மக்களுக்கு செய்யும் சேவையே மகேசனுக்கு செய்யும் #சேவை என்பதையே "மிகவும் சிறியவராகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள்" என்ற கிறிஸ்துவின் வாக்கியம் (மத் 25:40) பிரதிபலிக்கிறது. கண்ணுடையர் என்பவர் கற்றோர், முகத்து இரண்டு புண்ணுடையர் கல்லாதவர் என்றது #திருக்குறள். மூடநம்பிக்கைகள் நிறைந்திருந்த அக்காலங்களில் #கல்விப்பணி என்பது கண்ணில்லாதவர்களுக்கு கண்களை அளிப்பது போன்றிருந்தது. அப்படியே கல்விக் கண்கள் திறந்ததால் இருளில் இருந்த ஜனங்கள் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள் (மத் 4:15). கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களுக்கு என்றுமே #தமிழகம் நன்றிகடன் பட்டிருக்கிறது.


ஏலியன்கள் என்றும் வேற்றுகிரகவாசிகள் என்றும் இவர்கள் கூறுவதும் எச்சரிப்பதும் எல்லாம் கடவுளைத்தான். முதல் முதலாக ஏலியன் கடத்திப்போனது (First documented alien abduction) ஏனோக்கைத்தான் என்கிறார்கள். இரகசிய வருகையையும் வேற்றுகிரகவாசிகள் வந்து நம்மில் பலரை கடத்திச்சென்று விட்டார்கள் (Mass alien abduction) என்று சொல்லி உலகத்தாரை நம்பவைப்பார்கள். கடவுள் என்றோ இயேசு கிறிஸ்துவின் வருகை என்றோ சொல்லமாட்டார்கள். ஏலியன்கள் படையெடுப்பு என சொல்லி ஏமாற்றுவார்கள். அதற்கான ஆரம்பங்கள் தான் இது. வேற்றுகிரகவாசிகள் பற்றி மிக அதிகமாக செய்திகள் இப்போது பேசப்படுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அவர்கள் தேவனை அறிந்தும், அவரைத் தேவனென்று மகிமைப்படுத்தாமலும், ஸ்தோத்திரியாமலுமிருந்து, தங்கள் சிந்தனைகளினாலே வீணரானார்கள், உணர்வில்லாத அவர்களுடைய இருதயம் இருளடைந்தது. ரோமர் 1:21


Monday, September 26, 2016