அமெரிக்காவிலிருந்து ஒரு கிறிஸ்தவ சகோதரர் வேதனையாக இச்செய்தியைக் கூறினார். இந்தியாவிலிருந்து அமெரிக்க ஐக்கிய நாடுகளுக்கு வரும் பெரும்பாலான ஊழியர்கள் என்ன காரணத்துக்காக வருகிறார்கள் என தெரியாவிட்டாலும் அவர்களில் அநேகர் எல்லாரும் தவறாமல் செய்வது, அமெரிக்காவினையும் அந்நாட்டுமக்களையும் சபிப்பதும், இந்த நாடு சீக்கிரத்தில் பிச்சைக்காராக நாடாகிவிடும் எனவே இங்குள்ள இந்தியர்களெல்லாம் மீண்டும் இந்தியாவுக்கு வர தயாராக இருங்கள் என அழைப்பு விடுப்பதுமாக இருக்கிறார்கள். அதேநேரம் இந்தியா சீக்கிரத்தில் வல்லரசு நாடாகிவிடும் எனக் கூறி இந்தியாவை வானளாவ உயர்த்தி கூறுவதும் அமெரிக்காவை மட்டம் தட்டி தங்கள் செய்திகளில் பேசுவதுமாக இருக்கிறார்கள். இந்தியாவின் எழுப்புதலுக்காக அமெரிக்காவில் கூடி ஜெபிக்கும் இவர்கள் அமெரிக்காவுக்காக ஜெபிக்கும் போது மட்டும் தொட்டும் தொடாமலும் பட்டும் படாமலும் போவது உண்டு. இவர்கள் ஏன் இப்படி செய்ய வேண்டும். அமெரிக்க மண்ணை மிதித்துக் கொண்டு இங்குள்ள உப்பை தின்றுவிட்டு,தங்கள் வாயை விரிவாய் திறந்து இந்நாட்டை சபிப்பது ஏன்? ஒரு வீட்டுக்குள் பிரவேசிக்கும்போது அதை வாழ்த்துங்கள் என தானே இயேசு கிறிஸ்து சொன்னார்.பாத்திரமாயிருந்தால் கூறின சமாதானம் அவர்கள்மேல் வரக்கடவது; அபாத்திரமாயிருந்தால் கூறின சமாதானம் உங்களிடத்திற்குத் திரும்பக்கடவது என தானே இயேசு சொன்னார். பைபிளில் அமெரிக்கா பற்றிய தீர்க்கதரிசனம் எதுவும் வெளிப்படையாக இல்லாத காரணத்தால் இறுதிகாலத்தில் இந்நாடே இல்லாமல் போயிருக்கும் என யூகித்து அது அழிந்துவிடும் என முடிவெடுத்து இப்போதே இந்த ஊழியர்கள் அந்நாட்டின் மீது நியாயத்தீர்ப்பை கூறிக்கொண்டிருப்பது என்ன நியாயம்? ஆபிரகாம் ஆண்டவரிடம் போராடும்போது ஐம்பது நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? எனத் தொடங்கி படிப்படியாக பத்து நீதிமான்கள் நிமித்தம் இரட்சியாமல் அந்த ஸ்தலத்தை அழிப்பீரோ? என விடாமல் ஆண்டவருக்குக் கோபம் வராதிருப்பதாக எனச் சொல்லிச் சொல்லி போராடினானே? தேவனின் திட்டம் இன்னதுவென தெளிவாகத் தெரிந்திருந்தும் இயேசு கிறிஸ்து கெத்சமனே தோட்டத்தில் “பிதாவே இந்த பாத்திரம் என்னை விட்டு நீங்கக் கூடுமானால் நீங்கட்டும் என வேண்டிக்கொள்ளவில்லையா?” என அடுக்கடுக்காக கேள்விக் கணைகளை எழுப்பினார்.பதிலற்று நின்றிருந்தோம்.
அமெரிக்காவில் நடைபெறும் இந்த திறப்பின் வாசல் ஜெபங்கள் அமெரிக்காவின் எழுப்புதலுக்காகவும் அதன் மனம் திரும்புதலுக்காகவும் கூட ஜெபிக்கும் என நம்புவோம்.
