Tuesday, September 03, 2019
யூரோ கொடியின் பின்புலத்திலுள்ள ரோமன் கத்தோலிக்கம்
Labels:
Europe,
Revelation
Thursday, August 01, 2019
விரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு நல்லது: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அறிவிப்பு
விரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு நல்லது: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி அறிவிப்பு
விரதம், உபவாசம் மற்றும் நோன்பு என்று பல மதத்தினராலும் அழைக்கப்படும் உண்ணாவிரதம் இருப்பது அறிவியல் ரீதியாக உடலுக்கு மிகவும் நல்லது என்று இவ்வாண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி யோஷினோரி ஒசுமி தெரிவித்துள்ளார்.

பழுதடைந்த உயிரணுக்கள் தம்மைத்தாமே அழித்து சுத்தம் செய்துகொள்ளும் , ஆட்டோஃபஜி. என்றழைக்கப்படும் ‘ சுய துப்பரவு’ செயல்நுட்பம் குறித்த ஆய்வுகளுக்காக அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. ஆட்டோஃபஜி என்றால் தன்னைத்தானே உண்ணுதல் என்று பொருள். இச்செயல் மனிதன் மட்டுமன்றி அனைத்து உயிர்களுக்கும் இன்றியமையாதது. இதன்மூலம்தான் நம் உடற்செல்கள் மறுசுழற்சி செய்துகொள்கின்றன.
நமது உடல் உணவை தவிர்த்து விரதம் இருக்கும் காலங்களில் ஆட்டோஃபஜி எனப்படும் இச்சுழற்சி தீவிரமடைவதால் நமது உடல் நன்கு சுத்தமடைகிறது. எனவே அவ்வப்போது விரதம் இருப்பது உடலுக்கு நல்லது என்ற நமது முன்னோர்களின் கூற்றை நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஆட்டோஃபஜி நாம் சீக்கிரமே முதுமை அடைவதிலிருந்து நம்மை காக்கிறது. உடலில் புது செல்கள் உருவாக்கப்பட்டு பழுதடைந்த செல்களும், சேதமடைந்த புரோட்டீனும் வெளியே தள்ளப்படுகின்றன. இதன் மூலம் ஆட்டோஃபஜி நமது உடல் நலத்தை நன்கு பேணி காக்கிறது.
Labels:
Science
Tuesday, March 26, 2019
கோலன் குன்றுகள் பகுதி மீதான இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா அங்கீகரித்தது
கோலன் மலைப்பகுதி (கோலன் ஹைட்ஸ்) இஸ்ரேலின் மிகவும் எண்ணைவளம் மிகுந்த பகுதியாகும். இதுவரைக்கும் இது இஸ்ரேலின் ஒரு பகுதியாக உலகநாடுகளால் அங்கீகரிக்கப்படாமல் சர்ச்சைக்குரிய பகுதியாகவே இருந்து வந்தது. இப்போது இப்பகுதி இஸ்ரேலின் ஒருபகுதியாக அமெரிக்காவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இது வேதாகமத்தில் பாசான் எனும் ஒரு அடைக்கல பட்டணமாக குறிக்கப்படுள்ளது உதாரணமாக உபா 4:42 ல் "பாசானிலுள்ள கோலான்" என குறிப்பிடப்படுள்ளது. இறுதிகால யுத்தத்தை வர்ணிக்கும் எசேக்கியேல் 39 இதை "இஸ்ரவேல் மலைகளில் வரவும்பண்ணி" " இஸ்ரவேல் மலைகளில் விழுவீர்கள்" "இஸ்ரவேலின் மலைகளில் நான் உங்களுக்காகச் செய்யும் யாகம்" என குறிப்பிடுகிறது. இங்குள்ள அளவற்ற எண்ணை வளத்தின் மீது இரசியா/ஈரான்/துருக்கி போன்ற பைபிள் குறிப்பிடும் வட திசை நாடுகள் கண்வைத்துள்ளது இங்கு குறிப்பிடதக்கது.
சிரியாவிடம் இருந்து இஸ்ரேல் கைப்பற்றிய கோலன் குன்றுகள் பகுதி மீதான இஸ்ரேலின் உரிமையை அமெரிக்க அரசு அங்கீகரித்துள்ளது. இஸ்ரேலில் பொது தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அமெரிக்க அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த 1967ம் ஆண்டு நடந்த இஸ்ரேல் ராணுவம் நடத்திய 6 நாள் போரில் சிரியாவின் கோலன் குன்றுகள், பாலஸ்தீன எல்லையில் உள்ள மேற்கு கரை, கிழக்கு ஜெருசேலம் மற்றும் காசா பகுதிகள் கைப்பற்றப்பட்டன.
இதில் கோலன் குன்றுகள் மற்றும் கிழக்கு ஜெருசேலம் ஆகியவற்றை இஸ்ரேலுக்கு சொந்தமான பகுதியாக உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. தற்போது கோலன் குன்றுகள் பகுதியில் 20,000 இஸ்ரேலியர்கள் வசிக்கிறார்கள்.
