Wednesday, February 29, 2012

ஆந்திர திரைப்பட நடிகர் ராஜாவின் சாட்சி

தெலுங்கு திரைப்பட உலகில் முன்ணனி நடிகராக இருந்தவர் ராஜா ஏபல் (Raja Abel-రాజా అబెల్ ). ஆனந்த்(2004),சொந்த ஊரு(2009) முதலான பிரபல தெலுங்கு திரைப்படங்களில் இவர் கதாநாயகனாக நடித்துள்ளார். தற்போது கிறிஸ்துவின் அடியானாக மாறியுள்ள சகோதரன் ராஜாவின் சாட்சியை இங்கே நீங்கள் கேட்கலாம். கிறிஸ்துவுக்குள்ளாக வந்து கொண்டிருக்கும் இது போன்ற பிரபலங்கள் தேவனில் இறுதி வரைக்கும் நிலைத்திருக்க நாம் அனுதினமும் ஜெபிக்கவேண்டியது நம் கடமையாகின்றது.

யோவான் 15:4 என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்; கொடியானது திராட்சச்செடியில் நிலைத்திராவிட்டால் அது தானாய்க் கனிகொடுக்கமாட்டாததுபோல, நீங்களும் என்னில் நிலைத்திராவிட்டால், கனிகொடுக்கமாட்டீர்கள்.

மத்தேயு 24:13 முடிவுபரியந்தம் நிலைநிற்பவனே இரட்சிக்கப்படுவான்.

நடிகர் ராஜாவின் சாட்சி தெலுங்கு மொழியில் (Actor Raja Abel Testimony in Telugu)


நடிகர் ராஜாவின் சாட்சி ஆங்கிலத்தில் (Actor Raja Abel Testimony in English)
Part 1

Part 2

Part 3

Part 4


Related Post:
இயேசு கிறிஸ்துவிடம் மனம்திரும்பி வந்த நடிகை நக்மாவின் சாட்சி

Monday, February 13, 2012

தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ



கடந்த செவ்வாய்கிழமை (7 பிப்ரவரி 2012) பாகிஸ்தான் கராச்சி கடலோரப் பகுதியில் ஒதுங்கிய அந்த மாபெரும் திமிங்கலச் சுறாவைக் (Whale Shark) கண்டதும் பலருக்கும் பெருத்த அதிர்ச்சி. இத்தனை பெரிய கடல்வாழ் உயிரினங்கள் கடலில் வாழ்வது பலருக்கும் ஆச்சரியம். 40 அடி நீளத்தில் 6 அடி அகலத்தில் 7.7 டன் எடையில் இருந்த இந்த திமிங்கல சுறா ஒரு ஸ்கூல் பஸ்ஸின் அளவாக இருந்ததாக செய்திகள் குறிப்பிடுகின்றன. பல கிரேன்களில் உதவியுடன் நான்கு மணிநேர போராட்டத்துக்குப் பின் கரைசேர்த்தனர். 2,200 டாலர் மதிப்பில் அது ஏலம் போனது. இந்த வகை மீன்களில் இது சிறியது எனவும் பெரிய அளவு 66 அடிவரைக்கும் நீளமாக இருக்கும் என சொல்கின்றார்கள். ஆச்சரியத்திலும் ஆச்சரியம்.

இதனை தனது குழந்தைகளுக்கு காட்டிக் கொடுக்க வந்த ஆங்கிலிக்கன் சபை போதகர் அஷரப் டேனியல் வேதபுத்தகத்தின் மீதான தனது நம்பிக்கை இன்னும் உறுதிப்படுவதாக தெரிவித்தார். அவர் கூறும் போது, ”யோனா மீனின் வயிற்றில் மூன்று நாட்கள் இருந்ததாக பைபிள் கூறுகிறது. எனது பிள்ளைகளும் தேவனின் வல்லமையை பார்க்கும் படியாக அவர்களை இங்கே கூட்டி வந்தேன்” என்றார். MSNBC செய்தி நிறுவனம் இதை லிவியாதான் (The leviathan) என தன் செய்திக்குறிப்பில் கூறியது யோபின் புத்தகத்தை நினைவு படுத்தியது. யோபு 41-ம் அதிகாரம் இப்படியாக தொடங்குகிறது. ”லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ? அதின் மூக்கை நார்க்கயிறுபோட்டுக் கட்டக்கூடுமோ? குறட்டினால் அதின் தாடையை உருவக் குத்தக்கூடுமோ?”
வேதம் எத்தனை உண்மை. (வீடியோ செய்தி)

Tuesday, February 07, 2012

மாணிக்க திருமொழிகள் 1

எவனொருவன் வெயிலையும் மழையையும் சமமாகப் பாவிக்கிறானோ அவனுக்கு டபுள் நிமோனியா கிட்டும்.இது உலகம்.
எவனொருவன் சுகத்தையும் துக்கத்தையும் சமமாய் பாவிக்கிறானோ அவனுக்குப் பேரின்பம் கிட்டும். இது வேதாந்தம்.

