கிறிஸ்தவ பாடல் புஸ்தகங்கள்
Book 1 -Tamil Christian song book with 200 Songs download
Book 2 -Tamil Christian song book with 664 Songs download
Book 3 -Tamil Christian song book with 60 Songs download
சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, (எபேசி.5:19)
Free Christian Lyrics ebook Pdf
Tuesday, May 08, 2012
Sunday, May 06, 2012
ஆவியின் கனி
ஆவியின் கனி ஒன்பது இருப்பினும், ஆவியின் கனிகள் என்று பன்மையில் அழைக்கப்படாமல் ஆவியின் கனி என்று ஒருமையில் அழைக்கப்பட காரணமென்ன? விவரம் தெரிந்தவர்கள் விளக்கம் அளிக்கலாம். நன்றி.

Source
ஆவியின் கனி கோரஸ் பாடல்
ஆவியின் கனியோ ஒன்பதாம்
அன்பு சந்தோஷம் சமாதானமாம்
நீடியபொறுமை தயவு
நற்குணமும் விசுவாசமாம்
சாந்தம் இச்சையடக்கமாம்
கலாத்தியர் 5-ல் உள்ளதாம்
22,23-ம் வசனங்களிலே உள்ளதாம்.

Fruit of the Spirit
Love
Joy
Peace
Patience
Kindness
Goodness
Faithfulness
Gentleness and
Self-control.
Galatians 5:22-23

Source
ஆவியின் கனி கோரஸ் பாடல்
ஆவியின் கனியோ ஒன்பதாம்
அன்பு சந்தோஷம் சமாதானமாம்
நீடியபொறுமை தயவு
நற்குணமும் விசுவாசமாம்
சாந்தம் இச்சையடக்கமாம்
கலாத்தியர் 5-ல் உள்ளதாம்
22,23-ம் வசனங்களிலே உள்ளதாம்.

Fruit of the Spirit
Love
Joy
Peace
Patience
Kindness
Goodness
Faithfulness
Gentleness and
Self-control.
Galatians 5:22-23
Thursday, May 03, 2012
கிறிஸ்துவை கண்டு கொண்ட பிரபல பாடகர் அணில் கன்ட்
இன்று கிறிஸ்துவுக்காக எழுந்து பிரகாசிக்கும் பாஸ்டர் அணில் கண்ட் அவர்கள் அடிப்படையில் பஞ்சாப் மாநிலத்தில் ஒரு வைராக்கியமான இந்து குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். இந்து பாரம்பரியப்படியும் இந்து வேதங்கள் கற்றுக் கொடுக்கப்பட்டும் வளர்க்கப்பட்டவர். சிறு வயதிலேயே பிரபல இசைக்கலைஞராக உருவெடுத்து உலகின் பல்வேறு பகுதிகளிலும் கசல் (Ghazal) இசைக் கச்சேரிகள் நடத்தியவர் . எனினும் அவரின் ஆன்மீக தேடல்கள் நிற்கவில்லை. பல்வேறு கேள்விகளோடு அலைந்து கொண்டிருந்த அவருக்கு இயேசு கிறிஸ்துவானவர் பதிலாக வந்தார். அவரது அனைத்து விடை கிடைக்கா வினாக்களுக்கும் பதில் கிடைத்தது. சமாதானமும் சந்தோசமும் அவரை வந்தடைந்தது. இன்று குடும்பமாக கிறிஸ்துவின் புகழ் பாடி வருகிறார்கள். வட இந்திய கிறிஸ்தவ உலகில் இவர்கள் பாடல்கள் மிகவும் பிரபலம். நீங்களும் பார்த்து பகிர்ந்து மகிழ இங்கே சில, தேவனை துதிபாடும் இந்தி பாடல்கள்.
பாஸ்டர் அனில்கந்த் அவர்களின் சாட்சியை படிக்க
http://www.anilkant.org/anilkant-testimony.html
Bro.AnilKant Testimony in English
Bro.Anil Kant Testimony in Hindi
Hindi songs by Anil Kant,wife Reena Kant and daughter Shreya Kant
Pray For India
Sing unto the Lord
Ibadat karo
Meri Rooh
சங்கீதம் 13:6 கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.
சங்கீதம் 89:1 கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்.
பாஸ்டர் அனில்கந்த் அவர்களின் சாட்சியை படிக்க
http://www.anilkant.org/anilkant-testimony.html
Bro.AnilKant Testimony in English
Bro.Anil Kant Testimony in Hindi
Hindi songs by Anil Kant,wife Reena Kant and daughter Shreya Kant
Pray For India
Sing unto the Lord
Ibadat karo
Meri Rooh
சங்கீதம் 13:6 கர்த்தர் எனக்கு நன்மை செய்தபடியால் அவரைப் பாடுவேன்.
சங்கீதம் 89:1 கர்த்தரின் கிருபைகளை என்றென்றைக்கும் பாடுவேன்.
Tuesday, May 01, 2012
வேதாகம இரண்டு சாட்சிகளுக்காக மில்லியன் டாலர் வீடு ரெடி

