வடக்கே ஆக்ராவை தலைநகராகக் கொண்டு பாபர் ஹூமாயூன் அக்பர் போன்றோர் ஆண்டுகொண்டிருக்க தெற்கே மதுரையை தலைநகராகக்கொண்டு நாயக்கர்களும் சில தென்காசிப் பாண்டியர்களும் ஆண்டுகொண்டிருந்த அந்த காலகட்டத்தில் தான் பிரிட்டனில் முதல் ஆங்கில வேதாகமம் வெளியானது. சபையின் இருண்ட காலங்கள் அது. அந்த கால‌ சர்ச் வேண்டுமென்றே மக்களுக்கு தெரியாமல் மறைத்து வைத்திருந்த‌ பல்வேறு வேதாகம ரகசியங்கள் அப்போது வெளி உலகுக்கு தெரியவந்தன. அப்படியாக பிறகு நாமெல்லாரும் படித்து புரியும் படியாக நம் மொழிகளிலேயே வேதாகம‌ங்கள் வெளியாகத் தொடங்கின. அந்த சர்சின் ஆதிக்கமும் அத்தோடு கொஞ்சம் கொஞ்சமாக விலகத்தொடங்கியது. இருளிலிருந்த ஜனங்கள் மிகப் பெரிய வெளிச்சத்தை கண்டார்கள். நாமெல்லாருக்கும் வேதாகமம் ஒரு விலையுயர்ந்த‌ பொக்கிஷம்.அநேகமாயிரம் பொன் வெள்ளியைப் பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம். சங்கீதம் 119:72


Monday, June 22, 2015

வேதாகம காலத்தில் கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று காடைகளை சமுத்திரத்திலிருந்து கொண்டுவந்து நிலத்தில் கொட்டி, வனாந்திரத்திலிருந்த இஸ்ரேலியர்களின் பசியை போக்கியது என படிக்கிறோம். அதைப்போலவே அந்த சம்பவத்தை நிரூபிக்கும் வண்ணமாக சுழல்காற்று ஒன்று சமுத்திரத்திலிருந்த‌ மீன்களை அள்ளிக் கொண்டுவந்து நிலத்தில் மழையாக கொட்டின நம்மூர் செய்தியை பாருங்கள். வேதாகமம் எத்தனை சத்தியம். "அப்பொழுது கர்த்தரிடத்திலிருந்து புறப்பட்ட ஒரு காற்று சமுத்திரத்திலிருந்து காடைகளை அடித்துக்கொண்டுவந்து, பாளயத்திலும் பாளயத்தைச் சுற்றிலும், இந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும் அந்தப்பக்கம் ஒருநாள் பிரயாணமட்டும், தரையின்மேல் இரண்டுமுழ உயரம் விழுந்துகிடக்கச் செய்தது. அப்பொழுது ஜனங்கள் எழும்பி, அன்று பகல்முழுவதும், இராமுழுவதும், மறுநாள் முழுவதும் காடைகளைச் சேர்த்தார்கள்" எண்ணாகமம் 11:31,32


Wednesday, June 10, 2015

நியூயார்க் ந‌கரத்து ஒன்பது மில்லியன் ஜனங்க‌ளுக்கும் குடிநீர் கொடுப்ப‌து இந்த கென்சிகோ அணையேயாகும். இது நியூயார் நகருக்கு வடக்கே 15 மைல்கள் தொலைவில் உள்ளது. இந்த அணையின் உச்சியில் இருபுறமும் உள்ள‌ கல்மண்டபங்களில் கீழ்க்கண்ட வேதாகம‌ வசனங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. "அவர் வானத்தை மேகங்களால் மூடி, பூமிக்கு மழையை ஆயத்தப்படுத்தி, மலைகளில் புல்லை முளைப்பிக்கிறார். பஞ்சைப்போல் உறைந்த மழையைத் தருகிறார்; சாம்பலைப்போல் உறைந்த பனியைத் தூவுகிறார். அவர் தமது வார்த்தையை அனுப்பி, அவைகளை உருகப்பண்ணுகிறார்; தமது காற்றை வீசும்படி செய்ய, தண்ணீர்கள் ஓடும்" சங்கீதம் 147:8,16,18 ஆமாங்க இது அந்த‌ காலத்து அமெரிக்காங்க.. தேவனுக்கு பயந்திருந்த அமெரிக்காங்க... அதனாலேயே அபரிதமாக‌ ஆசீர்வதிக்கப்பட்டிருந்த அமெரிக்காங்க.... வேதம் சொல்லுகிறது "கர்த்தருடைய பரிசுத்தவான்களே, அவருக்குப் பயந்திருங்கள்; அவருக்குப் பயந்தவர்களுக்குக் குறைவில்லை" சங்கீதம் 34:9


Wednesday, June 03, 2015

உலகம் ப‌ல டைம் சோன்களை கொண்டது எனவும் பூமியின் ஒரு பகுதி பகலாக இருக்கும் போது மறுபகுதி இரவாக இருக்கும் என்பது போன்ற தகவல்களும் நாம் அறிந்ததே. இதையெல்லாம் விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக‌ சமீபகாலத்தில் தான் நாம் அறிவோம். அதற்கேற்ப உலகெங்கும் டைம் சோன்களை பிரித்துள்ளார்கள். ஆனால் வேதாகம காலத்திலேயே கிறிஸ்துவானவர் இதனை சூசகமாக குறிப்பிட்டுள்ளது உங்களுக்கு தெரியுமா? கிறிஸ்துவானவர் வெளிப்படும் நொடியில் ஓர் உலகம் தூங்கிக்கொண்டு இருக்கும் எனவும் இன்னோர் உலகம் வேலைசெய்து கொண்டு இருக்கும் எனவும் இன்னோர் உலகத்தில் அங்கே சாயுங்காலமாக இருக்கும் எனவும் நாம் காணலாம். வேதம் சொல்லுகிறது... " அந்த இராத்திரியில் ஒரே படுக்கையில் படுத்திருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்" - இது இரவு நேரம். "வயலிலிருக்கிற இரண்டுபேரில் ஒருவன் ஏற்றுக்கொள்ளப்படுவான், மற்றவன் கைவிடப்படுவான்" - இது பகல் நேரம் "இரண்டு ஸ்திரீகள் ஏந்திரம் அரைத்துக் கொண்டிருப்பார்கள்; ஒருத்தி ஏற்றுக்கொள்ளப்படுவாள், ஒருத்தி கைவிடப்படுவாள்" - இது சாயுங்கால நேரம். ஒரே நொடி ஆனால் உலகெங்கும் வெவ்வேறு தருணங்கள். வேதாகம் எத்தனை அற்புதமான புத்தகம்!!