விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும். யாக்கோபு 5:15
Prayer offered in faith will heal the sick. James 5:15
Wednesday, April 30, 2014
விசுவாசமுள்ள ஜெபம் பிணியாளியை இரட்சிக்கும்
Thursday, February 20, 2014
ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை
வரப்போகிற உலகளாவிய சர்வாதிகாரியான அந்திக்கிறிஸ்து சிறியோர், பெரியோர், ஐசுவரியவான்கள், தரித்திரர், சுயாதீனர், அடிமைகள் என பூமியில் எல்லோரையும் ஆட்டிப்படைப்பான் என்கிறது வேதாகமம் (வெளி:13.16). வசதியுள்ளோர்க்கு மட்டுமே இப்போதைக்கு கிடைக்கும் இன்டர்நெட் சீக்கிரத்தில் உலகமுழுவதும் எல்லோருக்கும் இலவசமாக கிடைக்கவிருக்கிறதாம். அதற்கான வேலைகளில் முழுமூச்சில் இறங்கியிருக்கிறது ஒரு நிறுவனம். அதை அவுட்டெர்நெட் என்கிறார்கள். இப்படியாக ஒருநாள் உலக மக்கள் அனைவர் கையிலும் இன்டர்நெட் உலகம் இலவசமாக வந்துவிடும். அப்படியே உலகத்தின் மீது அதிகாரம் செய்யவும் அந்திகிறிஸ்துவுக்கு எளிதாய் போய்விடும். அதன் வழி ஜனங்களை அவன் அதிகாரம் பண்ணலாம் ஆட்டிப்படைக்கலாம். அப்புறம் வேதம் சொல்லுவது போல கொள்ளவும் விற்கவும் அவனறியாமல் முடியாது ஆகிவிடும். வேதம் என்ன சொல்லுகிறது தெரியுமா? ஒருவனாகிலும் தப்பிப்போவதில்லை என்று (மத்தேயு 24:22). அன்பு சகோதர சகோதரிகளே அதற்கு முன்பாகவே இப்பூவியிலிருந்து எஸ்கேப் ஆகிவிடுவதுதான் புத்திசாலித்தனம். மணவாட்டியாய் கிறிஸ்துவோடு கூட எடுத்துக்கொள்ளப்பட நீங்கள் தயாரா? இல்லை அந்திகிறிஸ்துவிடம் மாட்டிக்கொண்டு விழிக்கப்போகிறீர்களா? இயேசு கிறிஸ்து சொன்ன புத்தியுள்ள கன்னிகைகள் போல நாம் எல்லோரும் எப்போதும் கிறிஸ்துவின் வருகைக்கு தயாராக இருக்க வேண்டும்.
Labels:
Antichrist,
Bible Prophecy,
End Time News,
Revelation,
Science,
Second Coming,
USA
Saturday, January 11, 2014
ஏரியல் ஷரோனின் மரணமும் இயேசு கிறிஸ்துவின் இரண்டாம் வருகையும்
நவீனகால இஸ்ரேலின் மிகப் பிரபலமான ரபியாகக் கருதப்படுபவர் இட்சாக் கடூரி. 108ஆவது வயதில் இவரது மரணத்தின் போது 200000 இஸ்ரேலியர்கள் எருசலேமிலே கூடினார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். மிகவும் பிரபலமான மதிப்பிற்குரிய இந்த இட்சாக் கடூரி ரபியின் அநேக தீர்க்கதரிசனங்கள் நிறைவேறி இருக்கின்றனவாம். இந்தோனேசியா சுனாமியையும் அதைத்தொடந்த அழிவுகளையும் இவர் முன்னறிவித்ததாக கூறுகிறார்கள். 2006ஆம் ஆண்டில் இட்சாக் கடூரி தான் இறந்த போது ஒரு பேப்பர் குறிப்பை ஒரு சீலிட்ட கவரில் விட்டு சென்றிருந்தார். தான் மேசியாவைக் கண்டேன் என்றும் அவரது பெயரை இந்த குறிப்பில் எழுதியிருக்கிறேன் என்றும் என் இறப்பிற்கு பின் ஒரு வருடம் கழித்து இந்த குறிப்பை திறந்து பார்த்து உண்மையான மேசியாவை தெரிந்து கொள்ளுங்கள் என அறிவித்து சென்றிருந்தார். அவரது மரணத்திற்கு பின் சரியாக ஒரு வருடம் கழித்து 2007ல் அவரது குறிப்பை திறந்து படித்தபோது அதில் எபிரேய மொழியில் ஜெசுவா அதாவது இயேசு என்று எழுதப்பட்டிருந்தது. இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாத யூதர்கள் இந்த குறிப்பை பிராடு போர்ஜரி எனச்சொல்லி ஒதுக்கிதள்ளிவிட்டனர்.
இதே பிரபல ரபி சொல்லிச் சென்றிருக்கும் இன்னொறு வாக்கு ஏரியல் ஷாரோனின் மரணம் பற்றியது. அதாவது ஏரியல் ஷாரோனின் மரணத்தை தொடர்ந்து மேசியா வெளிப்படுவார் என்பதாகும். இந்த வார்த்தைகளை கடூரி சொல்லும் போது இன்னும் ஏரியல் ஷாரோன் இஸ்ரேலின் பிரதமாக திடகாத்திரமாக இருந்து வந்தார். அடுத்து சில மாதங்களில் ஜனவரி 2006ல் கடூரியும் இறந்து விட அதே மாதம் ஏரியல் ஷாரோனும் ஸ்ட்ரோக்கினால் பாதிக்கப்பட்டு மரணப்படுக்கையானார். கடந்த எட்டு வருடங்களாக மரணிக்காமல் கோமா நிலையிலேயே இருந்துவந்த ஷாரோன் இப்போது மரணம் அடைந்திருக்க கடூரியின் தீர்க்கதரிசனம் இப்போது மிக பிரபலமாக பேசப்படுகிறது. எட்டு வருடங்களாக அவரை சாகவிடாமல் கோமாவிலேயே அவரை வைத்து இருந்தது மிக ஆச்சரியமான விசயமாகும்.
