணிந்துபோம் ‍- கடைசிகால அடையாளங்கள்


Monday, August 25, 2014

இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் நிலநடுக்கங்கள் எத்தனை எத்தனை?

இயேசுவிடம் ஒரு கேள்வி: உம்முடைய வருகைக்கும், உலகத்தின் முடிவுக்கும் அடையாளம் என்ன?
இயேசுவின் பதில்: ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பூமியதிர்ச்சிகளும் பல இடங்களில் உண்டாகும், பஞ்சங்களும் கலகங்களும் உண்டாகும்; இவைகள் வேதனைகளுக்கு ஆரம்பம்.
இவைகள் சம்பவிக்கத் தொடங்கும்போது, உங்கள் மீட்பு சமீபமாயிருப்பதால், நீங்கள் நிமிர்ந்து பார்த்து, உங்கள் தலைகளை உயர்த்துங்கள் என்றார் இயேசு.
இயேசு கிறிஸ்துவின் வருகைக்கு நீங்கள் தயாரா நண்பரே? (லூக்கா 21:28)

                                                      இந்த ஆகஸ்ட் மாதம் மட்டும் நிலநடுக்கங்கள்

Monday, August 18, 2014

கைவிரல் வைத்தால் தான் வாங்க முடியும் - ‍சீக்கிரம் தமிழகத்தில்

Slowly we are kind of getting there. "அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கு செய்தது" என்கிறது வேதாகமம்.செய்திதாள் செய்திய‌ பாருங்க. கூடிய சீக்கிரத்தில் அந்த நாளும் வந்துடும்ங்க. நாம பெற்ற சுதந்திரம் இன்னும் இருக்குதா? இல்ல இருந்த சுதந்திரமும் போயிட்டிருக்குதான்னு தெரியலைங்க. எல்லாம் நம்ம நன்மைக்கு தான்னு சொல்லி கொஞ்சம் கொஞ்சமா இருந்த‌ சுதந்திரமும் போயிட்டு தான் இருக்குதுனு தோணுது (வெளி:13:16,17). No one can buy or sell unless he has the mark, that is, the name of the beast or the number of its name.Revelation 13:17

Wednesday, June 11, 2014

என் ஜனங்களே! அவளைவிட்டு வெளியே வாருங்கள்

எல்லாமே வெகு வேகமாக நடக்கின்றன. வெகுஜன ஊடகங்களெல்லாம் இதைப் பற்றி பேசுவதே இல்லை. திடீரென ஒருநாள் எல்லாமே முடிந்திருக்கும். எம்மதமும் சம்மதமென நீங்கள் ஒத்துக்கொள்ள தயாரா? ஒன்று கூடி சமாதான சின்னமாக ஒலிவமரத்தை நட்டிருக்கிறார்கள். ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? என்கிறதே வேதாகமம் (II கொரி 6:14 16). கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள உறவு ஒரு மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் உள்ள புனிதமான‌ உறவு. இதில் மூன்றாம் நபர் நுழையும் போது சபையாகிய மணவாட்டி களங்கப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தல் 18ம் அதிகாரத்திலுள்ளது போல சபையானது வேசியாகிறாள். அதின் முடிவை நீங்கள் 17,18,19 அதிகாரங்களை படித்து தெரிந்துகொள்ளலாம். பூமியின் ராஜாக்கள் எல்லாம் ஆரம்பத்தில் ஒன்றாக இது போல ஆனந்தமாக‌ கூடுவார்கள் அந்திக்கிறிஸ்துவை வெளிக்கொணர வேண்டி(வெளி 18:3). ஆனால் இறுதியில் அந்திக்கிறிஸ்து வெளிப்பட்டதும் அவளைப் பகைத்து, பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள் என்கிறது வேதாகமம் (வெளி 17:16). ரோமாபுரி முடிவில் அழிக்க‌ப்பட்டு போகும் " when these things are finished, the city of seven hills [i.e. Rome] will be destroyed" என முடியும் Prophecy of the Popes நினைவுக்கு வருகிறது. 
"என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்" ( வெளி 18:4)

