Wednesday, May 31, 2006

பரிபூரண சமாதானம் என்றால்...

அமைதியும் சமாதானமும் நிறைந்த சூழ்நிலையில் சலமற்றிருப்பது எளிது தான்.ஆனால் கொந்தளிக்கும் புயலின் நடுவேயும் அமைதியாக அமர்ந்திருப்பது தான் பரிபூரண சமாதானம்.

யோவான்:14:27.
சமாதானத்தை உங்களுக்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்; உலகம் கொடுக்கிறபிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை. உங்கள் இருதயம் கலங்காமலும் பயப்படாமலுமிருப்பதாக.

John:14:27
Peace I leave with you; my peace I give you. I do not give to you as the world gives. Do not let your hearts be troubled and do not be afraid.

Sunday, May 28, 2006

Jesus Was Engaged, Not Married

இன்று, டான் பிரொவுனின் "டாவின்சி கோட்" கதை புத்தகமும்,சினிமாவும் யாவரும் அறிந்ததே.எதிர்பார்க்கப்பட்டபடி பணவசூலும் கொட்டிக் கொண்டிருக்கிறது.controversy = big bucks இதுதானே சமன்பாடு.ஏனோ சில கிறிஸ்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர் தேவையில்லாமல்.கிபி.1498-ல் லியோனர்டோ டாவின்சி என்ற மாபெரும் ஓவியர்,முதலாம் நூற்றாண்டில் நடந்த ஒரு சம்பவத்தை படமாக வரைந்திருக்கிறார்-"யேசுவின் கடைசி இரவு
உணவு" என.ஏறக்குறைய 1400 ஆண்டுகால இடைவெளியை கவனிக்கவும்.அந்த படத்தில் அநேக ரகசியங்கள் புதைந்து கிடப்பதாகவும் சிலர் அதை டீகோட் (decode) செய்து யேசுவுக்கு கல்யாணம் ஆகி குழந்தையும் இருந்தது என்ற முடிவுக்கு வருகிறார்கள்.இப்படியாக அந்த கதை இன்டரஸ்டிங்காக செல்கிறது.மீதமுள்ள லியோனர்டோ டாவின்சியின் மற்ற ஓவியங்களையும் டீகோட் செய்து இன்னும் இன்டரஸ்டிங்கான கதைகள் திரையில் வந்தால் இன்னும் பணம் கொட்டும்.
யேசுவுக்கு திருமணமாகிவிட்டது என்பதை விட திருமண நிச்சயமாகிவிட்டது என்றிருந்தால் அந்த கதை கட்டுக்கதை இல்லாமல் உண்மையென்றே இருந்திருக்கும்.

மணப்பெண்ணாகிய திருச்சபையை மணமகனாகிய யேசு "திருமண நிச்சயம்" செய்தது தான் அந்த "The last supper" நிகழ்வு.அங்கே ஒரு திருமண உடன்படிக்கை நடந்தது.இஸ்ரேலிய வழக்கப்படி திராட்சரசமானது எதிர்கால கணவன் மனைவியிடையே பங்கிடப்பட்டு “This cup is a covenant between you and me." என உறுதி அளிக்கப்பட்டது அங்கே.இன்னும் இஸ்ரேலிய வழக்கப்படி மணவாளன் தனது இரத்தத்தை மணப்பெண்ணுக்கு தட்சணையாக தந்திருக்கிறார்.இஸ்ரேலிய வழக்கப்படி மணவாளன் ஒரு வீட்டை தயார் செய்த பின் மணவாளன் வந்து மணவாட்டியை திருமணம் செய்து கூட்டி செல்வார்.அது தான் யேசுவின் இரண்டாம் வருகை.

ஆக ஒரு சின்ன மாற்றம். திருமணம் அல்ல.அது ஒரு திருமண நிச்சயம்.

அப்போ கல்யாணம் எப்போ?

வெளி 19:7 நாம் சந்தோஷப்பட்டுக் களிகூர்ந்து அவருக்குத் துதிசெலுத்தக்கடவோம். ஆட்டுக்குட்டியானவருடைய (யேசுவின்)கலியாணம் வந்தது, அவருடைய மனைவி(திருச்சபை) தன்னை ஆயத்தம்பண்ணினாள் என்று சொல்லக் கேட்டேன்.