இந்நிலையில் 52 ஆண்டுகளுக்கு பின் கோலன் குன்றுகள் பகுதி இஸ்ரேலுக்கு சொந்தமான இடம் என்று அமெரிக்கா அங்கீகரித்துள்ளது.
இது குறித்து அதிபர் டிரம்ப் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில் ‘‘இஸ்ரேலின் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு கோலன் குன்றுகள் பகுதி முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே 52 ஆண்டுகளுக்கு பின் கோலன் குன்றுகள் மீதான இஸ்ரேலின் உரிமையை அமெரிக்கா முழுமையாக அங்கீகரிக்கிறது’’ என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்புக்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹு நன்றி தெரிவித்துள்ளார்.
சிரியாவை பயன்படுத்தி இஸ்ரேலை அழிக்க ஈரான் திட்டமிட்டு வரும் நேரத்தில் அதிபர் டிரம்பின் இந்த முடிவு வரவேற்கத்தக்கது என்று பெஞ்சமின் நேதான்யாஹு டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
ஊழல் புகாரில் சிக்கி தவித்து வரும் பிரதமர் பெஞ்சமின் நேதான்யாஹூ தற்போது பொது தேர்தலுக்கு தயாராகி வருகிறார்.
அதிபர் டிரம்பின் இந்த அறிவிப்புக்கு அவரது கட்சியை சேர்ந்த எம்.பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் எதிர்க்கட்சியினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2017ம் ஆண்டு உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி ஜெருசலேம் நகரை இஸ்ரேலின் தலைநகராக அறிவித்த அமெரிக்கா தன் தூதரகத்தையும் ஜெருசலேமிற்கு மாற்றியது குறிப்பிடத்தக்கது.http://www.dinamalarnellai.com/web/news/67671
Labels:
Israel
Wednesday, January 09, 2019
விவிலிய நூல்கள் ஒரு அறிமுகம்
விவிலிய நூல்கள் ஒரு அறிமுகம்
பைபிள் என்பது பல நூல்களின் சங்கமம். பல ஆசிரியர்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சமூக, அரசியல் பின்னணியில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பே விவிலியம்.
பைபிள் என்பது பல நூல்களின் சங்கமம். பல ஆசிரியர்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சமூக, அரசியல் பின்னணியில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பே விவிலியம்.
பைபிள் என்பது பல நூல்களின் சங்கமம். பல ஆசிரியர்கள், பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு சமூக, அரசியல் பின்னணியில் எழுதப்பட்ட நூல்களின் தொகுப்பே விவிலியம். மீனவர்கள், மேய்ப்பர்கள் முதல் கவிஞர்கள், அரசர்கள் வரை இந்த நூல்களின் ஆசிரியர்களாக உள்ளனர்.
இந்த நூல்களெல்லாம் தூய ஆவியானவரின் ஏவுதலால், வழிகாட்டுதலால் எழுதப்பட்டது என்பதே கிறிஸ்தவ நம்பிக்கையின் அடிப்படை. விவிலியம் சொல்வதும் அது தான்.
‘பிப்லோஸ்’ என்னும் கிரேக்கச் சொல் மருவி ‘பிப்ளியோன்’ என்றானது. இதற்கு புத்தகம் என்பது பொருள். இது தான் ‘பைபிள்’ என்றானது.
விவிலியம் தன்னை இரண்டாகப் பிரித்துக்கொள்கிறது. ஒன்று ‘பழைய ஏற்பாடு’. இன்னொன்று ‘புதிய ஏற்பாடு’.
‘ஏற்பாடு’ என்பது உடன்படிக்கை.
‘பழைய ஏற்பாடு’ ஆதி மனிதன் ஆதாமின் பிறப்பு முதல் இயேசு வின் பிறப்புக்கு முந்திய காலம் வரை உள்ள தலைமுறையின் வரலாற்றை, குறிப்பாக இறைவாக்கினர்களின் வரலாற்றை, இஸ்ரயேல் குல மக்களின் வாழ்க்கை முறையை விளக்குகிறது.
‘புதிய ஏற்பாடு’ இயேசுவின் பிறப்பு முதல் அவருடைய அப்போஸ்தலர்களின் ஆதி கால கிறிஸ்தவ மறை பரப்புதல் பணி வரை நீடிக்கிறது.
பழைய ஏற்பாட்டில் 39 நூல்களும், புதிய ஏற்பாட்டில் மொத்தம் 27 நூல்களும், இணை திருமறையில் 7 நூல்களும் உள்ளன. இந்த எழுபத்து மூன்று நூல்களின் தொகுப்பே திருவிவிலியம்.
கி.மு. 750-ல் எழுதப்பட்ட ஆமோஸ் இறைவாக்கினரின் நூலே விவிலியத்திலேயே முதலில் எழுதப்பட்ட நூல். மற்ற நூல்கள் எல்லாம் அதன் பின்னரே எழுதப்பட்டன.