Thirappin vaasal jebam 2011 at Maryland Baltimore Washington DC USA July 21,22 and 23



மேலும் விவரங்களுக்கு.
http://indianprayerfellowship.com
Thirappin vasal jebam 2011 at Highland Lakes Camp North Spicewood Texas USA July 08,and 09
Thirapin vaasal jebam 2011 at Family Community Church San Jose Bay Area Sanfrancisco California USA July 14,15 and 16
Tuesday, June 07, 2011
அமெரிக்காவில் திறப்பின் வாசல் ஜெபம்
Friday, June 03, 2011
இஸ்ரவேலும் இறுதிகாலமும் வீடியோ செய்தி
Prepare your ways! Our Lord is coming soon!!
PART 1
PART 2
PART 3
Thanks to
http://prepareyourways.com/
#24,Amruth nagar,
Chellikere,Kalyan nagar
Bangalore-560 043
email:prepareyourways@gmail.com
info@prepareyourways.com
Thursday, June 02, 2011
நவீன நோவாவும் அவர் பேழையும்

டச்சுக்காரரான ஜோகன் ஹூபர் (Johan Huibers) நெதர்லாந்தில் தன் சொந்த ஊரான சாஜென் (Schagen) என்னுமிடத்தில் ஒரு அழகிய பேழையை கட்டியிருக்கிறார்.230 அடி நீளமும் 43 அடி உயரமும் 43 அடி அகலமுமாக இது கட்டப்பட்டுள்ளது. வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது போல கொப்பேர் மரத்தால் இது கட்டப்படாமல், ஸ்டீல் அடிவாரமும் சேடர் மற்றும் பைன் மரங்களைக் கொண்டு இது கட்டப்பட்டுள்ளது. மூன்றடுக்கு மாடி கட்டடத்தின் உயரத்தில் இருக்கும் இந்தப் பேழையினுள் நிஜ மிருக அளவுகளில் பொம்மைகளை செய்து வைத்துள்ளனர். இப்படி ஒட்டகச்சிவிங்கிகள், யானைகள், சிங்கங்கள், முதலைகள், வரிக்குதிரைகள் என பல்வேறு மிருகங்களை ஜோடு ஜோடாக நிஜம் போல ஆங்காங்கே நிற்க வைத்துள்ளனர்.ஒரு காஃபி ஷாப்பும்,கண்காட்சியும்,வேறு பல வேதாகம கதைகளை விளக்கும் சித்தரிப்புகளும் அங்கே உள்ளன. முழுக்க முழுக்க சொந்தமாகவே தற்கால உபரகரணங்களை பயன்படுத்தி இந்த மிதக்கும் பேழையை இவர் கட்டி முடித்துள்ளார். 17 வயதான மகன் ராய் மட்டும் கட்டுமானத்தின் போது அவ்வப்போது சில உதவிகள் செய்தாராம்.2005 மே மாதத்தில் இதை கட்டத்துவங்கி மே 2007 வாக்கில் கட்டி முடித்துள்ளார். இப்போது இது பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இப்பேழையின் வழி சுவிசேசத்தை கேள்விப்பட்டு ஏற்கனவே அநேகர் இரட்சிக்கப்பட்டு கிறிஸ்துவுக்குள் வந்துள்ளனராம். ”மக்கள் ஆலயங்களுக்கு வருவதை நிறுத்தி விட்டால் நாம் அவர்களிடம் சுவிசேசத்தை சேர்க்க தோதாக பிற வழிகளை தேட வேண்டும்” என்கிறார் ஜோகன் ஹூபர்.”இன்னொரு ஜலப்பிரளத்தை நான் எதிர்பார்கவில்லை.ஆனால் கிறிஸ்துவின் இரண்டாம் வருகையை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அது இன்னும் 50 வருடமாகலாம் அல்லது நூறு வருடமாகலாம் யாருக்கும் தெரியாது” என்கிறார் இவர்.உண்மையில் நோவாவின் பேழை இந்த டச்சுக்காரரின் பேழையை விட ஐந்துமடங்கு பெரியதாகும்.வேதத்தின் படி நோவாவின் பேழை 492 அடி நீளமும் 82 அடி உயரமும் 49 அடி அகலமுமாக இருந்திருக்க வேண்டும்.அதே அளவில் பெரிதாக இன்னொரு பேழையை கட்ட இரண்டாவது புராஜெக்ட்டை இப்போது தொடக்கியிருக்கிறார் ஜோகன் ஹூபர். 2012 லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது தனது பேழையை தேம்ஸ் நதியில் ஓட விட்டு லண்டன் குழந்தைகளுக்கு வேதாகம கதை சொல்ல இவருக்கு விருப்பமாம். லண்டன் நகர மேயருக்கு அனுமதி கேட்டு விண்ணப்பக் கடிதம் எழுதியிருக்கிறார்.எப்படியாகிலும் கர்த்தரின் நாமம் மகிமை பட்டால் சரி.
