சிலர் இவரை புரட்சியாளன் என்பர்.வேறு சிலரோ இவரை சர்வாதிகாரி என்பர்.வெனிசுவேலாவின் அதிபர் ஹியூகோ சாவேசின் மரணம் அந்நாட்டினை மிகுந்த துக்கத்தில் ஆழ்த்தியிருக்கிறது.ஒரு காலத்தில் ஈரானோடு கூட கூட்டு சேர்ந்து கொண்டு அமெரிக்காவையே ஆட்டிப்படைத்த இவர் இளமையில் ஒரு கத்தோலிக்க பாதிரியாராக மாறி சேவை செய்ய விரும்பியிருக்கிறார் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?.மரம் அமைதியாக இருக்க விரும்பினாலும் காற்று விடுகிறதில்லையே.
தலாளித்துவத்தை சாத்தானின் சதி வேலை என கடுமையாக சாடிய அவர், இயேசு கிறிஸ்துவின் பார்வையில் பொதுவுடைமையே நல்ல சமுதாயத்தை உருவாக்க முடியும் என நம்பினார்."என்னை பொருத்தவரை முதல் சோசியலிஸ்ட் இயேசு கிறிஸ்துவே" என உறுதியாக கூறியிருந்த அவர் சமீப காலமாக புற்று நோயால் வாடியிருந்தார்."நான் இயேசுவோடு கொண்ட உடன்படிக்கையின் படி சீக்கிரமாக குண்மாகிவிடுவேன்" என நம்பிக்கையாக கூறியிருந்தார். ஆனாலும் தனது 58-ஆவது வயதில் மார்ச் 5 ல் அவர் காலமானார்."நான் சாக விரும்பவில்லை,என்னை சாக விடாதிருங்கள்" என்பதே அவர் பேசிய கடைசி வார்த்தைகளாக அமைந்தது.இஸ்ரேலை மிகவும் வெறுத்த இவர், ஈரான் அதிபர் மஹ்மூத் அகமதினஜாத்தின் மிக நெருங்கிய நண்பராக இருந்தார். மஹ்மூத் அகமதினஜாத் தனது இரங்கல் செய்தியில் "உயித்தெழுதல் நாளில் இயேசு கிறிஸ்துவோடு கூட ஹியூகோ சாவேசும் உயிரோடு எழுந்து பூமியில் சமாதானத்தையும்,சாந்தத்தையும் நீதியையும் நிலைநாட்டுவார்கள்" என கூறியிருக்கிறார்.
எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள். இயேசு பூலோகத்தை நீதியாய் நியாயந்தீர்ப்பார்.
(I கொரி:15:52,அப்:17:31)
No comments:
Post a Comment