Tuesday, February 12, 2008
பி.வி.நரசிம்மராவின் தாகம்
டிசம்பர் 28 1992-ல் இந்தியாவின் தென்கோடியிலுள்ள கன்னியாகுமரியில் ஒரு விவேகானந்தர் விழாவில் முன்னாள் பிரதமர் பி.வி.நரசிம்மராவ் அவர்கள் (P.V.Narasimha Rao) இவ்வாறாக மனம் உருகி பேசினார்.
"பாலைவனத்திலுள்ள நான் இந்தியாவில் தண்ணீரை தேடியலைந்தேன்.தாகமாய் பார்த்தேன்.எனக்கு கிடைத்ததெல்லாம் கானல் நீர் தான்.ஏமாற்றத்துடன் தான் இப்போதும் இருக்கிறேன்.நான் அத்தண்ணீரை பெற இந்த உலகின் எந்த பகுதிக்கும் செல்ல தயார்."
-தினமலர் 29:12:1992
"இங்கு கிடைத்தது கானல் நீர் தான்"-ராவ் உருக்கம் என தலைப்பு செய்தியாகவே நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன.
யோவான்:4: 13,14 -ல் இயேசு கிறிஸ்து இவ்வாறாக சொல்கிறார்."இந்தத் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கு மறுபடியும் தாகமுண்டாகும்.நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது; நான் அவனுக்குக் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளே நித்தியஜீவகாலமாய் ஊறுகிற நீரூற்றாயிருக்கும்"
நண்பரே! உன் ஆத்துமாவில் தாகமாயிருக்கிறாயா? தாகம் தீர்க்கும் ஜீவத் தண்ணீரை இயேசு உனக்கு தருகிறேன் என்கிறார்.
amen
ReplyDelete