நண்பனே!
புனித வேதம் சொல்வதெல்லாம் சத்தியம்.
உன் நித்தியத்தை எங்கே கழிக்கப்போகிறாய்?
Ref: http://sinhalaya.com/news/eng/2012/sri-lanka-red-rain-is-having-a-cosmic-connection/
Wednesday, December 19, 2012
Monday, December 17, 2012
அழுகிறவர்களுடனே அழுங்கள்
துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதலும் தேறுதலும் அளிப்பது தேவ வசனங்களே என்றால் அது மிகையாகாது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கூட நேற்று கனேட்டிகட்டில் தங்கள் சிறுமலர்களை துப்பாக்கி சூட்டில் இழந்து தவிக்கும் குடும்பங்களின் மத்தியில் பேசும் போது வேத வசனங்களை மேற்கோள்காட்டி அவர்களுக்கு ஆறுதல் கூறினார். அவர் கூறும் போது....
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.ரோமர் 12:15
Source: http://global.christianpost.com/news/obama-sandy-hook-prayer-vigil-speech-transcript-newtown-full-text-video-86758/
"நாங்கள் சோர்ந்துபோகிறதில்லை; எங்கள் புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்குநாள் புதிதாக்கப்படுகிறது.மேலும் காணப்படுகிற வைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இலேசான நம்முடைய உபத்திரவம் மிகவும் அதிகமான நித்திய கனமகிமையை உண்டாக்குகிறது. ஏனெனில், காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ நித்தியமானவைகள்.பூமிக்குரிய கூடாரமாகிய நம்முடைய வீடு அழிந்துபோனாலும், தேவனால் கட்டப்பட்ட கைவேலையல்லாத நித்திய வீடு பரலோகத்திலே நமக்கு உண்டென்று அறிந்திருக்கிறோம்."....(11கொரி:4:16-18,11கொரி:5:1) ....
"சிறு பிள்ளைகள் என்னிடத்தில் வருகிறதற்கு இடங்கொடுங்கள்; அவர்களைத் தடைபண்ணாதிருங்கள்; பரலோகராஜ்யம் அப்படிப்பட்டவர்களுடையது" என்று இயேசு சொன்னார்."....(மத்:19:14) ..."
தேவன் தமது வீட்டுக்கு அவர்களையெல்லாம் அழைத்துக்கொண்டார்.மீந்திருக்கும் நாமும் நம்மை பெலப்படுத்திக்கொண்டு அவர்கள் நினைவில் நம் தேசத்தை தகுதிப்படுத்துவோம். நம்மை பிரிந்தவர்களை கடவுள் ஆசீர்வதித்து அவர்களை உன்னதத்தில் சேர்த்துக் கொள்வாராக.அவர் தமது இரக்கத்தால் இங்கிருக்கும் நம்மை பரிசுத்தமாய் அரவணைத்துக் கொள்வாராக.இப் பகுதியையும் நம் தேசத்தையும் பாதுகாத்து நம்மை ஆசீர்வதித்தருள்வாராக"என்று பேசினார்.
சந்தோஷப்படுகிறவர்களுடனே சந்தோஷப்படுங்கள்; அழுகிறவர்களுடனே அழுங்கள்.ரோமர் 12:15
Source: http://global.christianpost.com/news/obama-sandy-hook-prayer-vigil-speech-transcript-newtown-full-text-video-86758/
Tuesday, December 11, 2012
தலாய் லாமாவுக்கு கூட தெரியாத இரகசியம்.
இன்றைக்கும் யூத சமுதாயம் பூமியில் பிழைத்திருப்பது வரலாற்று அறிஞர்கள் பலருக்கும் ஆச்சரியமான ஒரு விசயம்.பல்வேறு போராட்டங்கள் கலகங்கள் எதிர்ப்புகள் சிறைபிடிப்புகள் சிதறடித்தல்கள் படுகொலைகள் மத்தியிலும் இன்னும் அந்த சமுதாயம் தனி கலாச்சாரம் பண்பாடு மதம் மொழியென வாழ்ந்து கொண்டிருப்பது வியக்க தகு காரியம்.ஆனால் அவர்களின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் இரகசியம் பலருக்கும் தெரியாது. 1986ம் வருடத்திய சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்றவர் எலியேசர் வீசல் (Eliezer Wiesel) .இவர் ஒரு யூதர். நாசிக்களின் யூத படுகொலையிலிருந்து (Holocaust) தப்பியரும் பிரபல விரியுரையாளரும் ஆவார். ஒரு முறை திபத்திய மத தலைவரான தலாய்லாமா வீசலை சந்திக்க ஆர்வம் தெரிவித்தார். வியந்து போன வீசல் காரணம் அறிய முற்பட்டபோது, தலாய் லாமா சொன்ன பதில் இது தான்."உங்கள் இனத்தார் படாத பாடுகள் இல்லை இன்னல்கள் இல்லை.2000 ஆண்டுகளுக்கு முன் சிறைபிடிக்கபட்டு போனார்கள். ஆனாலும் இன்றைக்கு பிழைத்திருக்கிறார்கள். நாங்கள் எங்கள் தேசத்தை விட்டு வெளியே வந்தோம். ஆனால் இன்றும் அகதிகளாகவே இருக்கிறோம்.கற்றுத்தாருங்கள் நீங்கள் எப்படி பிழைத்தீர்களென". (Spector,S.A;2011)
யூத குலம் இன்னும் வாழ்வதின் இரகசியம் இது தான். அது தலாய் லாமாவுக்கு கூட தெரியாத இரகசியம்.
"உன்னை அடிமைத்தன வீடாகிய எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உன் தேவனாகிய கர்த்தர் நானே." யாத் 20:2.
"நான் உங்களைப் புறஜாதிகளிடத்திலிருந்து அழைத்து உங்களைச் சகல தேசங்களிலுமிருந்து சேர்த்து, உங்கள் சுயதேசத்திற்கு உங்களைக் கொண்டுவருவேன்." எசேக்கியேல் 36:24
"அவர்களை அழைத்துக்கொண்டுவருவேன்; அவர்கள் எருசலேமின் நடுவிலே குடியிருப்பார்கள்; அவர்கள் எனக்கு உண்மையும் நீதியுமான ஜனமாயிருப்பார்கள், நான் அவர்களுக்கு தேவனாயிருப்பேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்." சகரியா 8 :8
இந்த ஜீவனுள்ள தேவனை நீயும் அண்டிக் கொள்வாயா?
Reference: Romanticism/Judaica: A Convergence of Cultures.By Sheila A. Spector (2011) Pg 13