Saturday, November 19, 2022

"டிஜிட்டல் கரன்சி" வருகிறது.

 

கரன்சி ரூபாய் நோட்டுகள் போய் முழுக்க முழுக்க "டிஜிட்டல் கரன்சி" சீக்கிரத்தில் உலகமெங்கும் வருகிறது. இதனை "மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம்" (CBDC) என்கிறார்கள். அரசுகளின் முழு கம்ப்யூட்டர் கட்டுபாட்டில் இந்த டிஜிட்டல் கரன்சி இருப்பதால் அது புழக்கத்துக்கு வரும் போது, மக்கள் தங்கள் டிஜிட்டல் பணத்தை செலவிடும் முழு சுதந்திரம் மக்களிடமிருந்து எளிதில் பறிக்கப்படலாம். உதாரணமாக எவ்வளவு பணம் எதற்கெல்லாம் செலவழிக்கலாம், யாராருக்கெல்லாம் நன்கொடை கொடுக்கலாம், தடுக்கலாம் என கட்டுபாடுகள் எளிதாக மக்கள் மீது போடலாம். இஷ்டத்துக்கும் செலவு பண்ணமுடியாதவாறு வரைமுறைகள் கொண்டுவரலாம். ஒரே சொடுக்கில் உங்கள் பணம் அனைத்தையும் பிடிங்கியும் விடலாம். சர்வாதிகாரி ஒருவனிடம் இந்நிலையில் உலகம் சிக்கினால் என்ன ஆகும்? அவ்வளவு தான். வெளி 13:17 அந்த மிருகத்தின் முத்திரையையாவது அதின் நாமத்தையாவது அதின் நாமத்தின் இலக்கத்தையாவது தரித்துக்கொள்ளுகிறவன் தவிர வேறொருவனும் கொள்ளவும் விற்கவுங் கூடாதபடிக்கும் செய்தது.

No comments:

Post a Comment