Thursday, February 20, 2014

ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை

வரப்போகிற உலகளாவிய சர்வாதிகாரியான அந்திக்கிறிஸ்து சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள் என பூமியில் எல்லோரையும் ஆட்டிப்படைப்பான் என்கிறது வேதாகமம் (வெளி:13.16). வசதியுள்ளோர்க்கு மட்டுமே இப்போதைக்கு கிடைக்கும் இன்டர்நெட் சீக்கிரத்தில் உலகமுழுவதும் எல்லோருக்கும் இலவசமாக கிடைக்கவிருக்கிறதாம். அதற்கான வேலைகளில் முழுமூச்சில் இறங்கியிருக்கிறது ஒரு நிறுவனம். அதை அவுட்டெர்நெட் என்கிறார்கள். இப்படியாக ஒருநாள் உலக மக்கள் அனைவர் கையிலும் இன்டர்நெட் உலகம் இலவசமாக‌ வந்துவிடும். அப்படியே உலகத்தின் மீது அதிகாரம் செய்யவும் அந்திகிறிஸ்துவுக்கு எளிதாய் போய்விடும். அதன் வழி ஜனங்களை அவன் அதிகாரம் பண்ணலாம் ஆட்டிப்படைக்கலாம். அப்புறம் வேதம் சொல்லுவது போல கொள்ளவும் விற்கவும் அவனறியாமல் முடியாது ஆகிவிடும். வேதம் என்ன சொல்லுகிறது தெரியுமா? ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை என்று (மத்தேயு 24:22). அன்பு சகோதர சகோதரிகளே அதற்கு முன்பாகவே இப்பூவியிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுவதுதான் புத்திசாலித்தனம். மணவாட்டியாய் கிறிஸ்துவோடு கூட எடுத்துக்கொள்ளப்பட நீங்கள் தயாரா? இல்லை அந்திகிறிஸ்துவிடம் மாட்டிக்கொண்டு விழிக்கப்போகிறீர்களா? இயேசு கிறிஸ்து சொன்ன புத்தியுள்ள கன்னிகைகள் போல‌ நாம் எல்லோரும் எப்போதும் கிறிஸ்துவின் வருகைக்கு தயாராக இருக்க வேண்டும்.

Saturday, January 11, 2014

ஏரியல் ஷரோனின் மரணமும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும்


நவீனகால இஸ்ரேலின் மிகப் பிரபலமான ரபியாகக் கருதப்படுபவர் இட்சாக் கடூரி. 108ஆவது வயதில் இவரது மரணத்தின் போது 200000 இஸ்ரேலியர்கள் எருசலேமிலே கூடினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மிகவும் பிரபலமான மதிப்பிற்குரிய இந்த‌ இட்சாக் கடூரி ரபியின் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி இருக்கின்றனவாம். இந்தோனேசியா சுனாமியையும் அதைத்தொடந்த அழிவுகளையும் இவர் முன்னறிவித்ததாக கூறுகிறார்கள். 2006‍ஆம் ஆண்டில் இட்சாக் கடூரி தான் இறந்த போது ஒரு பேப்பர் குறிப்பை ஒரு சீலிட்ட கவரில் விட்டு சென்றிருந்தார். தான் மேசியாவைக் கண்டேன் என்றும் அவரது பெயரை இந்த குறிப்பில் எழுதியிருக்கிறேன் என்றும் என் இறப்பிற்கு பின் ஒரு வருடம் கழித்து இந்த குறிப்பை திறந்து பார்த்து உண்மையான மேசியாவை தெரிந்து கொள்ளுங்கள் என அறிவித்து சென்றிருந்தார். அவரது மரணத்திற்கு பின் சரியாக ஒரு வருடம் கழித்து 2007ல் அவரது குறிப்பை திறந்து படித்தபோது அதில் எபிரேய மொழியில் ஜெசுவா அதாவது இயேசு என்று எழுதப்பட்டிருந்தது. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் இந்த குறிப்பை பிராடு போர்ஜரி எனச்சொல்லி ஒதுக்கிதள்ளிவிட்டனர்.

இதே பிரபல ரபி சொல்லிச் சென்றிருக்கும் இன்னொறு வாக்கு ஏரியல் ஷாரோனின் மரணம் பற்றியது. அதாவது ஏரியல் ஷாரோனின் மரணத்தை தொடர்ந்து மேசியா வெளிப்படுவார் என்பதாகும். இந்த வார்த்தைகளை கடூரி சொல்லும் போது இன்னும் ஏரியல் ஷாரோன் இஸ்ரேலின் பிரதமாக திடகாத்திரமாக இருந்து வந்தார். அடுத்து சில மாதங்களில் ஜனவரி 2006‍ல் கடூரியும் இறந்து விட  அதே மாதம் ஏரியல் ஷாரோனும் ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையானார். கடந்த எட்டு வருடங்களாக மரணிக்காமல் கோமா நிலையிலேயே இருந்துவந்த ஷாரோன் இப்போது மரணம் அடைந்திருக்க கடூரியின் தீர்க்கதரிசனம் இப்போது மிக‌ பிரபலமாக பேசப்படுகிறது. எட்டு வருடங்களாக அவரை சாகவிடாமல் கோமாவிலேயே அவரை வைத்து இருந்தது மிக ஆச்சரியமான விசயமாகும்.

வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார். எபிரெயர் 10:37