எல்லாமே வெகு வேகமாக நடக்கின்றன. வெகுஜன ஊடகங்களெல்லாம் இதைப் பற்றி பேசுவதே இல்லை. திடீரென ஒருநாள் எல்லாமே முடிந்திருக்கும். எம்மதமும் சம்மதமென நீங்கள் ஒத்துக்கொள்ள தயாரா? ஒன்று கூடி சமாதான சின்னமாக ஒலிவமரத்தை நட்டிருக்கிறார்கள். ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? கிறிஸ்துவுக்கும் பேலியாளுக்கும் இசைவேது? அவிசுவாசியுடனே விசுவாசிக்குப் பங்கேது? தேவனுடைய ஆலயத்துக்கும் விக்கிரகங்களுக்கும் சம்பந்தமேது? என்கிறதே வேதாகமம் (II கொரி 6:14 16). கிறிஸ்துவுக்கும் சபைக்கும் உள்ள உறவு ஒரு மணவாளனுக்கும் மணவாட்டிக்கும் உள்ள புனிதமான உறவு. இதில் மூன்றாம் நபர் நுழையும் போது சபையாகிய மணவாட்டி களங்கப்படுத்தப்பட்டு வெளிப்படுத்தல் 18ம் அதிகாரத்திலுள்ளது போல சபையானது வேசியாகிறாள். அதின் முடிவை நீங்கள் 17,18,19 அதிகாரங்களை படித்து தெரிந்துகொள்ளலாம். பூமியின் ராஜாக்கள் எல்லாம் ஆரம்பத்தில் ஒன்றாக இது போல ஆனந்தமாக கூடுவார்கள் அந்திக்கிறிஸ்துவை வெளிக்கொணர வேண்டி(வெளி 18:3). ஆனால் இறுதியில் அந்திக்கிறிஸ்து வெளிப்பட்டதும் அவளைப் பகைத்து, பாழும் நிர்வாணமுமாக்கி, அவளுடைய மாம்சத்தைப் பட்சித்து, அவளை நெருப்பினால் சுட்டெரித்துப் போடுவார்கள் என்கிறது வேதாகமம் (வெளி 17:16). ரோமாபுரி முடிவில் அழிக்கப்பட்டு போகும் " when these things are finished, the city of seven hills [i.e. Rome] will be destroyed" என முடியும் Prophecy of the Popes நினைவுக்கு வருகிறது.
"என் ஜனங்களே, நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உடன்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளைவிட்டு வெளியே வாருங்கள்" ( வெளி 18:4)
Wednesday, June 11, 2014
Tuesday, June 10, 2014
அந்தரங்கத்தில் தொங்கும் பூமி
20 ஆம் நூற்றாண்டின் மத்தியில் நன்கறியப்பட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான 'பெர்ட்ரான்ட் ரஸ்ஸெல்' என்பவர் பொது மக்கள் முன்னிலையில் உரையாற்றிய போது பூமி சூரியனைச் சுற்றி வருகிறதெனவும் சூரியன் அது அமைந்துள்ள பால்வெளி அண்டத்தின் மையத்தை அதிலுள்ள ஏனைய பல மில்லியன் நட்சத்திரங்களுடன் சேர்ந்து சுற்றி வருவதாகவும் விளக்கினார். இவர் தனது விரிவுரையை முடித்த போது கூட்டத்தின் ஒரு மூலையில் இருந்த பெண்மணி ஒருவர் எழும்பி பின்வருமாறு கூறினார். 'நீங்கள் இதுவரை சொன்னதெல்லாம் வெறும் குப்பை. உண்மை என்னவெனில் உலகம் ஒரு மிகப் பெரிய ஆமையின் ஓட்டில் அமைந்துள்ள ஒரு வட்டமான தட்டு.'விஞ்ஞானி உடனே அந்தப் பெண்மணியைப் பார்த்து விநோதமாகப் புன்னகைத்த பின் ஒரு கேள்வியை எழுப்பினார். 'நீங்கள் கூறும் ஆமை எதன்மேல் அமர்ந்துள்ளது?' அந்தப் பெண்மணி ஒரு கணம் திகைத்துப் போய் விட்டார். மேலும் விஞ்ஞானியைப் பார்த்து நீங்கள் மிகவும் புத்திசாலி என்று வாழ்த்தினார். இப்படி பூமியின் அமைப்பு குறித்து தவறான பல்வேறு மூடநம்பிக்கைகள் முன்பு உலக முழுவதும் இருந்தன. ஆனால் வேதாகமம் 3500 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது
தேவன் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார் என்று (யோபு 26:7).
He stretches out the north over empty space And hangs the earth on nothing. Job 26:7
தேவன் உத்தரமண்டலத்தை வெட்டவெளியிலே விரித்து, பூமியை அந்தரத்திலே தொங்கவைக்கிறார் என்று (யோபு 26:7).
He stretches out the north over empty space And hangs the earth on nothing. Job 26:7
Thursday, June 05, 2014
எத்தனை நட்சத்திரங்கள்?
வெறும் கண்ணால் நமக்கு பார்க்கத் தெரியும் நட்சத்திரங்கள் 9,000
அதுவே நல்லதொரு பைனாகுலரால் பார்வையிட்டால் 200,000
கொஞ்சம் ரிஸ்க் எடுத்து டெலஸ்கோப் வாங்கி நோக்கினால் 15,000,000 (15 மில்லியன்)
பெரிய வான்வெளி ஆய்வுகூடங்களில் போய் ஆய்ந்து நோக்கினால் இதன் எண்ணிக்கை பில்லியன்கள் போகும்.
உண்மையிலேயே எத்தனை நட்சத்திரங்கள் உள்ளதாம்?
நாம் இருக்கும் பால்வெளியில் மட்டும் 400 பில்லியன் நட்சத்திரங்கள் உள்ளனவாம்.
இது போல எத்தனை பால்வெளிகள் உள்ளனவாம்?
170 பில்லியன் பால்வெளிகள்.
அப்போ எல்லா பால்வெளிகளையும் சேர்த்து மொத்தம் எத்தனை நட்சத்திரங்கள் உள்ளனவாம்?
24 செப்டில்லியன்கள் என்கிறார்கள்.
அதாவது 1000000000000000000000000 நட்சத்திரங்கள்.
இதெல்லாம் நம் மூளைக்கு எட்டியவரையே.
ஆனால் உண்மையில் நாம் நட்சத்திரங்களின் எண்ணிக்கையை எண்ணியே முடியாது என முடிக்கிறார்கள்.
வேதாகமம் சொல்லுகிறது கர்த்தர் நட்சத்திரங்களின் இலக்கத்தை எண்ணி, அவைகளுக்கெல்லாம் பேரிட்டு அழைக்கிறார் என்று (சங்கீதம் 147:4).
என்ன மகத்துவமான தேவன் அவர்.
http://www.universetoday.com/102630/how-many-stars-are-there-in-the-universe/