Tuesday, August 07, 2007
குயவனே குயவனே படைப்பின் காரணரே பாடல்
Kuyavane Kuyavaney Padaippin Kaarananee Tamil video Song
குயவனே, குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே
வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்யுமே
வேதத்தில் காணும் பாத்திரம் எல்லாம்
இயேசுவை போற்றிடுதே
என்னையும் அவ்வித பாத்திரமாய்
வனைந்து கொள்ளுமே
இறைவனே இறைவனே இணையில்லாதவனே
குறை நிறைந்த என்னையுமே
கண்ணோக்கி பார்த்திடுமே
விலைபோகாத பாத்திரம் நான்
விரும்புவார் இல்லையே
விலையில்லா உம் கிருபையால் உகந்ததாக்கிடுமே
தடைகள் யாவும் நீக்கி என்னைத்தம்மைப்போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடமையாக்கிடுமே
மேய்ப்பனே மேய்ப்பனே மந்தையை காப்பவனே
மார்க்கம் அகன்ற என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே
மண்ணாசையில் நான் மயங்கியே
மெய்வழி விட்டகன்றேன்
கண்போன போக்கை பின்பற்றியே
கண்டேன் இல்லை இன்பமே
காணாமல் போன பாத்திரம் என்னைத்
தேடிவந்த தெய்வமே
வாழ்நாளெல்லாம் உம் பாதம்
செல்லும் பாதையில் நடத்திடுமே
அன்பு நண்பர் அவர்களே உங்கள் பதிவை நீண்ட நாட்கள் கானோமே.ஏன்.நன்றா உள்ளது உங்கள் பதிவு.தொடர்ந்து பதிக்க வேண்டுமாய் கேட்டு கொள்ளுகிறேன்.
ReplyDeleteஉங்கள் வரவுக்காக நமது மன்றம் காத்திருக்கிரது.http://www.tamilchristians.com/index.php
மைகோயம்புத்தூர்http://www.geocities.com/mycoimbatore/?200722
மிக்க நன்றி ஐயா.
ReplyDeleteஉங்கள் வார்த்தைகள் மிகவும் உற்சாக மூட்டுகின்றன.தொடர்ந்து எழுத முயலுவேன்.
நன்றி.
Hi Pls visit here you will get some more songs.
ReplyDeletewww.salvationtv.in
Can you please add the lyrics also to your site
ReplyDelete