Tuesday, October 23, 2012

பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்போம்

படத்தில் நீங்கள் காணும் இந்த புகழ்பெற்ற “பட்டயங்களை மண்வெட்டிகளாக அடிப்போம்” சிற்பமானது ("Let us beat swords into plowshares") நியூயார்க் மாநகரத்திலுள்ள ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் நிறுவப்பட்டுள்ளது. மனிதனை அழிக்கும் போர்க்கருவியான பட்டயங்களையெல்லாம் மனிதனுக்கு பயனாகும் கருவியான மண்வெட்டிகளாக மாற்றுவோம் என்பது தான் இந்த சிற்பம் சொல்லும் நீதி. இந்த அற்புதமான கருத்து எதிலிருந்து எடுக்கப்பட்டது தெரியுமா? நமது வேதத்தின் ஏசாயா:2:2-டிலிருந்து தான். “அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும் தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடிப்பார்கள்; ஜாதிக்குவிரோதமாய் ஜாதி பட்டயம் எடுப்பதில்லை, இனி அவர்கள் யுத்தத்தைக் கற்பதுமில்லை.” என்பது தான் அந்த வசனம். இந்த சிலையை ஐநாவுக்கு பரிசாக 1959-ல் வழங்கியது சோவியத் யூனியன் என்பது இன்னொரு ஆச்சரியமான உண்மை. யுத்தங்களே இல்லாத இப்படியான ஒரு பொற்காலம் இயேசுகிறிஸ்துவின் ஆயிரவருட அரசாட்சியின் காலத்தில் மட்டுமே சாத்தியமாகும் என்பது யாருமே ஒத்துக்கொள்ளாத ஆனால் நிச்சயம் நடைபெறப்போகும் ஒரு சம்பவமாகும். 

ஒரு சமுத்திரந்தொடங்கி மறுசமுத்திரம்வரைக்கும், நதிதொடங்கி பூமியின் எல்லைகள்வரைக்கும் அவர் அரசாளுவார்.(சங்:72:8 ) தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக, ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள். (வெளி 20:6) சகல ராஜாக்களும் அவரைப் பணிந்துகொள்வார்கள்; சகல ஜாதிகளும் அவரைச் சேவிப்பார்கள்.(சங்:72:11.)