I கொரிந்தியர் 9:22 பலவீனரை ஆதாயப்படுத்திக்கொள்ளும்படிக்குப் பலவீனருக்குப் பலவீனனைப்போலானேன்; எப்படியாகிலும் சிலரை இரட்சிக்கும்படிக்கு நான் எல்லாருக்கும் எல்லாமானேன்.







Wednesday, June 01, 2011
I பேதுரு 2:24 வால்பேப்பர்

Download this tamil christian wallpaper
I பேதுரு:2:24. நாம் பாவங்களுக்குச் செத்து, நீதிக்குப் பிழைத்திருக்கும்படிக்கு, அவர்தாமே தமது சரீரத்திலே நம்முடைய பாவங்களைச் சிலுவையின்மேல் சுமந்தார்; அவருடைய தழும்புகளால் குணமானீர்கள்.
Tuesday, May 31, 2011
கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்

http://english.peopledaily.com.cn/90001/90777/90852/6578029.html

http://www.timesonline.co.uk/tol/news/world/us_and_americas/article5567187.ece
அமெரிக்காவின் நாற்பத்து நான்காவது அதிபராக பதவியேற்ற பராக் உசேன் ஒபாமா தனது பதவியேற்பு விழாவில் ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய மிகப்பழமையான வேதாகமத்தின் மேல் தன் கையை வைத்து பதவிப்பிரமாணம் எடுத்துக்கொண்டார்.ஆனால் அடுத்த நாளே முதல் நாள் செய்த பதவிப்பிரமாண வாக்குமூலத்தில் ஏதோ தவறுகள் இருந்ததாகக் கூறி இன்னொரு முறை பதவிப்பிரமாணம் செய்துகொண்டார் ஆனால் இந்த முறை எந்த வேதாகமமும் இன்றி.யாரையோ திருப்திபடுத்த அவர் அப்படி செய்திருக்கலாம்.
வேதம் சொல்கிறது
என்னைக் கனம்பண்ணுகிறவர்களை நான் கனம் பண்ணுவேன்; என்னை அசட்டை பண்ணுகிறவர்கள் கனவீனப்படுவார்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார்.(I சாமுவேல் 2:30).
மனுஷர் முன்பாக என்னை அறிக்கை பண்ணுகிறவன் எவனோ, அவனை நானும் பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக அறிக்கைப் பண்ணுவேன்.(மத்தேயு 10:32)
மனுஷர் முன்பாக என்னை அறிக்கைபண்ணுகிறவன் எவனோ அவனை மனுஷகுமாரனும் தேவதூதர் முன்பாக அறிக்கைபண்ணுவார்.(லூக்கா 12:8 )
தமிழக சட்டமன்றத்தில் கூட ஒரு அமைச்சர் பைபிளோடு பதவியேற்றிருக்கிறார். புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் தமிழகத்தில் நல்லாட்சி தந்திட நாம் தொடர்ந்து ஜெபிக்க வேண்டியது நம்மேல் விழுந்த கடமையாயிருக்கிறது.
Iதீமோ:2:1,2,3 எல்லா மனுஷருக்காகவும் விண்ணப்பங்களையும் ஜெபங்களையும் வேண்டுதல்களையும் ஸ்தோத்திரங்களையும் பண்ணவேண்டும்;நாம் எல்லாப் பக்தியோடும் நல்லொழுக்கத்தோடும் கலகமில்லாமல் அமைதலுள்ள ஜீவனம்பண்ணும்படிக்கு, ராஜாக்களுக்காகவும், அதிகாரமுள்ள யாவருக்காகவும் அப்படியே செய்யவேண்டும்.நம்முடைய இரட்சகராகிய தேவனுக்குமுன்பாக அது நன்மையும் பிரியமுமாயிருக்கிறது.
இறுதிக் கால செய்திகள்
- முடிவு என்னமாயிருக்குமோ?.
- இஸ்லாமிய மயமாகும் ஐரோப்பா
- அவலட்சண சட்டங்களின் ஆரம்பம்
- அசைக்கப்படும் தேசங்கள்
- இஸ்ரவேலின் பேர் இனி...
- இஸ்ரேல் தேசத்தின் தோற்றமும் நிறைவேறிய தீர்க்கதரிசனங்களும்
- கோடி பேர் பார்த்து கொண்டாடவிருக்கும் சம்பவம்
- முடிவுக்கு முன்...
