
Bible and Incidents in Tamil pdf book download link
Excerpts:
2. a) தேவனாகிய கர்த்தர் மனுஷனை பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவ சுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
- ஆதியாகமம் 2:7
உலகமெங்குமுள்ள மனிதர்கள் ஏதாவது ஓரு மண்ணின் நிறத்தில்தான் இருக்கின்றனர். (பிரௌன்) (Brown)
மனித சரீரத்தின் முக்கிய மூலகங்களான நைட்ரஜன், கார்பன், ஆக்சிஜன், கால்சியம், தண்ணீர் போன்றவை மண்ணிலும் இருக்கிறது என்பதை விஞ்ஞான உலகம் கண்டுபிடித்த உண்மை. பரிசுத்த வேதாகமத்தில் காணப்படும் வார்த்தைகள் கட்டுக்கதைகள் அல்ல.
b) பூமியானது மிருகங்களையும்... ஊரும் பிராணிகளையும்... பிறப்பிக்கக்கடவது
என்றார். (ஆதி. 1:24)
பூமியின் மண்ணிலுள்ள அதே மூலகங்கள்தான் மிருகங்களின், ஊர்வனவற்றின்
சரீரத்தில் இருப்பதாக விஞ்ஞானமும் ஒத்துக் கொள்கிறது.
3. காற்று தெற்கே போய் வடக்கேயும் சுற்றி சுழன்று அடித்து தான் சுற்றின
இடத்துக்கே திரும்பவும் வரும். பிரசங்கி 1:6
பருவக் காற்றுகள்தான் மழையைக் கொண்டு வருகின்றன. வேதம் சொல்லும்
இம்முறையையே உலகப் பருவக் காற்றுகள் இன்றும் பின்பற்றுகின்றன.
4. வானத்து நட்சத்திரங்கள் எண்ணப்படாததுபோல ... என் தாசனாகிய
தாவீதின் சந்ததியையும் வர்த்திக்கப் பண்ணுவேன் என்று... ஏரேமியா 33:22
1930 இன்றுவரை சுமார் 100 மில்லியன் நட்சத்திரங்கள் தான் வானத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் நம்பினர். பிறகு 40 Sextillion நட்சத்திரங்கள் இருப்பதாக கணக்கிட்டனர் (40க்கு பக்கத்தில் 22 பூஜ்ஜியங்கள் போட வேண்டும்.) பிறகு நட்சத்திரங்களை கணக்கிடவே முடியாது என்று முடிவாக அறிவித்து விட்டனர். வேத வார்த்தைகள் நிரூபிக்கப்பட்டாகி விட்டது.
Cannot download the PDF file from link
ReplyDeleteclick the link, it will open the pdf file. Right click on the pdf and click "save as"
ReplyDeleteCannot download the PDF file from link
ReplyDeleteஜீவ அப்பம் தமிழ் மாத இதழ், வாசிக்க, Download செய்து கொள்ள
ReplyDeletehttp://www.jeevaappammagazine.blogspot.in