இரட்சிப்பின் வழி
நம்பினால் நம்புங்கள்
Saturday, February 13, 2016
உந்தன் பாதம் ஒன்றே போதும் எந்தன் நேசர் இயேசுவே உம்மையல்லால் வேறு எதுவும் இந்த உலகில் எனக்கு வேண்டாம் பாவியாய் நான் அலைந்தேனே என்னைத் தேடி நீர் வந்தீரே உந்தன் உதிரம் எனக்காக சிந்தி என்னை மீட்டு இரட்சித்தீரே அன்பைத் தேடி நான் அலைந்தேனே எங்கும் நான் அதைக் காணவில்லை உந்தன் அன்பை என் மேல் பொழிந்து உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றினீர் துன்பம் நிறைந்த என் வாழ்விலே உந்தன் சமூகம் ஒன்றே போதும் கண்ணின் மணிபோல காக்கும் உம்மைப் போல் யாருமில்லை தனிமை என்னை வாட்டும் போது உம் சமூகத்தால் என்னை தேற்றிகிறீர் கண்ணீர் நிறைந்த என் வாழ்விலே உந்தன் கரங்களால் அணைத்துக் கொண்டீர்
‹
›
Home
View web version