வேதாகமத்தில் மோசே காலத்தில் பத்து வாதைகளில் ஒன்றான வெட்டுக்கிளிகள் எகிப்து தேச எல்லை எங்கும் வந்து இறங்கியதையும் அவைகள் பூமியின் முகம் முழுதையும் மூடியதையும் தேசம் அவைகளால் அந்தகாரப்பட்டது எனவும் படிக்கிறோம். நிலத்தின் பயிர்வகைகள் யாவையும் மரங்களின் கனிகள் யாவையும் அவைகள் பட்சித்துப் போட்டது; எகிப்து தேசம் எங்குமுள்ள மரங்களிலும் வயல்வெளியின் பயிர்வகைகளிலும் ஒரு பச்சிலையும் மீதியாயிருக்கவில்லை என வேதாகமத்தில் படிக்கிறோம் (யாத்:10:12-15).
ஆனால் அதை இவ்வுலக ஞானிகள் ஏதோ கட்டுக்கதைகள் என்பார்கள். இந்த வாரத்தில் (மார்ச் 2,2013) இது போன்ற ஒரு சம்பவம் அதே எகிப்து தேசத்தில் சம்பவித்துள்ளது.30 மில்லியன் வெட்டுக்கிளிகள் இருக்கும் என கணித்திருக்கிறார்கள்.பவுஞ்சு பவுஞ்சாக வந்து எகிப்து தேசத்தை முடியுள்ளது. இன்னும் மூன்று வாரத்தில் Passover எனப்படும் இஸ்ரேலியர்கள் எகிப்தைவிட்டு புறப்பட்ட தினம் வர இருக்க வேதம் குறிப்பிடும் அதே கால வேளையிலேயே வெட்டுக்கிளிகளும் வந்திருப்பது வேதாகமத்தை அத்தனை தெளிவாக நிரூபிப்பதோடு நம்மில் பலரையும் ஆச்சரியத்தில் உறையவைத்துள்ளது.
http://newsfeed.time.com/2013/03/04/locust-swarms-descend-on-egypt-like-biblical-plague/
No comments:
Post a Comment