மனுக்குலம் முழுமையும் பொறுத்த முச்சத்துருக்கள்- பிசாசு,மாம்சம்,உலகம்.
தெய்வ மக்களைப் பொறுத்த முச்சத்துருக்கள்-சோதனை,கவலை,பயம்

அடே அப்பா! மனிதனுக்குத்தான் எவ்வளவு பைத்தியம்.
அவனால் ஒரு புழுவை உண்டாக்க முடியவில்லை; ஆனால் கணக்கில்லாத கடவுள்களை மட்டும் உண்டாக்கிக்கொண்டே இருக்கிறான்.

பகலில் தீவெட்டி கொழுத்துகிறவன் இரவில் எண்ணெய் இல்லாமல் திண்டாடுவான்.இளமையில் பணம் சேர்க்காமல் செலவு செய்பவன், முதுமையில் வாழ வழியற்று வாடுவான்.

குருடர் கண்களில் சூரிய வெளிச்சம் படும்போது கூச்சம் உண்டாகாது;இதயக் கடினமுள்ளவர்களுக்கு சுவிசேஷ வெளிச்சம் படும்போது அது அவர்களைப் பிரகாசிப்பிக்காது.

சவுல் என்ற பவுல் 25 வயதில் குணப்படாமல் 70 வயதில்குணப்பட்டிருப்பாரானாம் என்னவாகி இருக்கும்?சரித்திரத்தில் பவுல் என்ற பெயரே வந்திருக்காது.

கடவுள் ஒவ்வொரு பட்சிக்கும் ஆகாரத்தைக் கொடுக்கிறார்.
ஆனால் பட்சிகளின் வாயில் கொண்டுபோய் ஆகாரத்தைத் திணிக்கிறதில்லையே!

மெழுகுவர்த்தி மற்றவர்களுக்கு வெளிச்சம் கொடுக்கத் தன்னைச் செலவழிக்கிறது
.
முட்டாள்களின் நடுவில் ஒரு புத்திசாலியிருப்பது குருடர்களின் நடுவே ஒரு அழகிய யுவதி இருப்பதுபோல.

காலத்தை ஆதாயப்படுத்துங்கள்.
நயா பைசாக்களை சரியானபடி நன்மைக்கேதுவாக உபயோகிக்கும் போது, நாம் ரூபாய்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ரூபாய் தன்னையே காத்துக்கொள்ளும்.
அவ்வாறே, ஒவ்வொரு நிமிஷத்தையும் வீணாய்க் கழிக்காமல் பிரயோஜனப்படுத்திக் கொள்வோமானால் நாட்களும், வாரங்களும், மாதங்களும், வருடங்களும் தங்களையே காத்துக்கொள்ளும்.
காலம் பணத்துக்குச் சமம்.

கேட்பதைவிட பேசுவதே லாபம் என்ற நிலைமை ஏற்படும் போது உன் நண்பனை மாற்றிக்கொள்.

விடாமுயற்சியை சிறையிலடைத்ததால் “மோட்ச பிரயாணம்” என்னும் புத்தகம் தோன்றியது.(ஜாண் பனியன்)
விடாமுயற்சியின் கண்ணை குருடாக்கினதால் “பரதீசு இழத்தல்” என்னும் நூல் வெளிவந்தது.(ஜாண் மில்ற்றன்)
விடாமுயற்சியின் காதை செவிடாக்கினதால் மின்சாரம் கண்டு பிடிக்கப்பட்டது.(தாமஸ் எடிசன்)

Friday, February 03, 2012

பரிகாரம் - கிறிஸ்தவ திரைப்படம்


Pariharam [VCD-Teleflim]
[ பரிகாரம் - பாவத்தினால் வரும் சாபத்தை மையமாக எடுக்கப்பட்ட படம்.. ]
For the wages of sin is death; In this story tells about the sin and comes sorrow by sin..