மத்தேயு:26:26.
அவர்கள் போஜனம் பண்ணுகையில், இயேசு அப்பத்தை எடுத்து, ஆசீர்வதித்து, அதைப் பிட்டு, சீஷர்களுக்குக் கொடுத்து: நீங்கள் வாங்கிப் புசியுங்கள், இது என்னுடைய சரீரமாயிருக்கிறது என்றார்.
27. பின்பு, பாத்திரத்தையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, அவர்களுக்குக் கொடுத்து: நீங்கள் எல்லாரும் இதிலே பானம்பண்ணுங்கள்;
28. இது பாவமன்னிப்புண்டாகும்படி அநேகருக்காகச் சிந்தப்படுகிற புது உடன்படிக்கைக்குரிய என்னுடைய இரத்தமாயிருக்கிறது.
29. இது முதல் இந்தத் திராட்சப்பழரசத்தை நவமானதாய் உங்களோடேகூட என் பிதாவின் ராஜ்யத்திலே நான் பானம் பண்ணும் நாள் வரைக்கும் இதைப் பானம் பண்ணுவதில்லையென்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்

எபேசியர்:5::25.
புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,

வெளி:21::2.
யோவானாகிய நான், புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரத்தை தேவனிடத்தினின்று பரலோகத்தைவிட்டு இறங்கிவரக்கண்டேன்; அது தன் புருஷனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணவாட்டியைப்போல ஆயத்தமாக்கப்பட்டிருந்தது.

வெளி 19:9
பின்னும், அவன் என்னை நோக்கி: ஆட்டுக்குட்டியானவரின்(யேசுவின்) கலியாண விருந்துக்கு அழைக்கப்பட்டவர்கள் பாக்கியவான்கள் என்றெழுது என்றான். மேலும், இவைகள் தேவனுடைய சத்தியமான வசனங்கள் என்று என்னுடனே சொன்னான்

யோவான்:14:3.
நான்(யேசு) போய் உங்களுக்காக(மணப்பெண்ணாகிய திருசபைக்காக) ஸ்தலத்தை ஆயத்தம்பண்ணினபின்பு, நான் இருக்கிற இடத்திலே நீங்களும் இருக்கும்படி, நான் மறுபடியும் வந்து உங்களை என்னிடத்தில் சேர்த்துக்கொள்ளுவேன்.
-------------------------------------------------------------------------------------------------------

In Jesus time it was a custom for a groom to agree with his future father in law upon a dowry. He also often had to prepare a home for them to live in.Once these requirements had been met, the groom’s father would provide his son with a glass of wine. The son would then offer it to his bride and say, “This cup is a covenant between you and me.”
This cup symbolized his commitment to her. It was her choice to accept the cup that was offered, or to reject the cup. If she drank of the cup, she was publicly stating her trust and hope in her future husband. There are some interesting parallels between this custom and what we call communion. Jesus calls the church His bride (Ephesians 5:25); like a good groom, Jesus has paid the price for us to have a home (the home He offers is one that lasts forever); and in accepting this cup, we publicly state our trust and hope in Jesus. Some things to also note: unlike a groom of His day, Jesus offers forgiveness of sins through this cup; also different is that Jesus says that His body and blood are truly present in the bread and wine. We, the believers of Jesus are His bride.

So we must ask: When is the wedding?!?

We find out in Revelation 21:1-4:

Then I saw a new heaven and a new earth, for the first heaven and the first earth had passed away, and there was no longer any sea. I saw the Holy City, the
new Jerusalem, coming down out of heaven from God, prepared as a bride beautifully dressed for her husband. And I heard a loud voice from the throne saying,
"Now the dwelling of God is with men, and he will live with them. They will be his people, and God himself will be with them and be their God. He will wipe
every tear from their eyes. There will be no more death or mourning or crying or pain, for the old order of things has passed away."

This is one wedding we do not want to miss.

