செய்திகளிலெல்லாம் பலதும் கேள்விப்படுகிறோமே.இவைகளெல்லாம் வேதனைகளுக்கு ஆரம்பம் என வேதம் சொல்லுகின்றது. ஆனால் முடிவு உடனே வராது. உபத்திரவகாலத்தில், மகா உபத்திரவ காலத்தில் நடைபெறப்போகும் சம்பவங்களின் சாம்பிள் தான் நாம் இப்போது நம் சொந்த கண்களால் பார்த்துக் கொண்டிருப்பது. மெதுவாகத் தொடங்கும் இந்த வேதனைகள் பின் சடுதியாய் வந்து இறங்கும். ஆனாலும் நோவாகாலத்தில் நடந்தது போல ஜலப் பிரளயத்துக்கு முன்னான காலத்திலே நோவா பேழைக்குள் பிரவேசிக்கும் நாள் வரைக்கும், ஜனங்கள் புசித்தும் குடித்தும், பெண் கொண்டும் பெண் கொடுத்தும், ஜலப்பிரளயம் வந்து அனைவரையும் வாரிக் கொண்டுபோகுமட்டும் உணராதிருந்தார்கள். இக்கால ஜனங்களும் இப்படியே உணராதிருப்பார்கள். It is normal என்பார்கள். சகலமும் சிருஷ்டிப்பின் தோற்றமுதல் இருந்த விதமாயிருக்கிறதே என்றும் சொல்லுவார்கள்.(2 பேதுரு:3:4). வெளி 8-ம் அதிகாரம் இப்படியாக சொல்லுகிறது. 8-ம் வசனத்தில் இரண்டாம் தூதன் எக்காளம் ஊதினான்; அப்பொழுது அக்கினியால் எரிகிற பெரிய மலை போன்ற தொன்று சமுத்திரத்திலே போடப்பட்டது. அதினால் சமுத்திரத்தில் மூன்றிலொருபங்கு இரத்தமாயிற்று.
9.சமுத்திரத்திலிருந்த ஜீவனுள்ள சிருஷ்டிகளில் மூன்றிலொருபங்கு செத்துப்போயிற்று.இதோ சில சமீபத்திய செய்திகள்
லாஸ் ஏஞ்சல்ஸ் கடற்கரையை சூழ்ந்த மில்லியன் கணக்கான செத்த மீன்கள் - 8 மார்ச் 2011ஆஸ்திரேலியா டார்லிங் நதியில் ஆயிரக்கணக்கான செத்த மீன்கள் மிதப்பு - 15 மார்ச் 2011சவுத் வேல்ஸில் 26,000 மீன்கள் செத்து மிதந்தன - 11 மார்ச் 2011ஹவாயில் மீன்கள் செத்து மிதப்பு - 14 மார்ச் 2011மிசிகனில் ஆயிரக்கணக்கான மீன்கள் சாவு - 11 மார்ச் 2011இல்லினாய்ஸ் ஏரியில் நூற்றுக்கணக்கான மீன்கள் சாவு - 10 மார்ச் 2011கனடாவில் நூற்றுக்கணக்கான கடல் சீல்கள் சாவு - 17 ஜனவரி 2011மேரிலேண்ட் கடற்கரையில் இரண்டு மில்லியன் செத்த மீன்கள் - 5 ஜனவரி 2011இங்கிலாந்தில் 40,000 செத்த நண்டுகள் கரை ஒதுங்கின.- 6 ஜனவரி 2011Something fishy is going on… என நாம் சொல்ல வேண்டியத்தில்லை.ஏனென்றால் இது நடக்கும்போது நாம் விசுவாசிக்கும்படியாக, இவை நடப்பதற்குமுன்னமே இதை இயேசு நமக்காக சொல்லி சென்றிருக்கின்றார். (யோவான்:14:29)
Everything is under His control. You don't have to worry.
No comments:
Post a Comment