ஆங்கில கவிஞன் டென்னிசன் ஒரு நாள் தம் நண்பருடன் தோட்டத்தில் உலாவிக் கொண்டிருந்தார்.நண்பர் அவரைப்பார்த்து ,"கிறிஸ்துவைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? உங்களுக்குக் கிறிஸ்து எப்படிப் பட்டவராக இருக்கிறார்?"என்று கேட்டார்.
டென்னிசன் சற்று அமைதியாக உலாவினார்,
பின்பு,"அதோபாருங்கள்,"என்று ஒரு மலரைச் சுட்டி காட்டினார்.
`அது ஒரு அழகான புஷ்பம்` என்றார் நண்பர்.
அப்பூவிற்குச் சூரியன் எப்படியோ அப்படியே கிறிஸ்துவும் எனக்கு என்றாராம்.
கிறிஸ்து உங்களுக்கு எப்படிப்பட்டவர்?
ஓசியா (Hosea):14:8
"நான் பச்சையான தேவதாரு விருட்சம்போலிருக்கிறேன்; என்னாலே உன் கனியுண்டாயிற்று"
"I am like a green fir tree. From me is thy fruit found."
யோவான் (John) :15:4
"என்னில் நிலைத்திருங்கள், நானும் உங்களில் நிலைத்திருப்பேன்"
"Abide in me, and I in you."
பிலிப்பியர் (Philippians):1:21
21. கிறிஸ்து எனக்கு ஜீவன், சாவு எனக்கு ஆதாயம்.
"For to me to live is Christ, and to die is gain."
இதுவல்லவோ இரண்டறக்கலந்த வாழ்வு?
என் தேவன் எனக்கு அடைக்கலமும் ஆபத்துக்காலத்தில் அனுகூலமான துணையுமனவர்.
ReplyDelete