Watch online
Pariharam Part 1
Pariharam Part 2

Buy this VCD for Rs:100
http://www.jesusredeemsonline.com/shop/product_info.php?cPath=3&products_id=127

Wednesday, January 25, 2012

இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை ஓர் இணையற்ற வரலாறு

குறிப்பு:வரலாற்று உண்மைகளைச் சரிவர ஆராய்ந்து அறிந்து கொள்ள முடியாத சில நண்பர்கள், இயேசு கிறிஸ்து என்று ஒருவர் பிறந்தது கூட இல்லையென இந்நாட்களில் பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் எழுதி, உலகத்தை ஏமாற்றப் பார்க்கின்றனர்.
“இயேசு கிறிஸ்து பிறந்ததாகக் கூறப்படும் காலத்திலும், வரலாற்று ஆசிரியர்கள் (Historians) வாழ்ந்திருந்தார்களே, அவர்களில் யாராவது இயேசு கிறிஸ்துவைப் பற்றி யாதேனும் எழுதியதுண்டா?” என்பதே அவர்கள் கேட்கும் குதர்க்கமான கேள்வி. இக்கேள்விக்குப் பதிலளிப்பதே இக்கட்டுரையின் நோக்கம்)

ரோமப் பேரரசரான ஜூலியஸ் சீஸர், கால் (Gaul) நாட்டின் மீது படையெடுத்த வரலாற்றினை விளக்கும் மூலப்பிரதிகள் பத்திற்கும் குறைவானவை. அவற்றுள் மிகப் பழமையான பிரதி, சீஸர் இறந்து 900 ஆண்டுகளுக்குப் பின்னரே எழுதப்பட்டது. ஆயினும் இவை வரலாற்றிற்கு அடிப்படையான ஆதாரங்களாகவே கருதப்படுகின்றன.

இந்திய வரலாற்றில் இடம்பெற்றுள்ள எத்தனையோ முக்கிய நிகழ்ச்சிகளுக்குக் கூட அடிப்படையான ஆதாரங்கள் மிகக் குறைவாகவே காணப்படுகின்றன. அத்துடன் சில மன்னர்கள் வாழ்ந்த காலம், அவர்களது வரிசை ஆகியவற்றை நிர்ணயிப்பதிலும் பல சிக்கல்களும் சிரமங்களும் ஏற்படுகின்றன.

அரும்பெரும் ஆதாரங்கள் :
இயேசு கிறிஸ்துவின் வரலாறு நூற்றுக்கு நூறு உண்மையானது என்பதற்கு எழுந்த ஆதாரங்கள் எண்ணில் அடங்கா.

இயேசு கிறிஸ்துவின் அற்புத வாழ்க்கையைச் சுமந்து நிற்கும் புதிய ஏற்பாட்டின் முதல் பக்கமே அவரது வம்ச வரலாற்றை வரிசை தவறாமல் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

இயேசு கிறிஸ்து தாமே உலக வரலாற்றைக் கிறிஸ்துவுக்கு முன் என்றும், கிறிஸ்துவுக்குப் பின் என்றும் இரு பெரும் பிரிவுகளாகப் பிரித்து, ஒருபோதும் அணையாத ஒளிவிளக்காய்த் திகழ்கின்றார்.

நாம் இன்று நமது இல்லங்களிலும், அலுவலகங்களிலும் பயன்படுத்தும் நாட்காட்டியும் (Calander) அவரது பிறப்பிற்கோர் ஆதாரமாகவே அமைந்துள்ளது.

அருள்நாதர் இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை, அவர் வாழ்ந்த அதே நூற்றாண்டைச் சார்ந்தவர்களும், அவரோடு நெருங்கிப் பழகியவர்களுமான அவருடைய சீடர்களும், சுவிசேஷகர்களுமே எழுதி உலகிற்கு அளித்துள்ளனர். அவரைப் பற்றி விளக்கமாய்க் கூறும் புதிய ஏற்பாட்டிற்கு (New Testament) முக்கிய அடிப்படையாய் நமது கரங்களிலிருக்கும் மூலப்பிரதிகள் 5000-க்கும் அதிகமானவை. இவை மூல மொழியான கிரேக்க மொழியில் எழுதப்பட்டவை. நமக்குக் கிடைக்கப்பட்ட இப்பிரதிகள் கி.பி.2-ம் நூற்றாண்டின் ஆரம்பப் பகுதியில் இருந்து எழுதப்பட்டவை.