Saturday, May 27, 2006

ஜெருசலம் எனும் நகரம்

ஜெருசலம் கிறிஸ்தவர்களின்,யூதர்களின் புனித நகரம்.முகமதியரும் இதை புனித நகரமாக கருதுகிறார்கள்.யூதர்களின் பைபிளில் இப்பெயர் 669 முறையும் கிறிஸ்தவர்களின் பைபிளில் இப்பெயர் 154 முறையும் குறிப்பிடப்பட்டுள்ளது.முகமதியரின் புனித குரானில் இப்பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவில்லை.பரிசுத்த நகரமாகிய இது கடல் மட்டத்திலிருந்து 2600 அடி உயரத்தில் மலைப்பகுதியில் அமைந்துள்ளது.இயேசு இதை மகாராஜாவின் நகரம் என்று கூறினார்.எருசலேமில் தான் உலக புகழ் பெற்ற எபிரேய பல்கலைக்கழகம் உள்ளது.இயேசு உலக இரட்சிப்புக்காக மரித்து உயிர்த்தது இந்நகரில் தான்.எருசலேம் என்பதற்கு சமாதானத்தின் நகரம் (Heritage of Peace) என்று பொருள்.ஆனால் கடந்த 3000 ஆண்டுகளில் 20 முறை முற்றுகை யிடப்பட்டும்,இடிக்கப்பட்டும்,திரும்பவும் கட்டப்பட்டும் இருக்கிறது.எனினும் கர்த்தர் இதனை தலைநகராக கொண்டுதான் உலகை ஆளுவார் என வேதம் கூறுகிறது.தலைநகரமாகிய எருசலேம் தான் இஸ்ரேலிலுள்ள மகாபெரிய நகரமாகும்.தற்போதைய மக்கள்தொகை 704,900 ஆகும்.72 சதவீதம் யூதர்கள் இங்குண்டு.

மத்தேயு:5:35.
பூமியின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது தேவனுடைய பாதபடி; எருசலேமின் பேரிலும் சத்தியம்பண்ணவேண்டாம், அது மகாராஜாவின் நகரம்.

ஏசாயா:66:20.
இஸ்ரவேல் புத்திரர் சுத்தமான பாத்திரத்தில் காணிக்கையைக் கர்த்தருடைய ஆலயத்துக்குக் கொண்டுவருகிறதுபோல,..., சகல ஜாதிகளிடத்திலுமிருந்து எருசலேமிலுள்ள கர்த்தருக்குக் காணிக்கையாக என் பரிசுத்த பர்வதத்துக்குக் கொண்டுவருவார்களென்று கர்த்தர் சொல்லுகிறார்.

வெளி:20:9.
அவர்கள் பூமியெங்கும் பரம்பி, பரிசுத்தவான்களுடைய பாளையத்தையும், பிரியமான நகரத்தையும் வளைந்துகொண்டார்கள்; அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப்போட்டது.

லூக்கா:21:24.
பட்டயக்கருக்கினாலே விழுவார்கள், சகல புறஜாதிகளுக்குள்ளும் சிறைப்பட்டுப்போவார்கள்; புறஜாதியாரின் காலம் நிறைவேறும் வரைக்கும் எருசலேம் புறஜாதியாரால் மிதிக்கப்படும்.

Thursday, May 25, 2006

காற்றுக்கு கனம் உண்டா?

காற்றுக்கு கனம் உண்டு என்று கிபி 1630-ல் தான் கலிலியோ கண்டறிந்தார்.ஆனால் பைபிளில் கிமு 1500-லேயே யோபு:28:25-ல் இந்த உண்மை மிக அழகாக எடுத்து கூறப்பட்டுள்ளது.

யோபு 28 :25அவர் காற்றுக்கு அதின் நிறையை நியமித்து, ஜலத்துக்கு அதின் அளவைப் பிரமாணித்து,
Job:28:25
To establish a weight for the wind,And apportion the waters by measure.

Saturday, May 20, 2006

எப்படியாகிலும் வாழுங்கள்

மனம் தளரும் போது- பாடுங்கள்
சோகம் வரும் போது- சிரியுங்கள்
தாழ்வு எண்ணம் வந்தால்- பழைய வெற்றிகளை நினையுங்கள்
சோர்வாக இருக்கும் போது- இரட்டிப்பாக உழையுங்கள்
அச்சம் வரும்போது- முன்னே பாயுங்கள்
தலைக்கணம் ஏற்ப்படும் போது- பழைய தோல்விகளை நினையுங்கள்
விருந்து உண்ணும் போது- பட்டினியை நினையுங்கள்
சோம்பல் வரும்போது- போட்டிக்காரர்களை நினையுங்கள்
ப்ளீஸ் எப்படியாகிலும் வாழுங்கள்

பிரசங்கி:11:9.
வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட; ஆனாலும் இவையெல்லாவற்றினிமித்தமும் தேவன் உன்னை நியாயத்திலே கொண்டுவந்து நிறுத்துவார் என்று அறி.

Ecclesiastes 11:9
Be happy, young man, while you are young, and let your heart give you joy in the days of your youth. Follow the ways of your heart and whatever your eyes see, but know that for all these things God will bring you to judgment.