காலம் காலமாக வாய்வழிக் கதைகளாகவும், பரம்பரையினரின் சிறு சிறு குறிப்புகளாகவும், படங்களாகவும் இருந்த பழைய ஏற்பாட்டுக் கதைகள், பாடல்கள் எல்லாம் பிற்காலத்தில் தான் எழுத்து வடிவம் பெற்றன.
கி.மு. 1300-ம் ஆண்டு முதல், கி.பி. 100-ம் ஆண்டு வரை உருவான படைப்புகள் திரு விவிலியத்தில் இடம்பெற்றுள்ளன என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு கணக்கு.
இப்போது காணப்படும் விவிலியத்தின் வடிவம் ஆரம்ப காலத்தில் இல்லை. கி.பி. 1440-ல் இராபி நாத்தான் என்பவர் பழைய ஏற்பாட்டு நூலை ஆராய்ந்து அவற்றை அதிகாரம், வசனங்களாகப் பிரித்தார். இது வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் கோடிடவும் மிகவும் வசதியாக இருந்தது.
புதிய ஏற்பாட்டு வசனங்கள் கி.பி. 1550-ல் பிரிக்கப்பட்டன. ஏற்கனவே புதிய ஏற்பாட்டு அதிகாரங்களை பேராயர் ஸ்டீவ் லாங்டன் 1216-ல் பிரித்திருந்தார்.
களிமண், ஓடுகள், பாப்பிரஸ் தாள்கள் மற்றும் மரப்பட்டைகள் போன்றவற்றில் மூல செய்திகள் எழுதப்பட்டிருந்தன.
சீனாய்ச் சுவடி, வத்திக்கான் சுவடி இரண்டும் கி.பி. 350-ல் கண்டெடுக்கப்பட்டன.
யூதேயா பாலை நிலப்பகுதியில் கி.பி 1947-ம் ஆண்டு பல ஏடுகள் கண்டெடுக்கப்பட்டன. இவை கி.பி இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தவை.
பழைய ஏற்பாட்டின் 180 ஏடுகளும், எசேயா இறைவாக்கினர் நூலின் முழு வடிவமும் இங்கே களிமண் ஜாடிகளில் பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. இவை மும்ரான் குகைகளில் வாழ்ந்த எசேனியர் களால் பாதுகாத்து வைக்கப்பட்டவையாகும்.
பழைய ஏற்பாடு பெரும்பாலும் எபிரேய மொழியிலும், சில பகுதிகள் அரமேய மொழியிலும் எழுதப்பட்டுள்ளன. பின்னர் இந்த நூல்கள் கிரேக்கத்திலும் மொழி பெயர்க்கப்பட்டன. புதிய ஏற்பாடு நூல் முழுவதும் கிரேக்க மொழியிலேயே எழுதப்பட்டுள்ளது.
புனித ஜெரோம் முழு திரு விவிலியத்தையும் லத்தீனில் மொழிபெயர்த்தார். இது ஒரு மிகப்பெரிய பணி. நான்காம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இந்த நூல் சுமார் பதினைந்து நூற்றாண்டுகள் திருச்சபையின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பாக பயன்படுத்தப்பட்டு வந்தது. லத்தீன் மொழியிலிருந்தே திருவிவிலியம் பல மொழிகளுக்கும் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.
1450-ம் ஆண்டு விவிலியம் முதன் முதலில் அச்சிடப்பட்டது. அச்சு இயந்திரத்தைக் கண்டுபிடித்த கூடன்பர்க் முதலில் அச்சடித்த நூல் விவிலியம் தான்.
சீகன்பால்கு 1715-ம் ஆண்டு திருவிவிலியத்தை தமிழில் மொழிபெயர்த்தார். அது தமிழ் மொழியில் அச்சிடப்பட்டது. ஆசியாவிலேயே முதலில் விவிலியம் மொழிபெயர்க்கப்பட்டது தமிழ் மொழியில் தான்.
அதன் பின்னர் 1727-ல் முழு விவிலியம் மொழிபெயர்க்கப் பட்டது. தற்போது உலக மொழிகள் 1848-ல் திருவிவிலியம் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ஆண்டுக்கு சுமார் 10 கோடி விவிலியங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
விவிலியத்தின் மையமான இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை மத்தேயு, மார்கு, லூக்கா, யோவான் ஆகிய நான்கு பேரும் எழுதியிருக்கிறார்கள். இவர்களில் மத்தேயுவும், யோவானும் இயேசுவின் சீடர்கள். இயேசுவின் செயல்களை மையமாய் வைத்து மார்குவும், போதனைகளை மையமாய் வைத்து மத்தேயு லூக்கா ஆகியோரும், இயேசுவின் இறை தன்மையை மையமாய் வைத்து யோவானும் நூல்களை ஆக்கியுள்ளனர்.
‘ஆதியிலே தேவன்’ என ஆரம்பித்து ‘ஆமென்’ என முடிகிறது பைபிள்.
சேவியர்
பைபிளில் கூறப்படும் எசேக்கியேல் சக்கரமும், ஏலியன்களின் யூஎப்ஓ'க்களும்!
Subscribe to:
Posts (Atom)
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்

