கிறிஸ்து உலகில் வாழ்ந்தது கட்டுக்கதையல்ல.அது ஒரு வரலாறு. அதற்கு எத்தனையோ சான்றுகள் உள்ளன. நம் பள்ளிப்பருவத்தின் வரலாற்று பாடநூல்களின் மூலம் பிளினி (Pliny the Younger-61/63 - ca. 113)-என்பவரைப்பற்றி நாம் அறிவோம்.
இவர் பிதினியா-சின்ன ஆசியா (Bithynia) நாட்டின் அதிபராக இருந்தவர். இவர் கி.பி 110-ல் ரோம மன்னன் டிராஜனுக்கு(Trajan) எழுதிய கடிதத்தில் கிறிஸ்தவர்கள் இயேசுகிறிஸ்துவை மறுதலிக்கும் பொருட்டுத் தாம் கையாடிய கொடுஞ்செயல்களை விளக்கி எழுதியுள்ளார்.(Colin Chapman எழுதிய Christianity on Trial,பக்கம் 422,423)
No comments:
Post a Comment