இப்போது அந்த இரண்டு சாட்சிகளுக்காக வீடு வாங்கும் / கட்டும் பணியில் நம் ஊர் ஊழியக்காரர்கள் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்கள். இதற்காக ஆகும் செலவு 1.3 மில்லியன் டாலர்கள் எனவும் அதில் ஏற்கனவே 900,000 டாலர்கள் திரட்டப்பட்டுவிட்டது என்ற மகிழ்சியான செய்தியையும் ஏஞ்சல் டிவி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வீட்டிலிருந்து தான் அந்த இரண்டு இரத்த சாட்சிகளும் வெற்றிகரமாக இயங்குவார்களாம். வானலோக சேனைகள் இங்கே தான் முகாமிட்டு பரத்துக்கு ஏறுவதும் இறங்குவதுமாக இருப்பார்கள் என்கிறது அந்த செய்தி குறிப்பு.”This will be their Command Center to coordinate their worldwide prophetic ministry. This House will also function as a gateway to the heavenly realm, a supernatural portal not opened to mortals but used by heavenly beings who will be ascending and descending through it with scrolls from the Council of the Prophets in heaven.” இன்னும் 400,000 டாலர்கள் தேவையிருக்க நாமும் நம் பணங்களை இந்த வீடு வாங்க கொடுத்து அதன் மூலம் கடவுளின் சுதந்திரவாளியாக மாற இது ஒரு அபூர்வமான வாய்ப்பு என்கிறது ஏஞ்சல் டிவி.
இந்த இரண்டு இரத்த சாட்சிகளும் குழந்தைகளாக பிறந்து வளர்ந்து இயேசு நாதரைப் போலவே வேதத்தை கற்று ஞானத்திலும் புத்தியிலும் தேவ கிருபையிலும் மனுஷர் தயவிலும் அதிகம் அதிகமாக விருத்தியாகி வளர்ந்து வந்தால் அவர்களே அவர்கள் தேவைகளை தேவனிடமிருந்து கேட்டு பெற்றுக்கொள்வார்களாக இருக்கலாம். அதன் மூலமாக வெளிப்படுத்தின விசேச தேவ வாக்கியங்கள் நிறைவேறும். ஒருவேளை வானத்திலிருந்து திடீரென இளைஞர்களாகவே இவர்கள் குதித்து வந்தால் இந்த வீடு கண்டிப்பாக தேவைப்படும். ஆனால் துரதிஷ்ட வசமாக இந்த வீடு பற்றிய செய்தி நமது பைபிளில் இல்லை. ஒரு வேளை தள்ளுபடியாகமங்களில் இருக்கலாம் அல்லது இது ”அவர்கள் தேவனின்“ ஒரு திடீர் திட்டமாக இருக்கலாம்.
இயேசு கிறிஸ்துவானவர் பூமிக்கு வருமுன் வழியை ஆயத்தம் பண்ண வந்த தீர்க்கதரிசியான யோவான் ஸ்நாபகனும் இதே அட்டகாசமான பணியை செய்திருந்தால் மாட்டுக்கொட்டிலில் இயேசு பிறந்திருக்க வேண்டிய அவசியம் வந்திருக்காது. அதுமட்டுமல்லாமல் இயேசு கிறிஸ்துவின் இரகசிய வருகைக்குப் பிறகும் இயங்கும் ஒரே கிறிஸ்தவ டிவி சேனல் ஏஞ்சல் டிவியாக இருப்பதால் இவர்கள் இருவரின் உடல்கள் தெருவில் கிடக்கும் போது அதை உலகமெல்லாம் ஒளிபரப்ப வசதியாக ஏஞ்சல் டிவியானது எருசலேமில் சேட்டலைட் வசதிகளை கொண்டிருக்க வேண்டியதும் அவசியமாகிறது. ”இப்பொழுது நான் உங்களுக்குச் சொல்லுகிறதென்னவென்றால், இந்த மனுஷருக்கு ஒன்றுஞ்செய்யாமல் இவர்களை விட்டுவிடுங்கள் இந்த யோசனையும் இந்தக் கிரியையும் மனுஷரால் உண்டாயிருந்ததானால் அழிந்துபோம்: தேவனால் உண்டாயிருந்ததேயானால், அதை ஒழித்துவிட உங்களால் கூடாது; தேவனோடே போர்செய்கிறவர்களாய்க் காணப்படாதபடிக்குப் பாருங்கள்” அப்போஸ்தலர் 5:38,39
ஏஞ்சல் டிவியின் House Of The Prophets(Two Witnesses),Jerusalem திட்டம் பற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.jesusministries.org/Newsletter%202012%20English%20(web).pdf
மத்தேயு 24:4 ஒருவனும் உங்களை வஞ்சியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்.