வருகிறவர் இன்னுங் கொஞ்சக்காலத்தில் வருவார், தாமதம்பண்ணார். எபிரெயர் 10:37
Labels:
Bible Prophecy,
End Time News,
Israel,
Jews,
Second Coming
Tuesday, November 19, 2013
ஏதேனைச் சேர்ந்த மனித குலம்
பூமியில் வேறெந்த உயிரினங்களுக்கும் இல்லாத, ஆனால் மனிதன் மட்டுமே படும் சில அவஸ்தைகளை, வேதனைகளை சுட்டிகாட்டி ஒரு விஞ்ஞானி ஒரு வேளை மனிதன் இந்த பூமியைச் சேர்ந்தவன் அல்ல, அவன் வேறெங்காவதிருந்து தான் வந்திருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றார். கடுமையான பிரசவ வேதனை பூமியில் மனிதன் மட்டுமே படும் வேதனைகளில் ஒன்று. வேறெந்த உயிரினங்களிலும் இல்லாதது. அது போலவே சூரிய வெப்பத்தை தாங்கிக் கொள்ள முடியாத மென்மையான தோல், முதுகு வலி இப்படியாகப் பல.
ஆனால் உங்களுக்கு ஒன்று தெரியுமா? இந்த வேதனைகளெல்லாம் கடவுள் ஆரம்பத்தில் மனிதனுக்காக படைத்த ஏதேன் தோட்டத்தில் இருந்ததில்லை. எப்போது மனிதன் பாவம் செய்து ஏதேன் தோட்டத்தை விட்டு துரத்தப்பட்டானோ அப்போது வந்தவைகள் தான் இந்த வலிகளும் வேதனைகளும். ஆதியாகமம் 3:16 சொல்லுகிறது கர்த்தர் ஸ்திரீயை நோக்கி: நீ கர்ப்பவதியா யிருக்கும்போது உன் வேதனையை மிகவும் பெருகப்பண்ணுவேன்; வேதனையோடே பிள்ளை பெறுவாய் என்று.இப்படியாக பிரசவ வேதனை வந்தது.அது போலவே சும்மா சொகுசாக இருந்து சாப்பிட்ட ஆதாம் பாவம் செய்த பின் "நீ பூமிக்குத் திரும்புமட்டும் உன் முகத்தின் வேர்வையால் ஆகாரம் புசிப்பாய்" என்ற சாபம் வந்தது. முதுகு வலியும் கூடவே வந்தது. சரியாய் தான் சொன்னார் இந்த விஞ்ஞானி. நாம் பூமியில் வாழ படைக்கப்பட்டவர்களல்ல.ஏதேன் தோட்டத்தில் வாழவே படைக்கப்பட்டோம். மனிதன் செய்த பாவத்தால் இந்த பூமி சபிக்கப்பட்டதாயிற்று. மேற்சொன்ன சாபங்களும் வேதனைகளும் வந்தது. இன்னும் சில காலம் தான்.புதிய வானமும் புதிய பூமியும் தோன்றும். மனுஷர்களிடத்திலே நம் தேவன் வாசமாயிருப்பார்.அப்போது மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் எல்லாம் ஒழிந்துபோகும்.எல்லாம் புதிதாகும். ஆமேன். அல்லேலூயா. (வெளி:21:1-4)
Sunday, November 10, 2013
பில்லி கிரஹாம் இறுதி பிரசங்கம் The Cross - Billy Graham's Message To America
எப்படி அழாமல் இருக்க முடியும் அவரால்? அமெரிக்க தேசத்தின் எழுப்புதலையும் பிற்பாடு இப்போதைய பின்னடைவையும் கண்டவரன்றோ அவர். சமீபத்தில் தனது 95 ஆவது வயதை கடந்து ஆனால் இன்னமும் நம்பிக்கையாக அமெரிக்காவுக்காக பரிதபித்து அழுது கொண்டிருக்கும் ஒரு ஜீவன் தான் பில்லி கிரஹாம். நமது கண்முன்னே இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சந்ததியின் மாபெரும் தேவ மனிதர். அவரின் பிறந்த நாளையொட்டி அவரது இருதய ஏக்கம் இங்கே அவரது "இறுதி பிரசங்கமாக" வீடியோ வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து தேவாசீர்வாதம் பெறுங்கள். "இப்பொழுதும் தேவனே, இந்தச் சந்ததிக்கு உமது வல்லமையையும், வரப்போகிற யாவருக்கும் உமது பராக்கிரமத்தையும் நான் அறிவிக்குமளவும், முதிர்வயதும் நரைமயிருமுள்ளவனாகும் வரைக்கும் என்னைக் கைவிடீராக" என்ற சங்கீதம் 71:18 வசனப்படி தேவனும் அவரை கைவிடவில்லை. இறுதி அறிவிப்பும் அவர் கொடுத்தாகிவிட்டது. இனி அவர்கள் பாடு.
http://watchbillygraham.com/
Labels:
Christian Movie,
Jesus,
USA
Subscribe to:
Posts (Atom)
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்