மேற்கூறிய மூலப்பிரதிகளைத் தவிர ஆயிரக்கணக்கான பழமை மிக்க பல மொழித் திருப்புதல் பிரதிகளும் (Ancient versions) கி.பி.1-ஆம் நூற்றாண்டிலும் அதற்குச் சற்று பின்னரும் வாழ்ந்த இக்னாசியஸ், பபியாஸ், பர்னபாஸ், டாட்டியன், ஜஸ்டின் மார்ட்டியர், இரானியஸ், யூசிபியஸ், ஆரிஜன் போன்ற பல திருச்சபைப் பிதாக்கள் இயேசுவைப் பற்றியும் திருச்சபையைப் பற்றியும் எழுதிய ஆதாரக் குறிப்புகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

இஸ்ரேல் நாட்டில் ஒவ்வொரு நாளிலும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் பார்த்துப் பரவசமடையும் இயேசு நாதரின் திறக்கப்பட்ட கல்லறையும், அவரது சரித்திரம் உண்மையானதென்பதற்கொரு சாட்சியாய் இருக்கிறது.

மேலும் ஆரம்ப நூற்றாண்டுகளில் வாழ்ந்து வந்த புற மதத்தைச் சார்ந்த வரலாற்று ஆசிரியர்களும், கிறிஸ்து மார்க்கத்திற்கு எதிராக எழுந்த தேசத் தலைவர்களும் கூட இயேசு நாதரின் வாழ்க்கைச் சரித்திரம் மெய்யென்பதற்குரிய ஆதாரங்கள் பலவற்றைத் தந்துள்ளனர், அவற்றில் சிலவற்றைக் கீழே காணலாம்.

1.பிளினி (Pliny):
இவர் பிதினியா நாட்டின் (சின்ன ஆசியா) அதிபர். இவர் கி.பி.110-ல் டிராஜன் (Trajan) மன்னனுக்கு எழுதிய கடிதத்தில், கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை மறுதலிக்கும் பொருட்டுத் தாம் கையாடிய கொடுஞ்செயல்களை விளக்கி எழுதியுள்ளார். (Colin Chapman எழுதிய Christianity on Trial, பக்கம் 422,423)

2.டாசிட்டஸ் (Tacitus):
இவர் ரோம வரலாற்று ஆசிரியர். இவர் கி.பி.115-ஆம் ஆண்டில் தாம் எழுதிய வரலாற்று நூலில் (Annals), நீரோ மன்னன் கிறிஸ்தவர்களை கொன்று குவித்ததைக் குறித்து தெளிவாக எழுதியுள்ளார். மேலும், கிறிஸ்துவைப் பின்பற்றியவர்களே கிறிஸ்தவர்களென்றும், டைபீரியஸ் மன்னனின் ஆட்சியில், பொந்திப் பிலாத்து என்னும் ஆளுநரால் கிறிஸ்து கொலை செய்யப்பட்டார் என்றும் இவர் குறிப்பிட்டுள்ளார். Christus, from whom their (Charistians`) name is derived was executed at the hands of the Procurator Pontius Pilate in the reign of Tiberius" (Christianity on Trial பக்கம் 423,424)

3.சூட்டோனியஸ் (Suetonius):
இவர் ஒரு ரோம சரித்திர ஆசிரியர். கி.பி.120-ஆம் ஆண்டில் தாம் எழுதிய “கிளாடியஸ் மன்னனின் வாழ்க்கை வரலாறு” என்னும் நூலில், இயேசு கிறிஸ்துவைப் பின்பற்றிய கிறிஸ்தவர்கள் கிளாடியஸ் மன்னரால் ஏன் ரோமாபுரியிலிருந்து நாடுகடத்தப்பட்டனர் என்பதற்குரிய விளக்கம் அளித்துள்ளார். (Christianity on Trial, பக்கம் 424)

