இந்த வருட உயிர்த்தெழுதல் திருநாளை சிறிது வித்தியாசமாக கொண்டாடியிருக்கிறது வடக்கு கரோலினாவிலுள்ள ஒயிட்வில் (Whiteville) எனும் சிற்றூர். திட்டமிட்டபடி காலை ஆறு மணிக்கெல்லாம் சபை பாகுபாடின்றி அனைத்து சபை மக்களும் ஊரின் மையத்திலுள்ள ஒரு புல்வெளியில் குழுமினர். அங்கேயே காலை உயிர்த்தெழுதல் ஆராதனையை முடித்துக்கொண்ட அவர்கள் அடுத்து கிளப்பியது சாக்பீசும் கையுமாக ஊரின் தெருக்களுக்கு. நடைபாதையெங்கும் வேதத்தின் புதிய ஏற்பாடு முழுவதையும் எழுதி முடிப்பதுதான் அவர்கள் திட்டம், அப்படியே ஏறக்குறைய 1000 பேர்கள் கூடி ஊர் நடைபாதைகள் எங்கும் ஒருமித்து எழுதியதால் ஒரு மணிநேரத்திலேயே புதிய ஏற்பாட்டின் 7957 வசனங்களையும் எழுதிமுடித்தனர். இந்த உற்சாக நிகழ்ச்சியில் 15000 சாக்பீஸ்கள் 1332 சதுர அடி பரப்பில் எழுத பயன்படுத்தப்பட்டன. முழுவேதாகமத்தையும் இப்படி எழுதி முடிக்க முடியுமா என்பது தான் அவர்கள் அடுத்தகட்ட திட்டம். இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது.( சங்கீதம் 133:1) அந்திசாய்ந்ததும் நண்பர்களெல்லாரும் மறக்காமல் எல்லாவற்றையும் தண்ணீர் விட்டு அழித்துவிட்டனர். வேத வசனங்களை யாரும் மிதித்துவிடக்கூடாது பாருங்கள்.
சங்கீதம் 119:77 உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.





http://www.newsobserver.com/2012/04/08/1986972/columbus-county-residents-plan.html
No comments:
Post a Comment