
பரிசுத்த வேதாகமத்தில் முன்னுரைக்கப்பட்டிருக்கும் தீர்க்கதரிசனங்களில் சில அப்படியே எழுத்தின் பிரகாரமாக நிறைவேறும்.உதாரணமாக இயேசு கிறிஸ்து எருசலேம் தேவாலயத்தை பற்றிச் சொன்ன தீர்க்கதரிசனத்தை குறிப்பிடலாம். மத்தேயு 24:2-ல் இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார் என்ற தீர்க்கத்தரிசனம் அப்படியே எழுத்தின் படியாக கிபி 70-ல் நடைபெற்றது.ரோம பேரரசனான தீத்து எருசலேம் தேவாலயத்தை ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு இடித்துப்போட்டான்.
இன்னும் சில தீர்க்கத்தரிசனங்களோ ஞானர்த்தம் கொண்டவையாய் இருக்கும். அது எழுத்தின்படி அப்படியே நிறைவேறாமல் அதின் மூலம் விளக்கப்படும் அர்த்தம் நிறைவேறுவதாய் இருக்கும். உதாரணமாக கீழ்கண்ட இயேசு கிறிஸ்துவின் தீர்க்கதரிசனத்தை குறிப்பிடலாம்.யோவான் 2:19-ல் இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: இந்த ஆலயத்தை இடித்துப்போடுங்கள், மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன் என்றார் என்ற தீர்க்கதரிசனம் எழுத்தின் படியான தேவாலயமாய் இருக்காமல் ஞானர்த்தமாய் அவர் தன் சரீரத்தையே குறிப்பிட்டார்.அப்பொழுது யூதர்கள்: இந்த ஆலயத்தைக் கட்ட நாற்பத்தாறு வருஷம்சென்றதே, நீர் இதை மூன்று நாளைக்குள்ளே எழுப்புவீரோ என்றார்கள் என்ற வசனம் அவர்கள் எழுத்தின் பிரகாரமான தேவாலய கட்டடத்தை பற்றி சிந்தித்ததையும் ஞானர்த்தமாய் அவருடைய சரீர மரணத்தையும் மூன்றாம் நாளில் உயிர்ப்பதையும் குறித்து சிந்திக்காமல் இருந்தார்கள் என்பதையும் காட்டுகிறது. தானியேலிலும் வெளிப்படுத்தின விசேஷத்திலும் வரும் வினோதமான கொம்புள்ள மிருகங்கள், சிலைகள், ஸ்திரீகள், காட்சிகள் எல்லாமே வரவிறுக்கும் வெவ்வேறு சம்பவங்களை ஞானர்த்தமாய் குறிப்பிடுவனவேயாகும்.
இங்கு எழுத்தின் படியே அப்படியே சீக்கிரத்தில் நடக்கவிருக்கும் ஒரு தீர்க்கதரிசனத்தை உங்களுக்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.28 ஆண்டுகளாக மேற்கு ஜெர்மனியையும் கிழக்கு ஜெர்மனியையும் இரண்டாக பிரித்து வைத்திருந்த பெர்லின் சுவர் 1989-ஆம் ஆண்டு இடித்து தரைமட்டமாக்கப்பட்ட போது ஜெர்மானியர்களின் சந்தோஷ ஆர்ப்பரிப்பில் உலகமே அவர்களை வாழ்த்தியது.இது போன்று இஸ்ரேலின் சில சுவர்கள் இடிக்கப்பட உள்ளன. இஸ்ரேல் தன்னை தீவிரவாதிகளிடமிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் அவர்கள் ஊடுருவலை தடுக்கவும் தேசத்தை சுற்றிலும் உயரமான சுவர்களை எழுப்பியுள்ளது.இதனை Israel’s Security Fence அல்லது Israeli West Bank barrier என்பார்கள்.இதன் நீளம் ஏறக்குறைய 400 கிலோமீட்டர்கள் ஆகும்.இவைகள் அங்காங்கே checkpoints எனப்படும் கதவுகள் கொண்டிருக்கின்றன.இச்சுவர்கள் பெருமளவு தீவிரவாதத்தை கட்டுப்படுத்தியுள்ளதால் இதன் நீளத்தை இன்னும் இஸ்ரேல் தேசத்தை சுற்றிலும் அதிகப்படுத்தியவாறு உள்ளனர். இந்த சுவர்கள் சீக்கிரத்தில் இடிக்கப்படும் என எசேக்கியேல் தனது தீர்க்கத்தரிசனத்தில் உரைக்கிறார்.
எசேக்கியேல் 38ம் அதிகாரம் 12ம் வசனம் சொல்கின்றது ”நான் கொள்ளையிடவும் சூறையாடவும், மதில்களில்லாமல் கிடக்கிற கிராமங்களுள்ள தேசத்துக்கு விரோதமாய்ப் போவேன்; நிர்விசாரமாய் சுகத்தோடே குடியிருக்கிறவர்களின்மேல் வருவேன்; அவர்கள் எல்லாரும் மதில்களில்லாமல் குடியிருக்கிறார்கள்; அவர்களுக்குத் தாழ்ப்பாளும் இல்லை, கதவுகளும் இல்லை என்பாய்.”
எப்போது இந்த இஸ்ரேலின் சுவர்கள் இடிக்கப்படும்?
அந்திக்கிறிஸ்து எனப்படும் பொய்மேசியாவின் அமைதிபேச்சு வார்த்தைகளுக்கு உடன்பட்டு அதனால் இஸ்ரேல் பிராந்தியத்தில் ஒரு அசாதாரண சமாதானம் உண்டாக உற்சாகத்தில் இஸ்ரேல் தேசமானது இம்மதில்களை இனித் தேவையில்லை என நினைத்து இடித்துப்போடும். அத்தருணத்தில் அவர்கள் நிர்விசாரமாக சுகத்தோடே Peace and Security-உடன் யூதர்களும் பாலஸ்தீனர்களுமாக ஒரே நிலப்பரப்பில் கூடி இருக்கும் போது அந்த யுத்தம் நிகழும். வடக்கிலிருந்து வரும் அந்த தேசம் இஸ்ரேலுக்கு எதிராக வரும்.இதுவே எசேக்கியேல் 38 மற்றும் 39 கூறும் கோகு மாகோகு யுத்தமாக அமையும்.
No comments:
Post a Comment