Saturday, May 09, 2015

Friday, May 01, 2015

ஆண்டுக்கு 1.8 அங்குலம் வீதம் இந்திய துணைகண்டம் மெதுவாக வடக்கு நோக்கி திபெத் மற்றும் நேபாள நிலப்பரப்புகளுக்கு அடியே நகர்ந்து செல்லுகிறதாம். இப்படி கடந்த 81 வருடங்களில் இந்திய நிலப்பரப்பு வடக்கு நோக்கி நகர்ந்த தூரம் 12 அடிகள். சமீபத்திய நிலநடுக்கம் மட்டும் இந்தியாவின் ஒரு பகுதியை 10 அடிகள் வடக்கு நோக்கி நகர்த்தியுள்ளதாக சொல்லுகிறார்கள். இப்படியாக மலைகள் விலகுவதும், பர்வதங்கள் நிலைபெயர்வதும் அதனால் மக்கள் சொல்லொன்னா இன்னல்களுக்குள்ளாவதும் இன்று அன்றாட நிகழ்வுகளாகிவிட்டன. ஆனாலும் வேதம் சொல்லுகிறது "மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும் என்று, உன்மேல் மனதுருகுகிற கர்த்தர் சொல்லுகிறார்" என்று. கர்த்தரின் வாக்குத்தத்தத்தை அப்படியே பிடித்துக்கொள்வோமா.(ஏசாயா 54:10)