இரட்சிப்பின் வழி
நம்பினால் நம்புங்கள்
Wednesday, April 29, 2015
இது அல்லவோ தாய்? இப்படியல்லவோ எல்லா தாய்மாரும் இருக்க வேண்டும். இப்படி எல்லா தாய்மாரும் இருந்தால் நாட்டில் கலவரங்கள் ஏது? தீவிரவாதங்கள் ஏது? வேதம் சொல்லுகிறது "பிள்ளையை தண்டியாமல் விடாதே; அவனைப் பிரம்பினால் அடித்தால் அவன் சாகான். நீ பிரம்பினால் அவனை அடிக்கிறதினால் பாதாளத்துக்கு அவன் ஆத்துமாவைத் தப்புவிப்பாயே" நீதிமொழிகள்:23:13,14
›
Tuesday, April 28, 2015
We do have a escape plan Mr.Stephen Hawking! Bible says "The earth and its works will be burned up. The heavens will pass away with a roar and the elements will be destroyed with intense heat. But based on His promise, we wait for the new heavens and a new earth, where righteousness will dwell.II Peter 3:10,13 பூமியும் அதிலுள்ள கிரியைகளுமெரிந்து அழிந்துபோம். வானங்கள் மடமட என்று அகன்றுபோம், பூதங்கள் வெந்து உருகிப்போம், கர்த்தருடைய வாக்குத்தத்தத்தின்படியே நீதி வாசமாயிருக்கும் புதிய வானங்களும் புதிய பூமியும் உண்டாகும். II பேதுரு 3:10,13
›
Monday, April 27, 2015
நீ விரும்புகிறபடி உனக்கு ஆகக்கடவது - இயேசு கிறிஸ்து (மத்தேயு:15:28)
›
Saturday, April 25, 2015
இயேசு கிறிஸ்துவும் மகா அலெக்சாண்டரும். இருவரும் வாழ்ந்தது முப்பத்திமூன்று ஆண்டுகளே. ஆனால் ஒருவர் அம்பினால் தனது ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார். இன்னொருவரோ அன்பினால் தனது ராஜ்ஜியத்தை ஸ்தாபித்தார். ஒருவர் தன்பின்னே படைகள் அணி தொடர வீரமாய் நடந்தார். இன்னொருவரோ தன் பின்னே சிலரே தொடர தாழ்மையாய் நடந்தார். ஒருவர் முழுஉலகத்தையும் ஆண்டுகொண்டும் ஒன்றுமில்லாமலேயே மரித்தார். இன்னொருவரோ மரித்து முழுஉலகத்தையே ஆண்டுகொண்டார். ஒருவர் தனது வெற்றிக்காக எத்தனையோ பேர் இரத்தத்தை சிந்தினார். ஆனால் இன்னொருவரோ தனது இரத்தத்தை உலகோர் அனைவரின் மீட்புக்காகவும் சிந்தினார். மகா அலெக்சாண்டர் மாவீரனாக நன்றாக ஜீவித்திருந்தும் சடுதியில் மரித்துப்போனார். ஆனால் மகாபிரபு இயேசு கிறிஸ்துவோ மரித்தும் இன்றைக்கும் ஜீவிக்கின்றார்.
›
அத்திமரம் துளிர் விட்டு இன்றோடு 67 வருடமாச்சு. உலர்ந்த எலும்புகள் உடல்கொண்டு இன்றோடு 67 வருடமாச்சு. ஆம் இஸ்ரேல் தேசம் உருவாகி இன்றோடு 67 வருடங்கள். நம்ம காலண்டர் படி மே 15 தான். ஆனால் யூத காலண்டர் படி இன்று தான் அவர்கள் சுதந்திரம் பெற்ற நாள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அவர்கள் சுதந்தரித்துக் கொண்ட நாள். நமதாண்டவர் சொல்லிச்சென்றார். "அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்" என்று. ஆம் அவர் வாசலருகே வந்திருக்கிறார் என்பதற்கு துளிர்விட்டிருக்கும் இந்த அத்திமரமாகிய இஸ்ரேல் தேசமே சாட்சி.
›
‹
›
Home
View web version