2015 செப்டம்பரில் என்ன நடக்கும்? 2015 செப்டம்பர் மாதத்தை குறித்து பல்வேறு கருத்துக்கள் இணையத்தில் சூடாக பரவி வருகின்றன.யூதர்கள் காலண்டரில் ஷெமீட்டா எனப்படும் 7 வருட சுழற்சி செப்டம்பரில் முடிவடைவதாலும் அடுத்த 7 வருட சுழற்சி தொடங்குவதாலும் கடந்த கால வரலாற்று பதிவுகளின் படி இந்த காலகட்டத்தில் மிகப்பெரிய பங்குசந்தை வீழ்ச்சி இருக்கலாம் என ஒரு சாரார் ( Jonathan Cahn) கணிக்கிறார்கள். அது போல இந்த செப்டம்பரில் யூதர்களின் ஜீபிலி ஆண்டு வருவதால் அதாவது ஏழு ஏழாண்டுகள் (49) முடிவுருவதால் இஸ்ரேல் தேசப்பகுதியில் மாபெரும் புவியியல் மாற்றங்கள் வரலாம் என கணிக்கிறார்கள். இதுவும் கடந்த காலங்களில் அப்படியே நடைபெற்றுள்ளதாம். இது போக செப்டம்பரில் பிளட் மூன் எனப்படும் நிலவு சிவப்பாகும் நிகழ்வும் வரவிருக்கிறது. பொதுவாகவே பிளட் மூன் தோன்றும் காலங்களில் மிகப்பெரிய சம்பவங்கள் பூமியில் நடைபெற்றதாக தகவல்கள் உள்ளன. செப்டம்பரில் மாபெரும் விண்கல் ஒன்று அட்லாண்டிக்கடலில் வீழ்வதால் உண்டாகும் சுனாமியால் அமெரிக்காவின் நியூயார்க் உட்பட கிழக்கு கடலோர பகுதிகள் நீரில் மூழ்கிப்போகும் என்பது இன்னொரு கணிப்பு.இதுகுறித்து அநேகர் தரிசனங்கள் சொப்பனங்கள் கண்டதாக இணையத்தில் தகவல்கள் நிரம்பியுள்ளன. சமீபத்தில் வாசிங்டன் வந்த சகோ மோகன் சி லாசரஸ் அவர்களும் கூட இது போன்ற அழிவுவொன்றும் அதை தொடந்து எழுப்புதலும் அமெரிக்காவில் வருவதாக அறிவித்தார். இந்த ஈஸ்ட் கோஸ்ட் சுனாமி அழிவிற்கு தற்போது அமெரிக்காவில் நடைபெறும் மாபெரும் ஜேட் கெல்ம் எனப்படும் இராணுவ பயிற்ச்சியை துணைக்கு அழைக்கிறார்கள். பெடரல் ரிசர்வும் வருங்கால இயற்கை பேரழிவுகளுக்கு பயந்து தனது தலைமையகத்தை நியூயார்க்கிலிருந்து சிக்காகோவுக்கு மாற்றியிருக்கிறார்களாம். ஸ்பானிஷ் போதகர் (Efrain Rodriguez) ஒருவரின் தீர்க்கதரிசனங்கள் இங்கு பேசப்படுகின்றன. அவரது கூற்றுப்படி போர்ட்டோரிக்கோவில் விழம் விண் கல்லினால் அமெரிக்கா அதோகதியாகிவிடும் என எச்சரிக்கிறார். ஆனால் அவர் காலம் நேரம் எதுவும் குறிப்பிடவில்லை. கட்டாயம் இது நடக்கும் என்கிறார். ஒரு அமெரிக்க பெண் ஊழியர் (Patricia Green) கூட இதே சம்பவத்தை கண்டதாகவும் அதுவும் தற்போதைய அமெரிக்க அதிபரின் காலத்தில் நடைபெற்றதாகவும் குறிப்பிடுகிறார். கலிபோரினியா முதல் வடக்கே வாசிங்டன் வரையிலான மேற்கு கடலோர பகுதி மக்கள் மாபெரும் நிலநடுக்கம் மற்றும் அதை சார்ந்த சுனாமிக்கு எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும் என்பது விஞ்ஞானிகளே ஒத்துக்கொள்ளும் உண்மை. இது தவிர விஞ்ஞானியும் வேதாகம பிரியருமான சர் ஐசக் நியூட்டன், அவரது கணக்கீடு ஒன்று செப்டம்பர் 2015க்கு வந்து நிற்கிறதாம். பிரபலமான யூத ரபி (Chaim Kanievsky) ஒருவர் கூட சீக்கிரமாக மெசையா (அதாவது கிறிஸ்தவர்கள் சொல்லும் அந்திகிறிஸ்து) வருகிறார் சீக்கிரமாக எல்லா யூதர்களும் இஸ்ரேலுக்கு வாருங்கள் என கூறியிருக்கிறார். இப்படி கோர்வையாக சொல்லப்படும் காரியங்கள் மிக அநேகம். உலக சூழல்களும் கூட கிறிஸ்துவுக்கும் அவரது பிள்ளைகளுக்கும் எதிராக வெகு வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன.வணங்கா கழுத்துள்ள ஜனங்களாகவும் கிறிஸ்துவுக்கு எதிராக துணிகரமுள்ளவர்களாகவும் ஜனங்கள் மாறியிருக்கிறார்கள். என்ன நடக்க போகுது எப்படி நடக்க போகுது தேவன் ஒருவரே அறிவார். எது எப்படியோ. கிறிஸ்தவன் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை. அவன் இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் போன். ஏனென்றால் அவன் இங்கே கண் மூடும்போது கண் விழிப்பது அங்கே அல்லவா.
No comments:
Post a Comment