அத்திமரம் துளிர் விட்டு இன்றோடு 67 வருடமாச்சு. உலர்ந்த எலும்புகள் உடல்கொண்டு இன்றோடு 67 வருடமாச்சு. ஆம் இஸ்ரேல் தேசம் உருவாகி இன்றோடு 67 வருடங்கள். நம்ம காலண்டர் படி மே 15 தான். ஆனால் யூத காலண்டர் படி இன்று தான் அவர்கள் சுதந்திரம் பெற்ற நாள். வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட தேசத்தை அவர்கள் சுதந்தரித்துக் கொண்ட நாள். நமதாண்டவர் சொல்லிச்சென்றார். "அத்திமரத்தினால் ஒரு உவமையைக் கற்றுக்கொள்ளுங்கள்; அதிலே இளங்கிளை தோன்றி, துளிர்விடும்போது, வசந்த காலம் சமீபமாயிற்று என்று அறிவீர்கள். அப்படியே இவைகளையெல்லாம் நீங்கள் காணும்போது, அவர் சமீபமாய் வாசலருகே வந்திருக்கிறார் என்று அறியுங்கள்" என்று. ஆம் அவர் வாசலருகே வந்திருக்கிறார் என்பதற்கு துளிர்விட்டிருக்கும் இந்த அத்திமரமாகிய இஸ்ரேல் தேசமே சாட்சி.
No comments:
Post a Comment