
யானை நடந்தால் அது நியூஸ் அல்ல, விழுந்தால் தான் நியூஸ். அது போலத் தான் ஒரு கிறிஸ்தவன் சர்ச்சுக்கு போனால் அது நியூஸ் அல்ல, சர்ச்சுக்கு போகாவிட்டால்தான் அது நியூஸ். அதிபர் ஒபாமா ஜூலை 17ம் தியதி ஞாயிறு அன்று காலை 10.30 மணிக்கு வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள மிகப் பழமையான (கிபி.1815) செயிண்ட் ஜான் சர்ச்சுக்கு குடும்பத்தோடு போயிருக்கிறார். (தேர்தல் வருகுதில்லையா).இந்த சர்சுக்கு அமெரிக்காவின் நான்காவது அதிபர் ஜேம்ஸ் மேடிசனிலிருந்து எல்லா அதிபரும் வந்திருக்கிறார்கள். இதனால் இந்த ஆலயத்தை "Church of the Presidents" என்கிறார்கள். இங்கே அதிபருக்கென்று ஒரு தனி வரிசையே "The President's Pew" என ஒதுக்கி வைத்திருக்கிறார்கள்.54-வது நாற்காலி அது. ஆனால் அதிபர்கள் தான் இப்பக்கமே வருவதில்லை.தன்னை கிறிஸ்தவன் என பிரகடனம் செய்து கொள்ளும் எல்லா அதிபர்களும் உயர் அதிகாரிகளும் வாரம் தோறும் தவறாமல் ஆலயம் செல்ல கர்த்தர் அவர்களுக்கு வசதி வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுக்க நாம் ஜெபிக்க வேண்டியது கட்டாயமாகிறது.
சங்கீதம் 122:1 கர்த்தருடைய ஆலயத்திற்குப் போவோம் வாருங்கள் என்று எனக்கு அவர்கள் சொன்னபோது மகிழ்ச்சியாயிருந்தேன்.






http://www.cnsnews.com/news/article/first-family-attends-church-service
No comments:
Post a Comment