- கடைசிநாட்களில் மனுஷர்கள் தற்பிரியராயும்...
- கிறிஸ்துமஸ் ஒரு பொய்?
- நியூட்டன் கணித்த கிபி:2060
- அன்பை விட்டாய்
- முழங்கால்களை முடக்கிய ஹெய்தி
- அமெரிக்காவிற்குப் பின்
- ”நிறைவேறிய எசேக்கியேல் 37”-இஸ்ரேலிய பிரதமர் அறிவிப்பு
- முன்பே சொன்ன ஏசாயா
- சமுத்திரமும் அலைகளும்
- பிற புற தீர்க்கதரிசனங்கள்
- இஸ்ரேலில் விவசாயப் புரட்சி - தமிழக விவசாயிகள் இஸ்ரேல் பயணம்
- குறுகாமல் பெருகவேண்டும்
- மீண்டும் சனகெரிப் சங்கம்?
- அராபிய நாடுகளும் இஸ்ரேலும்
- 2012-ல் உலகம் அழியுமா?
- இடிக்கப்படவிருக்கும் மதில்கள்
- எருசலேம் நகரம் இரண்டாக்கப்படுமா?
- தமஸ்குவின் பாரம்
- பழைய புதிய பாபேல்
- இஸ்ரேலுக்கு இக்கட்டுக்காலம்
- வெளிப்படுத்தின விசேஷ சுருக்கம்.
- பத்து கொம்புகள்-வீடியோ செய்தி
- காணாமல் போகப்போகும் கரன்சி நோட்டுகள்
- 666- அந்திக் கிறிஸ்து யார்?
- பாபிலோனிய பேரரசும் மேதிய பெர்சிய பேரரசும்
- பாதி இரும்பும் பாதி களிமண்ணும்
- இஸ்ரேலுக்கு திரும்பும் யூதர்கள்
- மிருகத்தின் முத்திரை 666 வீடியோ செய்தி
- யார் அந்திகிறிஸ்து? வீடியோ செய்தி
- இஸ்ரவேலும் - இஸ்மவேலும்
- தூதர்களின் காலம்-YKP.Henry End Time Mp3 message
- அந்திக்கிறிஸ்துவின் காலம் - YKP.Hentry MP3 Message
- கிருபையின் காலம் - Y.K.P.Henry MP3 Message
- 666 SixSixSix Mark வலதுகை முத்திரை
- ஆறாவது பேரரசு—நம்பமுடியாதது
- ஐந்தாவது பேரரசு- உலகளாவிய ஒரே அரசாங்கம்,ஒரே தலைவன்
- பலிக்கும் கனவு-ஆச்சரியம்
- நோவாவின் நாட்கள்
- பிரேதகுழியிலிருந்து உருவான தேசம்.
- இஸ்ரேல் தேசத்தின் உதயம்
- இஸ்ரேல் - உலகத்துக்கு ஒரு சுமை
- பெருகிப்போன அறிவு
- இஸ்ரேலை நோக்கி இருபதுகோடிப்பேர் கொண்ட ராணுவம்
- யூப்ரடீஸ் நதி வற்றுமா?
- திரும்பி வந்த நாணயம்
- மீண்டு வந்த மொழி
- கருப்பு சூரியன்
- ஜெருசலம் எனும் நகரம்
- Jesus Was Engaged, Not Married
இப்படி சொன்னார்கள்
Links
சாட்சிகளும் பேட்டிகளும்
- அமெரிக்க கால்பந்தாட்ட வீரர் Tim Tebow
- கசல் இசைக்கலைஞர் அனில்கண்ட்
- சகோ.ஃபிரடி ஜோசப்
- சகோ.சாது சுந்தர் செல்வராஜ்
- சகோ.சாம் ஜெபத்துரை
- சகோ.டைட்டஸ் தாயப்பன்
- சகோ.பால் தினகரன்
- சகோதரி.நசீமா பீவி
- சகோ.பால்தங்கையா
- சகோதரி.இவாஞ்சலின் பால்தினகரன்
- தமிழ் திரை உலகிலிருந்து கிறிஸ்துவுக்கு சாட்சிகள்
- திரு.தொட்டண்ணா
- நடிகர் AVM ராஜன்
- நடிகை நக்மா
- பாலிவுட் நகைச்சுவை நடிகர் ஜானி லீவர்
- பாஸ்டர் M.S.வசந்தகுமார்
- பாஸ்டர் ஆல்வின் தாமஸ்
- போதகர் பவுல் அம்பி
- மனம் மாறிய மந்திரவாதி நேசன்