4.ஜோசபஸ் (Josephus):
இவர் முதலாம் நூற்றாண்டில் வாழ்ந்த யூத வரலாற்று ஆசிரியர். இவர் கி.பி.93 ஆம் ஆண்டில், “யூதரின் தொன்மை” (The Antiquities of the Jews) என்னும் நூலில், இயேசு நாதர் ஞானமிக்கவர் என்றும் அற்புதங்கள் பல புரிந்தார் என்றும், மக்களுக்குப் பல போதனைகள் அளித்தார் என்றும், பல புறமதத்தவரையும், யூதரையும் தம்பால் இழுத்துக்கொண்டார் என்றும், அவரைப் பிலாத்து சிலுவை மரணத்துக்கு ஒப்புக்கொடுத்தார் என்றும், அதன்பின் அவர் மூன்றாம் நாளில் தம்மிடம் அன்பு செலுத்தியவருக்கு உயிருடன் காட்சியளித்தார் என்றும் எழுதியுள்ளார். (Christianity on Trial,பக்கம் 424,425)




யாரிந்த லூவோலேஸ்? (Lew Wallace)
இவர் இங்கர்சால் என்னும் நாத்திகரின் உற்ற நண்பர். ஆளுநராய் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் இயேசு கிறிஸ்துஎன்று ஒருவர் வாழ்ந்ததே இல்லை என்று எழுதத் துணிந்தார். அதற்கு போதுமான ஆதாரங்கள் திரட்ட தமது செல்வத்தில் பெரும்பகுதியைச் செலவளித்தார். புத்தகத்தை எழுதத் தொடங்கினார். ஆனால் ஒரு சில வரிகளுக்கு மேல் அவரால் எழுதவே
முடியவில்லை.ஏனெனில் அவருக்கு கிடைத்த ஆதாரங்கள் அனைத்துமே இயேசு கிறிஸ்து பிறந்தது,வாழ்ந்த்து அற்புதங்கள் புரிந்தது, சிலுவையில் மாண்டது, மூன்றாம் நாள் உயிரோடெழுந்தது ஆகிய அனைத்தும் உண்மையென்றே உரைத்தன. இவர் மனந்திரும்பி, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மனிதனை மீட்க மனிதனாய்ப் பிறந்து, பாவமற்றப் புனிதராய் வாழ்ந்தார் என்பதை உலகிற்கு எடுத்துக்காட்ட “பென்ஹர்” (Ben Hur) என்னும் சிறந்த நூலை இயற்றினார்.

யாரிந்த கில்பர்ட்? (Gilbert)
இவர் மேல்நாட்டைச் சார்ந்த ஒரு வேதவிரோதி. லார்ட் லிட்டில் டன் (1709-1773) (Lord Little Ton) என்பவரோடு சேர்ந்து இவர் இயேசு கிறிஸ்து உயிரோடெழுந்தது ஒரு கட்டுக்கதை என்றார். தம்மால் அதை நிரூபித்துகாட்ட முடியும் என்று நீதி மன்றத்தில் சவால் விடுத்தார். எனவே நீதிமன்றம் அதற்கென நாளொன்றை தீர்மானித்தது. குறிப்பிட்ட அந்த நாள் வந்தபோது இவ்விருவரும் நீதிமன்றத்தில் கொண்டுவரப்பட்டனர். அங்கே அவர்கள், தங்களுக்குக் கிடைத்த ஆதாரங்கள் அனைத்தையும் ஆராய்ந்ததின் விளைவாகத் தாங்கள் இயேசு கிறிஸ்து உயிரோடெழும்பியது உண்மை என்று கண்டுகொண்டதாக அறிக்கையிட்டனர்.

தீர்க்கதரிசிகள்:
இவர்கள் இயேசு கிறிஸ்து பிறப்பதற்கும் பல நூற்றாண்டுகளுக்க் முன்னரே, அவர் யூதேயா நாட்டிலுள்ள பெத்லகேம் என்னும் சிற்றூரில் ஒரு கன்னியின் வயிற்றில் பரிசுத்த ஆவியினால் உற்பவித்துத் தோன்றுவார் என்று மொழிந்தனர்.மேலும் அவரது தூயவாழ்க்கை, பாடு, மரணம், உயிர்த்தெழுதல் ஆகியவற்றைக் குறித்தும் தீர்க்கதரிசிகள் முன்னுரைத்தவற்றை வேதத்தில் காணலாம். அவையாவும் ஆண்டவரது அற்புத வாழ்க்கையில் அப்படியே நிறைவேறின.

எனக்கு மிகவும் பிரியமானவர்களே,
இந்த இயேசு கிறிஸ்துவைப் போல் வேறொருவரை நாம் இந்த உலகில் காணமுடியுமா? இவரே உயிர்த்தெழுந்த உண்மையான தெய்வம்.